தினமும் வழக்கமாக
உதிக்கும் சூரியனை
மனத்தின் புத்தகப்பக்கங்களில்
மயில் பீலியாக செருகி
அது
குட்டி போடும் என்று
விளையாடுவது நம்பிக்கை அல்ல.
விடு.
சூரியனாவது ஒன்றாவது.
உதிர்ந்து விடும் அந்த
மயிர்க்கீற்றைப் பற்றி
என்ன கவலை?
நான் என் தலையில்
முளைக்கச்செய்யும்
ஒவ்வொரு விடியலும்
அறிவின் வெளிச்சம்.
சூரியன்களே காலில் விழுந்து
சூரிய நமஸ்காரம் செய்யும்
அறிவின் பிரளயமே அது..
ஆம்! என் நம்பிக்கை.
______________________ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக