நற்றிணை - 86. பாலை
அறவர், வாழி- தோழி! மறவர் வேல் என விரிந்த கதுப்பின் தோல பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக் கை வல் வினைவன் தையுபு சொரிந்த | 5 |
சுரிதக உருவின ஆகிப் பெரிய கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை நல் தளிர் நயவர நுடங்கும் முற்றா வேனில் முன்னி வந்தோரே! |
தோழீ, வீரர் கையிலுள்ள வேற்படைபோல விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய சிவதை வெள்ளி வட்டிலைப் போல மலரா நிற்கும் கடிய முன்பனியையுடைய அற்சிரக்காலத்து; நாம் நடுங்குமாறு பிரிந்து பின்பு; அழகு பொருந்தக் கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக்கற்களை இட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதக மென்னும் அணிபோன்ற வடிவினவாகி; பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலர; ஈங்கையின் நல்ல தளிர்கள் கண்டார்க்கு விருப்பம் வருமாறு நுடங்கா நிற்கும் முதிராத இளவேனிற் காலத்து; இன்று நம்மைக் கருதி வந்தாராகலின் நம் தலைவர் அறநெறி தவறுநரல்லர் காண்; அவர் நெடுங்காலம் வாழ்வாராக !;
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. - நக்கீரர்
பாண்டில் ஒப்ப பகன்றை மலர
------------------------------------------------ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் ..25)
பாண்டில் ஒப்ப பகன்றை மலர
விரி பூ வான் பூ ஓர் சொல் உதிர்க்கும்.
அரவு அன்ன வீக்கொடி படர
முன்றில் ஆடு மைச்சிறை காக்கை
கரையும் பொழுதில் என் நெஞ்சு கிழிய
உமணர் மறுத்த சாகாட்டுப்பகடு
தும்பி தொடர நோன்றல் உகள
நெடிய கிடந்தாங்கு நீள் விழி புதைய
பிரிந்தனை என்னை எற்றுக்கு மன்னே ?
----------------------------------------------------------------
பாண்டில் ஒப்ப பகன்றை மலர
------------------------------------------------ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் ..25)
பாண்டில் ஒப்ப பகன்றை மலர
விரி பூ வான் பூ ஓர் சொல் உதிர்க்கும்.
அரவு அன்ன வீக்கொடி படர
முன்றில் ஆடு மைச்சிறை காக்கை
கரையும் பொழுதில் என் நெஞ்சு கிழிய
உமணர் மறுத்த சாகாட்டுப்பகடு
தும்பி தொடர நோன்றல் உகள
நெடிய கிடந்தாங்கு நீள் விழி புதைய
பிரிந்தனை என்னை எற்றுக்கு மன்னே ?
----------------------------------------------------------------
=====================================ருத்ரா
யாஅ மரத்தன்ன இலைதொறும்
கதிரொளி பூசி மின்னிய வானம்
மருட்கும் நின் அம்பசலை கண்டுழி
தாய் உள் உள் வெட்கும் குறுகும்.
குடுமி மலையன் செவி போழ்ந்திடு
காலம் காட்டும் முன் விரைந்து.
========================================
இதற்கு "யாஅ மரம்" பற்றிய குறிப்பிற்கு "கல்லாடனார்"பாடிய அகநானூற்றுப்பாடல் 333
குறுநானூறு (6)
======================================ருத்ரா
விழி நோக்கி விழி அகலுங்கால்
அவள் மான் விழி மைவான் பரவி
வயின் வயின் இமைப்ப ஆறு இடறி
அவல் படுத்து எழுந்து அவன்
மாணடி சிலைக்கும் வாணுதல் குறிக்கும்.
===========================================
அகம் 144. (முல்லை)
புலவர் : மதுரை அளக்கர் ஞாழலார் மகனார்
குறுநானூறு (7)
==============================
சேம்பு இலை சுளகாய் அவள் கைஎறி
பூங்கரும்பு உலக்கை விசும்புடன் மூட்டி
இடை இடை இடை இல மாயம் செய்து
இடித்து உவக்கும் இன்பம் கண்டான்
மன்று மறந்தான்.மணி முடி மறந்தான்
அவள் அசைதரு நீழல் நீடு இனிதிருந்தான்.
=================================
அகம்.286 ஓரம்போகியார்.(மருதம்)
குறுநானூறு (8)
============================
மீன்சினை அன்ன வெண்மணல் குவைய
ஞாழல் உறங்கும் தண்துறை நாடன்
வரும் நிமித்தம் வழி வழி நோக்கி
கழங்கு அடுக்கி கண் ஓர்க்கும்மே
மென்மயிர் சிலிர்க்க இறை வளை திருத்தி.
================================
அகம் 286. ஓரம் போகியார்.
குறுநானூறு (9)
=======================================
வள் உயிர் வணர் மருப்பு
வயங்கொலிப் பாலை பண்ணிய
தீங்குரல் என்னுள் இன் தீ பூப்ப
அவன் குரல் ஆங்கு ஆவி இழைப்ப
வெள்ளி கிழித்து நெடுவான் கீறும்.
===========================================
அகம் 115..மாமூலனார். (பாலை.)
குறுநானூறு (10)
=========================
ஒள்ளிய குடுமி வண்ணம் அசைப்ப
வெள்ளிய மின்னல் இடி உண் மஞ்ஞை
கலவம் பரப்பி களித்தது போன்ம்
கதுப்பு அலையெறி விசும்பும் களிகூர்
உள்ளத்தன்னாள் உள்ளிய வெற்பன்
கறங்கு பறையும் ஒளித்தே ஒலிக்கும்.
============================================
அகம் 194 இடைக்காடனார். (முல்லை)
பாடியவர்: பெயர் புலனாகவில்லை
திணை: தும்பை
துறை : களிற்றுடனிலை
திணை: தும்பை
துறை : களிற்றுடனிலை
____________________________________________________
_புதிய பாடல்களுக்கு குறிப்புகள்.
_______________________ ______ _________ 09.05.2020
தும்பி சேர் கீரனார் பாடியது.."சுளகிற் சீறிடம்")
வரி:"நீறாடு சுளகின் சீறிடம் நோக்கி"
தலைவன் இறந்து பட்டனன்.தலைவி கைமைக்கோலம்
புகும் கொடிய துன்பத்தில் இருக்கிறாள்.
எனது பாடல்
"எரிப்பூப் பழனம் நெரித்து..
--------------------------------------------------ருத்ரா
கடமா மிதிபட்டன்ன எரிப்பூப் பழனம் நெரித்து
அரியல் ஆற்றும் வலைஞர் கண்ணே போல்
என் இறை வளை இறுக்கி திண்ணிதின் திண்ணிய
என் இஞ்சியும் தகர்த்தாய் நின் மின்னகையால்.
அன்பே ஈண்டு எஃகின் இலை எனின்
அன்பே ஈண்டு வேல் படை வீழ்த்தும்
மெழுகு ஆப்பிய சுளகின் சீறிடம்
_______________________________________________________
(புறம் அதே 249 ஆம் பாடல்)
----------------------------------------------------------------------------- புறம் 250. "தாமங்கண்ணியார் பாடியது"
வரி : "புல் என்றனையால்__வளங்கெழு திருநகர்"
எனது பாடல்
_____________
ஆரல் வாய் மொழி அலைகிளர்ந்தன்ன
அவன் ஈண்டு வருங்கொல் ஆலலும் ஆலின
அழல் இணர் குழாஅத்த அல்லியும் அவிழ்ந்தன.
புல் என்றனை புயல் பட்டு புயல் நீங்கு ஊரே!
____________________________
பாடியவர்: தும்பி சொகினனார்;தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்.
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).
கதிர் போலும் மூக்கினை உடைய ஆரல்மீன் சேற்றில் பிறழும்போது பருத்து வளைந்திருக்கும் வாளைமீன் நீரின்மேல் மிதந்து வரும்போது பூத்திருக்கும் பழமையான வயலில் நெரித்துப் பிடித்து அத்துடன் அரி ஓசை செய்யும் தடாரி போல் இருக்கும் ஆமை வெளிப்படுகையில் பனை நுங்கு போல் நிறம் கொண்ட சினை முதிர்ந்திருக்கும் வரால் ஊடோடுகையில் வேல் போல் புறழும் கயல் மீனைப் பிடித்து, அனைத்தையும் பிடித்து. வலைஞர் வழங்கத், தன் அண்ணலோடு (தலைவனோடு) பலரும் கூடிப் பகல்பொழுதெல்லாம் உண்டபோது தானும் கூடி உண்டாள். இன்று, கணவன் வாழும் காலத்தில் துலங்கிக் கிடந்த கற்பு அவன் மாண்டுபோன பின்னர் தன்னுள் அடங்கிக் கிடப்ப, ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது. (மெழுகிய அந்தத் தரையில் இட்டுத்தான் இன்று உணவு உண்ணப்போகிறாள்).
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, 'தாமே யேங்கிய தாங்கரும் பையுள்' என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).
கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக், கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர் அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச், பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு, | 5 |
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும், அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி, ஒருவழிப் பட்டன்று ; மன்னே! இன்றே அடங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை, | 10 |
உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரி நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள், மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே. |
_____________________________________________________________
செம்மண் நிலப் பள்ளத்தில் தோண்டிய கூவல் கிணற்றுச் செந்நிற நீரின் தெளிவு பருகுவதற்காக என் சிற்றில்லில் உள்ளது. முற்றத்தில் கடுப்பேற்றும் கஃடு என்னும் கள் அகன்ற வாயை உடைய சாடியில் உள்ளது. கொஞ்சமாக இருந்தாலும் அது தூய்மையானது. படல் கட்டிய முற்றம். அங்குச் சிறுதானியமான தினையைக் காயவைத்தேன். அதனைப் புறா, இதல் ஆகிய பறவைகள் முற்றிலுமாகத் தின்றுவிட்டன. பொழுதும் போய்விட்டது. அதனால் உங்களுக்கு முயல் சுட்ட கறியேனும் தருகிறேன். என் வீட்டுக்குள் புகுந்து, உண்டு, தங்குங்கள். முதுவாய்ப் பாணன் என்பவன் பாட்டுப் பாடும் பாணன். அவன் மனைவி பாடினி. (பாணிச்சி என்றும் கூறுவர்). என்னுடைய சிறுவர்கள் தலையை ஆட்டும் ஆமான் குட்டிகளைப் பிடித்துவந்து கன்றுகளை ஏரில் பூட்டுவது போல விளையாடுகின்றனர். என் கணவன் சீறூர் மன்னன் வேந்தன் ஆணைப்படி அவன் தொழிலைச் செய்ய நேற்றுச் சென்றான். நாளை திரும்புவான். வந்ததும் உன் பாடினி தலையில் பொன்னாலான தாமரையை உன்னைப் பெருமைப்படுத்தும் வகையில் சூட்டிவிடுவான். இன்று எம் இல்லத்தில் தங்குங்கள் – என்றாள் அந்த வல்லாண்குடிப் பெண். (புறம்..319)
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
திணை: வாகை..துறை:வல்லாண் முல்லை.
அழகிய சிறகுகளையுடைய தும்பியே ஒன்று கூறுவன் கேட்பாயாக நல்ல மொழிகளை ஒருவர்பால்கூறுந்திறத்தில் அச்சம் இல்லை அத்தலைவருடய நாட்டிலுள்ள தலமையையுடைய உயர்ந்த மலைக்குச் செல்வாயாயின் அரசர்களது வரிசையாகச் செல்லுதலையுடைய நுண்ணிய கேடகங்களைப் போல தேனடைகள் தொங்குகின்ற மலையையுடைய தலைவரிடத்தில் கடமை மான்கள் நெருங்கிய தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையிடத்தே களைக்கொட்டை எறிவதனால்உண்டாகிய நுண்ணிய புழுதியையுடைய களையெடுப்பாருடைய தங்கையாகிய தலைவி தன் சுற்றத்தாரிடத்தினின்றும் நீங்காளாயினாள்; என்றுகூறுவாயாக.
முடிபு: தும்பி, அச்சம் இல்லை; சேறியாயின் மலைகிழவோர்க்கு, களைஞர் தங்கை தீராளென்மோ.
கருத்து: வண்டே, தலைவியினுடைய நிலையை நீ போய்த் தலைவனுக்குச் சொல்லுவாயாக.
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
திணை: வாகை
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
பூவற் படுவிற் கூவல் தோண்டிய செங்கண் சின்னீர் பெய்த சீறில் முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி, யாம் கடு உண்டென, வறிது மாசின்று; படலை முன்றிற் சிறுதினை உணங்கல் | 5 |
புறவும் இதலும் அறவும் உண்கெனப் பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால், முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண! கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி | 10 |
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும் சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர், வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் பாடினி மாலை யணிய, வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. | 15 |
(தலைவன் வரைவு நீட்டித்தானாக அவன் சிறைப்புறத்தே நிற்குங்கால் தோழி வண்டினை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவி இன்னும் தன்வீட்டிலேயே உறைகின்றாளென்று சொல்வாயாக” என்றது).
அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட் டண்ணல் நெடுவரைச் சேறி யாயிற் கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத் துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை | 5 |
தமரின் தீராள் என்மோ அரசர் நிரைசெல னுண்டோல் போலப் பிரசந் தூங்கு மலைகிழ வோர்க்கே. | |
- தும்பிசேர் கீரனார். |
முடிபு: தும்பி, அச்சம் இல்லை; சேறியாயின் மலைகிழவோர்க்கு, களைஞர் தங்கை தீராளென்மோ.
கருத்து: வண்டே, தலைவியினுடைய நிலையை நீ போய்த் தலைவனுக்குச் சொல்லுவாயாக.
புறம் 319
பாடியவர்: தாயங் கண்ணியார்
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
கண்ணீரோடு வந்தவர்கெல்லாம் தாளித்த துவையலோடு உணவு படைத்து அவர்களின் கண்ணீரைத் துடைத்த புரவலன் ஒருவன் இருந்துகொண்டிருந்த பந்தலைக் கொண்டிருந்தது. அந்தப் புரவலனின் தலை, தனித்தலை, சிறப்பால் தனிமை பெற்று விளங்கிய தலை, இன்று பெருங்காடு சென்றுவிட்டது. அதனால், அந்த வளங்கெழு திருநகர் இன்று அந்தப் பந்தலில் அவனது புதல்வன், முனித்தலைப் புதல்வன், (தந்தை இல்லாமையால் தந்தை வரவேண்டும் என்று) அடம் பிடிக்கும் புதல்வன், முனிவு கொண்டிருக்கும் புதல்வன், வான்சோறாகிய தண்ணீரைப் பருகிவிட்டு, தாயிடம் தீம்பால் வேண்டுமென்று அழுகிறான். தாயோ தன் கூந்தல் கொய்யப்பட்ட நிலையில் அல்லி இலையில் போட்டு சிறதளவு உணவை உண்டுகொண்டிருக்கிறாள். (அந்த முனித்தலைப் புதல்வனுக்குத் தாய்ப்பால் ஊறுமா?)
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர் கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க், கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி, அல்லி உணவின் மனைவியொடு, இனியே | 5 |
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்! வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே. |
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ? குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்; வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்; வேனல் வரி அணில் வாலத்து அன்ன; கான ஊகின் கழன்றுகு முதுவீ | 5 |
அரியல் வான்குழல் சுரியல் தங்க, நீரும் புல்லும் ஈயாது உமணர் யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த வாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர் பேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு, | 10 |
வெஞ்சின யானை வேந்தனும், இக்களத்து எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப், பண் கொளற்கு அருமை நோக்கி, நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே. |
பாடியவர்: பெயர் புலனாகவில்லை
திணை: தும்பை
துறை : களிற்றுடனிலை
========================================================
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி (புறம் 132)
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
ஆய் அண்டிரனை புறநானூற்றுப்பாடல் 132ல்
வட புல மன்னர்களுக்கும் ஒப்பாக பாடியிருக்கிறார்.
அப்பாடலில் "நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி"
என்னும் வரி மிகவும் எழில் நுட்பம் செறிந்த தாகும்.
வடதிசை இமயம் மிகவும் உயர்ந்து தென் திசை தாழ்ந்து
நெடிய இந்நிலம் பிறழ்வது எனும் பேரிடர் நிகழாது
தடுத்தவன் ஆய் அண்டிரன் என்னும் தமிழ் மன்னனே
என்கிறார் புலவர்.அப்படியெனில் இவன் கொடையில்
படையில் எல்லாம் சிறந்தவனாக வடபுலத்தையே
நம் மண்ணுக்கு சமப்படுத்தியவன் அல்லவா என்று வியக்கிறார்.
நில இயல் அடிப்படையில் தென் மண்டலம் கடலில் மூழ்கி
வடபுலம் உயர்ந்திருக்க வேண்டும்.ஆம் அப்படி ஒரு பிரழ்மம்
(பிரளயம்) ஏற்படாதவாறு தடுத்தது ஆய் அண்டிரன் என்று
உயர்வு நாவிற்சியாகப்பாடுகிறார் .
"முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேனே " என்று
இவன் புகழை இது வரை யான் அறியாது பாழ்பட்டேன்
எனும் நெஞ்சம் நைகிறார்.கடல் கோள் ஏற்படுத்தும்
ஊழிப்பேரலைகள் தலை காட்டி தலை காட்டி
சென்றிருக்கும் பின்னணியில் அதை உட்குறிப்பாக்கி
அப்பாடலை எழுதியிருப்பார் என எண்ணுகிறேன்.
தலைவி தலைவனைப்பிரிந்து ஒரு கணம் கூட
வாழ இயலாத நிலையை விவரிக்கும் இச்சங்க
நடைப்பாடலை எழுதியுள்ளேன்.
=======================================ருத்ரா
திணை: தும்பை
துறை : களிற்றுடனிலை
========================================================
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி (புறம் 132)
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
ஆய் அண்டிரனை புறநானூற்றுப்பாடல் 132ல்
வட புல மன்னர்களுக்கும் ஒப்பாக பாடியிருக்கிறார்.
அப்பாடலில் "நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி"
என்னும் வரி மிகவும் எழில் நுட்பம் செறிந்த தாகும்.
வடதிசை இமயம் மிகவும் உயர்ந்து தென் திசை தாழ்ந்து
நெடிய இந்நிலம் பிறழ்வது எனும் பேரிடர் நிகழாது
தடுத்தவன் ஆய் அண்டிரன் என்னும் தமிழ் மன்னனே
என்கிறார் புலவர்.அப்படியெனில் இவன் கொடையில்
படையில் எல்லாம் சிறந்தவனாக வடபுலத்தையே
நம் மண்ணுக்கு சமப்படுத்தியவன் அல்லவா என்று வியக்கிறார்.
நில இயல் அடிப்படையில் தென் மண்டலம் கடலில் மூழ்கி
வடபுலம் உயர்ந்திருக்க வேண்டும்.ஆம் அப்படி ஒரு பிரழ்மம்
(பிரளயம்) ஏற்படாதவாறு தடுத்தது ஆய் அண்டிரன் என்று
உயர்வு நாவிற்சியாகப்பாடுகிறார் .
"முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேனே " என்று
இவன் புகழை இது வரை யான் அறியாது பாழ்பட்டேன்
எனும் நெஞ்சம் நைகிறார்.கடல் கோள் ஏற்படுத்தும்
ஊழிப்பேரலைகள் தலை காட்டி தலை காட்டி
சென்றிருக்கும் பின்னணியில் அதை உட்குறிப்பாக்கி
அப்பாடலை எழுதியிருப்பார் என எண்ணுகிறேன்.
தலைவி தலைவனைப்பிரிந்து ஒரு கணம் கூட
வாழ இயலாத நிலையை விவரிக்கும் இச்சங்க
நடைப்பாடலை எழுதியுள்ளேன்.
=======================================ருத்ரா
கடி மரம் தடிதல் ஓம்பு..(புறம் 57)
இதில் தடிதல் எனும் வினைச்சொல் எதிர்ச்சொல் ஆகும்.காவல் மரத்தை வெட்டாதிருத்தல் என்று பொருளாகும்.
சான்று கீழ்க்கண்ட குறளில் முதலில் வரும் "எனல்" ஒரு எதிர்ச்சொல் ஆகும்.
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:196)
இதில் தடிதல் எனும் வினைச்சொல் எதிர்ச்சொல் ஆகும்.காவல் மரத்தை வெட்டாதிருத்தல் என்று பொருளாகும்.
சான்று கீழ்க்கண்ட குறளில் முதலில் வரும் "எனல்" ஒரு எதிர்ச்சொல் ஆகும்.
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.
(அதிகாரம்:பயனில சொல்லாமை குறள் எண்:196)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 305 | 306 | 307 | 308 | 309 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
புறநானூற்றுப்பாடல் எண் :307
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக