கல்யாணமாம் கல்யாணமாம்.
===========================================ருத்ரா
பட்டர்களே!
பக்தர்கள் எங்கே?
கோவில் பக்தர்களுக்கா?
இல்லை பட்டர்களுக்கா?
நீங்கள் பூச்சுற்றிய
தாலியை எங்கோ காட்டி
யாருக்கோ காட்டி
அசைத்து அசைத்து
மந்திரங்கள் சொன்னது போதும்?
எங்கே என் மக்கள்?
திருக்கல்யாணம் என்று
எலும்புக்கூட்டு டிவி ஊடகங்களுக்கு
போக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
டும் டும் என்று
தவில்கள் கிழிய..
எனக்கும் கூட விளங்காத
என்னாலும் கூட விரும்பப்படாத
அந்த மந்திரங்களைச்சொல்லி
என் காதுகளில்
ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியது போதும்!
"தென்னாடுடைய சிவனே போற்றி"
அந்த இன்குரல்
எங்கிருந்தோ கேட்கிறதே!
தமிழன் நா வல்லவன் ஆகியதை
"நாவலந்தீவில்"
வாழ்ந்தவர்கள் என
குறுக்கி மடக்கி
மடை மாற்றம் செய்தோரே!
கடவுள் இருக்கிறான்
என்ற ஞானத்தின் பொருளே
கடவுள் இல்லை
என்பது தானே.
மக்கள் தானே நான் என்று
பிட்டுக்கு மண் சுமந்து
பிரம்படி பட்ட வலி
உனக்கு உறைக்கவில்லையோ?
உனக்கு ஓர்மை இல்லையோ?
பொம்மைக்கல்யாணம் போதும்.
பொதுமை நீதியும் அறமும்
புரிந்து கொள்! தெளிந்து கொள்!
சும்மா சும்மா
அந்த தாலியை
என் முன் ஆட்டாதே!
மக்கள் இல்லா வெறுங்கோயில்
வெறும்
மொட்டை வெளியே
அறிந்திடு நீ!
மனித அறம் வளர்த்திடு நீ!
.............
கெக்கே பிக்க்கே என்று
கை கொட்டிச் சிரித்த ஒலிகள்
அங்கே கேட்டன.
அவை "கொரோனா"க்களின்
கூச்சல்.
===============================================
===========================================ருத்ரா
பட்டர்களே!
பக்தர்கள் எங்கே?
கோவில் பக்தர்களுக்கா?
இல்லை பட்டர்களுக்கா?
நீங்கள் பூச்சுற்றிய
தாலியை எங்கோ காட்டி
யாருக்கோ காட்டி
அசைத்து அசைத்து
மந்திரங்கள் சொன்னது போதும்?
எங்கே என் மக்கள்?
திருக்கல்யாணம் என்று
எலும்புக்கூட்டு டிவி ஊடகங்களுக்கு
போக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
டும் டும் என்று
தவில்கள் கிழிய..
எனக்கும் கூட விளங்காத
என்னாலும் கூட விரும்பப்படாத
அந்த மந்திரங்களைச்சொல்லி
என் காதுகளில்
ஈயத்தைக்காய்ச்சி ஊற்றியது போதும்!
"தென்னாடுடைய சிவனே போற்றி"
அந்த இன்குரல்
எங்கிருந்தோ கேட்கிறதே!
தமிழன் நா வல்லவன் ஆகியதை
"நாவலந்தீவில்"
வாழ்ந்தவர்கள் என
குறுக்கி மடக்கி
மடை மாற்றம் செய்தோரே!
கடவுள் இருக்கிறான்
என்ற ஞானத்தின் பொருளே
கடவுள் இல்லை
என்பது தானே.
மக்கள் தானே நான் என்று
பிட்டுக்கு மண் சுமந்து
பிரம்படி பட்ட வலி
உனக்கு உறைக்கவில்லையோ?
உனக்கு ஓர்மை இல்லையோ?
பொம்மைக்கல்யாணம் போதும்.
பொதுமை நீதியும் அறமும்
புரிந்து கொள்! தெளிந்து கொள்!
சும்மா சும்மா
அந்த தாலியை
என் முன் ஆட்டாதே!
மக்கள் இல்லா வெறுங்கோயில்
வெறும்
மொட்டை வெளியே
அறிந்திடு நீ!
மனித அறம் வளர்த்திடு நீ!
.............
கெக்கே பிக்க்கே என்று
கை கொட்டிச் சிரித்த ஒலிகள்
அங்கே கேட்டன.
அவை "கொரோனா"க்களின்
கூச்சல்.
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக