சனி, 2 மே, 2020

வேனல் வரி அணில் வாலத்து அன்ன;

வேனல் வரி அணில் வாலத்து அன்ன;
==========================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள்.. 22)



சூறை வளி இறை கொய் சுவல் அலரி
குடுமிக்கண்ணி அணித்தானாக 
அகல் நெடுந்தெரு ஆர்கலி நடையில்
வேனல் வரி அணில் வாலத்து அன்ன‌
பொலிய சூடி யாது ஈண்டு வரும் என‌
வினவுஎறிவாய் தோழி அவன் மீது 
கல்லென்று ஒலிக்கணை நீள ஓச்சி.
கழன்றுகு முதுவீ ஏய்ப்ப ஊழி கடத்தி
உதிர்தரு கான்போல் காதல் வற்றிய‌
கொடுங்கோல் மனத்து எவன் இவண் வந்தது?


==================================================

புறநானூற்றுப் பாடல் 307ல் வரும் ஒரு எழில் மிக்க‌
வரியை தலைப்பாக்கி இந்த சங்கநடைக்கவிதையை
எழுதியுள்ளேன்.பாடல் எழுதிய புலவர் யாரெனத்
தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்கள்.அந்த‌
முகம் தெரியா கவிஞனின் அகம் முழுதும் அடைந்து
கிடந்தது தமிழ் வீரமும் அழகும் தான்.அந்தப்பாடல்
ஒப்புவமை இல்லாத சிறந்ததோர் பாடல் ஆகும்.

=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக