வியாழன், 31 அக்டோபர், 2019

வெள் நள் ஆறு

வெள் நள் ஆறு


இரவு நடு நிசியில் நாய்கள் குரைக்கும் "வெறுமையான நடு இரவின் ஒரு நீண்ட வழியில்"கேட்கும் ஒலிக்கூட்டத்தினால் தூக்கம் வராமல்  பிரிவுத்துயர் தீயில் புரளும் காதலியின் உள்ளம் படும் பாடு இது.தோழியின் மொழியில் அமைதிருப்பது. பொருள்வயின் பிரிந்த காதலன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தோழி அவள் படும் துன்பத்தை விரித்து உரைக்கின்றாள் அவனிடம். சங்க நடையில் 23.11.2014 அன்று நான் எழுதிய‌  செய்யுட் கவிதை இது.

வெள் நள் ஆறு
======================================ருத்ரா இ.பரமசிவன்


ஞெமலி மகிழ்தரு வெள் நள் ஆறு
நீள ஒலிக்கும் புன்மைசெறி கங்குல்
அல்கு பொலம்வரி அணியிழை நெகிழ‌
மைபொதி விசும்பு விரியுளை அன்ன‌
மஞ்சுபரி ஏகும் உருகெழு வல்மா
நோதல் கதழ்த்து நெஞ்சகம் சிதைக்கும்.
ஓமை ஒளித்து பார்ப்புகள் கூட்டும்
வரிமணல் கீற வடியிலை எஃகம்
பசும்புண் பிளப்ப வெஞ்சமர்  கூர‌
அலமரல் ஆற்றா அளியள் ஆகி
கம்பலை உற்று கண்மழைப் படூஉம்
மடமும் பயிர்ப்பும் உடைபடுத்தாங்கு
ஊழி பெயர்த்த பெருங்கல் கொல்லோ
பொடிபட வீழ்க்கும் சேக்கை கண்ணே.
பொருள் மறை செய்து பொருள் நசைபெருக்கி
பொரியும் தீச்சுரம் உள் உள் கடாஅய்
யாது ஆற்றினை?அழியுமென் அணிநிறை.
அரவு வாய்ப்படு மென்சிறை அம்புள்
ஆகுவள் அறிதி.வீடத்தருதி.
மலைபடு ஊர! மல்லல் சீர்த்து.

===============================================

புதன், 30 அக்டோபர், 2019

ஒரு அஞ்சலி

ஒரு அஞ்சலி
=========================================ருத்ரா

அஞ்சலி என்று சில சொற்களில்
கண்ணீர் பிழிந்து விடுவதால்
என்ன பயன்?
படுகுழியில் விழுந்த சோகம்
அல்லவா அது.
எத்தனை முயற்சிகள்?
எல்லோரும் கூட்டமாய் திரண்டனர்.
டிவியின் சதுரக்கட்டங்களில்
நாலைந்து பேர் நாலந்து பேராய்
எத்தனை ஆவேசமாய்
சொற்களின் பரிமாற்றம்?
எல்லாம் ஏமாற்றம் தான்.
குழியில் விழுந்தது விழுந்தது தான்.
கணினிக்குழியில் விழுந்தது விழுந்தது தான்.
அது தான் முடிவு சொல்லிவிட்டார்களே.
என்னது கணினியா?
அது என்ன கணினிக்குழி?
சுஜித்துக்கும் இரங்கல் தான்.
நம் ஜனநாயகத்துக்கும் இரங்கல் தான்.
என்ன செய்வது?
என்ன அழுத்தினாலும்
அதுவே தான் வருமாம்.
பெருமையாய் கூட்டம் போட்டு
சொல்லிக்கொண்டார்கள்!
ஹேக்கர்ஸ் வெட்டிய ஆழ்துளைக்குழாய்
ஆழத்தில்
நம் ஜனநாயகம் புதைந்தே போனது.

செல்வன் சுஜித்துக்கு இது விபத்து.
நம் ஜனநாயகத்துக்கு இது விபரீதம்.
மக்கள் அறிவதே இல்லை.
ஒவ்வொரு தடவையும் அவர்கள்
வெட்டும் குழி
அவர்களுக்கே தான் என்று
அவர்கள் அறிவதே இல்லை.

=============================================

கோபி(த்த)நயினாரும் சினிமாவும்


கோபி(த்த)நயினாரும் சினிமாவும்
==================================================ருத்ரா

கோபி நயினார் அவர்களே
ஒரு காணொளியில் சினிமா மீது
உங்கள் சீற்றம் கேட்டேன்.
தீக்கு தெரிந்த நியாயம்
சாம்பல் மட்டுமே.
ஆம்.
இந்த அட்டை உலகங்கள்
அசல் உலகத்தின் மீது
நசுக்கிக்கொண்டு
உட்கார்ந்து இருக்கிறது.
சமுதாயம் தீப்பிடித்து எரியும்போது
அதில் சிகரெட் பற்றவைப்பவர்களே
இங்கு ஸ்டார்கள் மற்றும் சூப்பர்ஸ்டார்கள்.
போலித்தனத்தை உரிக்கிறேன்
என்று
சாதி மதங்களை
அறுவாள்கள் கொண்டு சீவினாலும்
ஏதோ நொங்கு சீவுவது போல்
நுரைக்கோட்டை கட்டுகிறார்கள்.
சாதியும் மதமும்
திமிங்கில முதுகாய் முட்டுக்கொடுக்க‌
அதை "லட்சியத்தீவு" போல்
செட்டிங்க் போடுவதே
சினிமாக்களின் சில்லுண்டித்தனம்.
சில நடிகர்கள்.
சில இயக்குனர்கள்.
சில பாடல் ஆசிரியர்கள்.
செவி நரம்புகள் அறுக்கும்
சில இசை அமைப்புகள்
இவற்றின் கூட்டணியே
நவீன சினிமா.
முதல் சில நாட்களில்
கோடிகளை குவிப்பது மட்டுமே
அந்த லட்சியம்.
வீரம் கொப்பளிக்கும்.
ஆயுதம் குண்டுகள் உமிழும்.
வில்லன்கள் நார் நாராய் கிழிபடுவர்.
தியேட்டர் விட்டு வெளியேறும்
ரசிகர்கள்
அந்த பாப்கார்ன் கொறிப்புகளோடு
அமைதி பெறுவர்.
அப்புறம் வழக்கம்போல்
சாதி மதச்சேற்றில் புரண்டு
கோவில் திருவிழாக்களை
வெறியோடு கொண்டாடி
டாஸ்மாக்கின் ஆகாசத்தில் மிதந்து
கிடப்பார்கள்.
தமிழா!
உன் வரலாறு எங்கே என்று கேட்டால்
அதோ அதற்கு பூஜை போடுகிறேன்.
அர்ச்சனை முடியட்டும்
பிரசாதம் வந்து விடும்
என்பான்.
இந்த தமிழர்கள்
இன்னும் இந்த சாக்கடையின்
கீழடியில் தான் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.
"அந்தக்கீழடியின்" தொன்மம் பற்றி
அவர்கள் அக்கறைப்படவில்லை.
அது பாரத நாகரிகத்தின் பாதாளத்துக்குள்
விழுந்துகொண்டிருப்பது பற்றி
எந்தக்கவலையும் இல்லை.
சினிமாக்களின்
குத்துப்பாட்டுகளின் குத்தாட்டங்களின்
கத்தியில்
இவர்கள் கொலையுண்டு கிடக்கிறார்கள்.
விடிவு எங்கே? எப்போது? எவரால்?
இந்தக்கேள்விப்பிரசவத்தில்
கன்னிக்குடம் உடைந்தும்
குவா குவா சத்தங்கள் கேட்கவே இல்லை.
சினிமா இருட்டின் சில்லறை வெளிச்சங்களே
இவர்களுக்கு விடியல்.
இவர்களோடு
இவர்கள் அணிந்த செகுவாரா டீ ஷர்ட்டுகளும்
அல்லவா
சினிமாவினால்
எச்சில் உமிழப்படுகின்றன.
இந்த முரண்கள் அழிக்கும்
முரசுகள் ஒலித்திடல் வேண்டும்!
கோபி நயினாரின் அக்கினி ஆற்றில்
அந்த‌
சனாதன முதலைகள் பொசுங்கிப்போகட்டும்.

======================================================



செவ்வாய், 29 அக்டோபர், 2019

மலர்மிசை ஏகினான்....

மலர்மிசை ஏகினான்....
=========================================ருத்ரா

மலர்மிசை..என்றால்
தாமரையில் அமர்ந்திருக்கும் பிரமனா?
அல்லது
அருகனா?
அல்லது
புத்தனா?
நம் இதயங்களில் நுழைந்தவன்
என்று தான்
வள்ளுவன் உட்பொருள்
பொதிந்து இருக்கிறான்.
மனிதர்களின் சமூகஉறவு
வெறும் வியாபாரமாய் இருந்தால்
பொற்காசுகளோடு
அது முடிந்து நின்றிருக்கும்.
ஒரு மனிதன்
அயல் மனிதனிடம்
அன்பு செலுத்தும் இடத்திலிருந்து தான்
உலகம்
ஒரு அர்த்தத்தோடு சுழல ஆரம்பித்திருக்கிறது.
அந்த மானுட அன்பு தான்
அந்த மனிதனை அல்லது
மனிதர்களை
காலம் கடந்த பின்பும்
ஒரு நாகரிக மலர்ச்சியோடு
தொடர்ந்து நகரச்செய்கிறது.
உரிமை கொண்டாடும் செல்வங்கள்
அவனிடம்
மேலும் மேலும்
அந்த உடைமைப்பற்றை
வளர்த்துக்கொண்டே போகிறது.
அது
அவனாய் தனக்கு வைத்துக்கொண்ட‌
கற்பனையான‌
கடவுளையும் சேர்த்து தான்.
கடவுள் தனக்கு மட்டுமே
"கனக தாரா" பொழியவெண்டும்
என்ற அந்த சிறிய குறுகிய புள்ளி
இறுக்கமாகி விடுகிறது.
அந்த எண்ணம் விதையாகி
ஒரு நச்சு விருட்சமாய்
பரந்து நிற்கிறது.
அந்த குறுகிய எண்ணத்துள்
பரந்த பிரபஞ்சம் எனும் கடவுளை
அவனால் அடைத்துக்கொள்ள முடியவில்லை.
அதனால்
கடவுள் ஒரு சின்னவட்டத்துள்
சிறை பிடிக்கப்பட்டு
மனிதர்களிடையே பகையும் பொறாமையுமாய் ஒரு
தீ
பற்றி எரிகிறது.
பொது மானுடத்தின் அன்புக்காலடியில்
அந்த தனிமனிதவெறி தங்கிக்கொள்ள
அடம்பிடித்து அரிவாள் தூக்குகிறது.
இதில் வரையப்பட்ட எல்லைகள்
போர் என்ற பெயரில்
ரத்தக்கோடுகள் போடுகின்றன.
கணினிகள் எனும்
அறிவின் சிகரம் எட்டியபின்னும்
கொத்து கொத்தாய்
மனிதர்களை கொன்று அழிக்கும்
அணுகுண்டுகளின்
ரகசிய அல்காரிதங்களையும்
ஒளித்து வைத்துக்கொண்டு
"கேம்ஸ்"ஆடுகின்றன.
"மாணடி சேர்ந்தார்"என்பதில் உள்ள‌
அடிகள் என்பது
மனிதனின் காலடிச்சுவடுகள் தான்.
இந்த காலடிகள் தடம் பதித்துக்கொண்டிருந்தாலும்
உலகம் எனும் அகன்ற இடம்
உறுபசி எனும்
ஊழித்தீயில் பொசுங்கிக்கொண்டு தானே
இருக்கிறது.
பெரும்பான்மையான இடங்களில் வறுமையின்
கொடிய கார்ட்டூன் சித்திரங்களாய்
"கபாலங்கள்" குவிந்து கிடக்கின்றன.
சிறுபான்மை வெளிச்சம் மட்டும்
கொழுத்த வண்ணங்களின் நிழலாட்டங்களில்
குத்தாட்டம் போடுகிறது.
மாணடி எனும் அந்த
சமதர்மம் சென்று சேராத வரை
மனிதர்கள்
நிலமிசை நீடு வாழ்வரோ?
வள்ளுவர் வரிகளிலும் கூட‌
"அகழ்வாராய்ச்சி" செய்தால் தான்
மொழியின்
ஒளி முழுமையாய் வீசும்.

=========================================================







திங்கள், 28 அக்டோபர், 2019

பேசிக்கொள்கிறார்கள்.



பேசிக்கொள்கிறார்கள்.
============================================ருத்ரா

என்ன பிரச்னை உனக்கு?

என்னத்த சொல்றது.
திருவிழால்லாம் முடிஞ்சு போச்சு.
டல்லடிக்குது.

என்ன சொல்ற?

பின்னே என்னங்க?
அவங்க ஜெயிப்பாங்க‌
இவங்க தோப்பாங்கன்னு
அவங்க சொல்லிட்டே இருப்பாங்க.
டி ஆர் பி கூடிகிட்டே இருக்க்கும் அவங்களுக்கு.
இங்க பட்டுவாடாவும்
பட் பட்டுன்னு நடந்துகிட்டே இருக்கும்.

அதுக்கு  என்ன பண்றது?

என்ன பண்றதா?
இருக்கிற எம் எல் ஏக்களை
கொஞ்சம் கொஞ்சம் பேரா
வூட்டுக்கு அனுப்ப்பிட்டு
அந்த காலி இடங்களுக்கு
இடைத்தேர்தல்னு அறிவிச்சா போதுமே
ஊரே களை கட்டிடுமே

என்னப்பா?
ஜனநாயகம்னா கத்தரிக்காய் வாழக்காய் வியாபாரம்னு
நெனச்சியா?

அதான் சொல்லிட்டிங்களே
வியாபாரம் தான்.
ஆட்டுச்சந்தை மாட்டுச்சந்தை மாதிரி
ஓட்டுச்சந்தை இது.
மறுபடியும் யாவாரம் சூடு பிடிச்சா போதுங்க.

அதுக்கு?

வேற ஒண்ணுமில்லிங்க‌
நம்ம  ஆணையத்துட்ட சொல்லி
திருவிழா நடத்தச் சொன்னா போதுங்க.

சரிதான்.
இன்னும் ஆயிரம் ஆண்டு போனாலும்
இப்படி
நம்ம நாகரிகத்த
தோண்டிகிட்டே இருக்கவேண்டியது தான்.


(தயது செய்து சிரித்துக்கொள்ளுங்கள்.
வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும்ண்றாங்களே
அப்படின்னா
இந்த நோயும் இருந்துகிட்டே இருக்கும்.
நாமும் அதுக்கு சிரிச்சுகிட்டே இருப்போம்.)

==========================================================











குட்டிப்பயல் சுஜித்

குட்டிப்பயல் சுஜித்
===========================================ருத்ரா

ஒரு குட்டிப்புயலை
எழுப்பிக்கொண்டிருக்கிறான்
குட்டிப்பயல் சுஜித்.
இவன் மீண்டு வருவதே நமக்கு
மீண்டும் மீண்டும் தீபாவளி.
"அறம்"படத்திற்குப் பிறகு
இங்கு
ஆழ்துளை கிணறுகளே
வில்லன்கள்.
அந்த மழலைப்பிஞ்சு
இந்த பூமியன்னையின்
கர்ப்பத்திலிருந்து
மீண்டும் எழுந்து வர‌
நாம்
அந்த பூமி அன்னையை
மனம் உருகி வணங்குவோம்.
அரசு
ஆர்வலர்களின் முனைப்பு
மக்கள் முயற்சிகள்
இராட்சத எந்திரங்கள்
எல்லாம்
தூய அன்பில்
அந்தச்செல்வனை மீட்க‌
படாத பாடு படுகின்றன.
நம் நம்பிக்கை வெற்றி பெறுவது உறுதி
என்ற நம்பிக்கையே
அங்கு
ஒரு எந்திர "ரிக்"வேதத்தை
முழங்கிக்கொண்டிருக்கிறது.
அவன் ஒளிர்முகம் தான்
தற்போது நமக்கெல்லாம்
ஒரு உதய சூரியன்.

======================================================





ஞாயிறு, 27 அக்டோபர், 2019

யாதும் நன்றே யாதும் தீதே


யாதும் நன்றே யாதும் தீதே
=======================================ருத்ரா


யாதும் நன்றே யாதும் தீதே
பிரித்தறி உணர்வே பேரொளியாகும்.
கருத்து அறியா குப்பைகள் யாவும்
கடுந்தீ நாவுள் இரையெனப்படுமே.
அன்றொரு நாளில் அடர்ந்த சிந்தனையில்
கற்பரல் கொண்டு தீப்பொறி கண்டான்.
பச்சை ஊன் தின்றவன் அதனால்
சுட்டுத்தின்றான் சுவை பலக் கண்டான்.
கல் தந்தது கல்வியின் கண்கள்.
மிரண்டு கிடந்தவன்  இருண்டகாலம்
மிளிர்ந்து ஒளிர்ந்தது பலவாறாய்.
மிருகங்களாய் தம்முள் அடித்துத் தின்றவன்
மின்னல் சிந்தனைக் கீற்றின் வெளிச்சம்
பட்டவன் அதனை பற்றிக்கொண்டான்.
குகைகள் திறந்தன.பகைகள் மறந்தன.
அச்சம் அங்கு அகன்றிடும் வரைக்கும்
ஆயிரம் ஆயிரம் கடவுள்கள்.
மண்ணும் கடவுள் விண்ணும் கடவுள்
புல்லும் கடவுள் புலியும் கடவுள்.
புழுவும் கூட நெளிவது கண்டு
அலறிப் புடைத்து ஓடி ஒளிந்தான்.
"கல்"எனும் சாவி கொண்டு
கற்றான் பெற்றான் ஆயிரம் அறிவு.
மீண்டு வந்து எல்லாம் தெளிந்தான்.
அண்டம் அளந்தான் பண்டம் பிளந்தான்.
நுண்பொருள் துடிப்பின் விசையைக் கண்டான்.
நுழைபுலம் கொண்டு விந்தைகள் செய்தான்.
மனிதர்கள் யாவரும் தொப்பூள் கொடி
ஒன்றிலிருந்தே உறவு வளர்த்தார் என‌
உண்மை தெரிந்தான்.நன்மை தெரிந்தான்.
ஆயினும் மிச்சமாய் இருந்த அச்சமே இன்றும்
மதமாய் வெறியாய் படர்வது கண்டோம்.
மனிதனே!மனிதனே!எழுவாய்!எழுவாய்!
குறுகிய வேலிகள் அழிப்பாய் அழிப்பாய்.
வெளியே இருந்து மிருகங்கள் இல்லை.
உள்ளே இன்னும் அறியாமை
அழுக்குகள் ஆகி அடைந்ததனால்
ஆயிரம் கடவுளின் காடுகளாய்
இருட்டி உன்னை மிரட்டினவே.
கணினி அறிவு கையில் உண்டு.
கனவுகள் மாற்று காலத்தை வெல்லு.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 
பிறள்ந்திடச் செய்யும் மதங்கள் வேண்டாம்.
மீண்டும் பிறப்பாய்.புதிதாய் பிறப்பாய்.
பொதுவாய் சமைக்கும் அமைப்பு ஒன்றின்
புதிய உலகம் நீயே படைப்பாய்!


================================================

வெள்ளி, 25 அக்டோபர், 2019

எல்லோரும் கொண்டாடுவோம்.

எல்லோரும் கொண்டாடுவோம்.
==========================================================ருத்ரா

எல்லோரும் கொண்டாடுவோம்.
கடவுள் அசுரன்
இரண்டுமே இரண்டறக்கலந்ததால்
எல்லோரும் கொண்டாடுவோம்.
மனிதன்
கடவுள் மகன் என்பார்கள்
மத வாதிகள்.
அந்த நரன் கடவுளுக்கு
சமம் ஆகும் நாளும்
வரத்தானே செய்யும்.
மகன் என்பவனும்
தந்தை ஆகும் காலத்தின் புள்ளி
ஒன்று வரத்தானே செய்யும்.
தந்தை எனும் கடவுள் நிலை
அந்த "நரனுக்கு" வரலாமா?
அதாவது
கடவுளை நரன் மீறி நின்று
கேள்விகள் எறியலாமோ?
அவன் கடவுளுக்கு மகன் உருவில்
வந்தாலும்
அதை அனுமதிக்கலாமோ?
சனாதனம்
அதற்கேற்றவாறு
புராணம் சொல்லியது.

பூமியை உழுது பயிரிட்டு
உயிர்களைகாப்பாற்றிய
ஆதி உழவனை "வராகம்"ஆக்கினார்கள்.
அந்த உழவனும் பூமியும்
உறவு கொண்டாடி
உலகம் மலர்ச்சி அடைந்து
அறிவு ஓங்கி
அறியாமை தேயும் போது
கடவுள்கள் மங்கிப்போனார்கள்.
எனவே மனிதர்கள் கடவுளுக்கு
எதிராய் நரகாசுரன்கள் ஆனார்கள்.
கடவுளைக் கேள்வி கேட்ட மனிதன் எனும்
நரன் அசுரன் ஆனான்.
நரகாசுர வதமே
இனி தேசிய புராணம்.
கடவுளைக் கேள்வி கேட்பவன்
அரசனையும் கேள்வி கேட்பவன் ஆகிறான்.
அதனால் இந்த‌
நரகாசுர வதமே
நம் திருவிழா.
நம் தெரு விழா .

கற்றலின் கேட்டல் நன்று என்று
கேள்வியை வேள்வி ஆக்கினான்
வள்ளுவன்.
அறிவையே தீயிட்டுக்கொளுத்தி
பட்டாசு வெடிக்கிறான் பாமரன்.
நாமும்
அதைக்கொண்டாடும் வரை
கொண்டாடுவோம்.
இந்தக் குப்பைகள் எல்லாம் அகலும் வரை
ஒரு பொம்மை விளையாட்டுக்கு
எல்லோரும் கொண்டாடுவோம்.
ஆம்.
எல்லோரும் கொண்டாடுவோம்.

=====================================================

அசுரன்

அசுரன்
============================================ருத்ரா


பத்து அவதாரங்களும் பத்தவில்லை
இந்த பதர்களுக்கு.
மானுட ஒளியை கொன்று புதைக்கவா
சங்கும் சக்கரமும்
இன்னும் கதாயுதமும் கோடரிகளும்.?

இந்த சினிமா
மனித வேடம் ஏந்திய
அசுரன்களை அழிக்கவந்த‌
மகா அசுரன்.

தீபாவளி என்று
ஆண்டு தோறும்
பட்டாசுகளை
தன் மீது கொளுத்திக்கொண்டு
கரிக்குப்பையாய் போகிற‌
இந்த அடிமைப்பூச்சிகளின்
மீசை மயிர்களில்
ஒரு சிறு கீற்று
கோடி மின்னலை ஒளிரவைத்ததே
இந்த சினிமா.

பூமணி அவர்களின்
நாவல் தூவிய எழுத்துக்களில்
எரிமலைகள்
கருவுற்றுக்கிடந்தன என்பது
உருவுற்று எழுந்ததே
இந்த சினிமா.

சமூக ஆர்வலர்
திரு. எவிடென்ஸ் கதிர் அவர்கள்
இப்படத்தைப்பற்றி
குறிப்பிடும்போது
தனுஷ் வைத்திருக்கும்
அந்த கருப்புப்பொட்டு தான்
கதையின் அக்மார்க் முத்திரை
போன்றதாக சொன்னார்.
ஆம்
அடிமை சரித்திரத்தின் அந்த‌
அமாவாசைப்புள்ளியை
ஆயிரம் பவுர்ணமிகளின்
வெளிச்சப்பிழம்பு ஆக்கியது
இந்த சினிமா.

ஆண்ட பரம்பரை
 என்ற கொக்கரிப்புகளுடன்
எக்காளம் ஊதுபவர்கள் எல்லாம்
அடி நாதமாய் இருக்கின்ற
கீழ்ச் சாதி மக்களை
ஏன் இன்னும் கீழேயே வைத்து
அடக்குகின்றார்கள்?

ஆரிய அரக்கம் தந்த‌
சனாதன‌
மிருகங்கள் விழுங்கி
எச்சமிடபட்டவை தானே
அந்த சரித்திரங்கள்.
அதன் அவலங்களிலிருந்து
வந்த சீற்றம் தான்
இந்த சினிமா.

வர்ணாசிரமம் என்பதையும் விடவா
இந்த
புற்று நோய்க்கிருமிகளும்
எய்ட்ஸ் கிருமிகளும்
ஆபத்தானவை?

உண்மை சுடும் என்ற
உண்மையையும் இப்படித்தான்
காட்ட வேண்டிய கட்டாயம்
என்பது தான்
இந்த சினிமா.

கச்சா பிலிம் சுருளில்
இது வரை
ஆதிக்க வர்ணங்களே தான்
"ஈஸ்டமன் கலர்".
ஆனால்
ஒரு விடியல் வண்ணம்
இப்போது தான்
கொப்பளித்திருக்கிறது என்று
காட்ட வந்தது தான்
இந்த சினிமா.

உயர் சாதியின்
எச்சிலும் மலமும்
ஏந்திக்கொள்ள
ஒரு அடிமை வர்க்கத்தை
"சூத்திரா ..பஞ்சமா "
என்று
சமஸ்கிருதத்தில் சொல்லி
புளகாங்கிதம் கொள்ளும்
வெள்ளை வெறித்தனத்தை
வதம் செய்ய வந்ததே
இந்த அசுரன்.

பாரத நிலத்தின் மண்ணில்
எல்லாம்
வியர்வை பெய்து
உயிர்கள் நட்டு
உழைப்பின் விசையில்
பட்டா போட்டது இந்த
பாட்டாளி இனமே.
அவர்களுக்கா "பஞ்சமி"என்று
நீங்கள் பிச்சை எறிவது?
வரலாற்று அக்கிரமம் இது.
திருத்த வந்ததே
இந்த அசுரன்.

அப்படி
வீசியெறிந்ததையும்
பொறுக்கிக்கொண்ட து
சுரண்டல் என்னும்
"பொறுக்கித்தனம்".
அந்த புரட்டுகளை
நொறுக்க வந்ததே
இந்த அசுரன்.

அன்று
கீழ்வெண்மணியில்
பற்றியெரிந்து சாம்பல் ஆனது
மக்கள் ஜனநாயகத்தின் கர்ப்பப்பை.
அந்த நான்குவர்ண பஞ்சவர்ணத்தீயில்
மத்தாப்பு கொளுத்திய
மிருகத்தனங்களை
சொக்கப்பனை கொளுத்த வந்த
ஊழித்தீ
இந்த அசுரன்.

இது வரை
விருதாவாய்
கொடுக்கப்பட்ட
விருதுகள் எல்லாம்
இருக்கட்டும்.

ஆனால்
இந்த "அசுரனுக்கு"
ஆயிரம் "பாரத ரத்னா" விருதுகள்
அளித்தாலும் போதாது.

========================================================







புதன், 23 அக்டோபர், 2019

அந்த நுரையாடை.



அந்த நுரையாடை.
====================================================ருத்ரா

லாஸ் ஏஞ்சல்ஸின் வெஞ்சுரா கடற்கரை.
மாலைச்சூரியன்
இந்த ஈர மணல் விரிப்பில்
அவன் முண்டாசை அவிழ்த்து
பரப்பிவைத்து படுத்துக்கொண்டிருந்தான்.
வெள்ளையான கடற்குருகுகள்
எங்கோ தொலைவில்
இறக்கை பட படத்து இன்னொலியை
உதிர்த்து
சங்கத்தமிழில் ஒரு "குருகின் குறுந்தொகையாய் "
நிரவி நிரவி தனிமையை மீட்டியது.
நுரைக்கோடுகளும்
அங்கே ஏதோ எழுதின.
அந்த குறுந்தொகைக்கு நெடுந்தொகையாய்
அவை "நச்சினார்க்கினியர்"உரைகள்.
அந்தப் பறவைகளின் சிறகுகளில் கூட
ஏதோ பற்றிஎரிகிறதே !
என்ன அது?
அது ஈழம்.
அது தமிழ்.
மானிட பரிணாமத்தின்
உயிர்த்தாகம். அது.
அடக்குமுறை
எங்கேயாவது ஒரு சொட்டு விழுந்தால் கூட
எங்கள் அசுரக்கைகள்
பார்த்துக்கொண்டு சும்மா இராது
என்று
பிரகடனம் செய்யும் அமைப்புகள் கூட
வெறும் "மிக்ஸர் பொட்டலம்"
கொறிப்பவை ஆகிப்போன
நாகரிகத்தின் உச்சியில் இருந்துகொண்டு
இந்த அறமற்ற செயல்களை
உச்சி மோந்து
உலக கீதம் பாடிக்கொண்டிருக்கின்றன.
கடற்கரையின்
அந்த நுரையாடை
பிணம் போர்த்திய சல்லாத்துணியாய்
படர்ந்து நெளிகின்றது.

===========================================================










ஒரு "உல்ட்டா"

ஒரு "உல்ட்டா"
==========================================ருத்ரா.

அன்றொரு நாள்
அந்தப்பகுதியில்
இது வரை இல்லாத அளவுக்கு
ஒரு மின்னல் அடித்தது.
கோடிக் கோடி மடங்கு
அதிக ஆற்றல் உள்ளதாய்
அது இருந்தது.
அதிலிருந்து வந்த‌
ஏதோ விதமான காமாக்கதிர்கள்
பூமியின்
டி என் ஏ, ஆர் என் ஏ வுக்குள்
புகுந்து
படைப்பின் "பாஸ்வர்டை "
மாற்றிக்கொண்டது.
.............
..............
அந்த ஆற்றங்கரையோரம்
இருந்த நண்டுகளும் நத்தைகளும்
திடீரென்று
கிருஷ்ணபகவான் காட்டிய‌
விசுவரூபமாய்
ஊருக்குள் படையெடுத்தன.
ஆமாம்
ஊருக்குள் மனிதப்பூச்சிகள்
ஒன்றைக்கூட காணோமே.
ஆம்
அவர்கள் எல்லாம்
"அரை அங்குல" அளவுக்கு
குறுகிப்போன‌
பூச்சி புழுக்கள் ஆனார்கள்.
நண்டுகளும் நத்தைகளும்
தங்கள் காலைஉணவு தேடி
ஊருக்குள் வந்தன.
ஆகா!
அவைகளுக்கு வாயில் எச்சில் ஊறின.
மனிதப்பூச்சிகளையும் புழுக்களையும்
கண்டு அவை
மிக உற்சாகம் கொண்டன.
நண்டுகளின் கொடுக்குகளில்
கொத்து கொத்துக்களாய்
மனிதப்பணியாரங்கள்.
நத்தைக்ளோ
மனிதப்புழுக்களை
"லார்டு லபக் தாஸ்களாய்"
விழுங்கித்தீர்த்தன!
நண்டுக்குழம்பும் நத்தைக்குருமாவுமாக
சுவைக்கப்பட்டவை
அதே நண்டுகளுக்கும் நத்தைகளுக்கும்
மனிதக்குழம்பும் குருமாவுமாய்...
அய்யய்யோ!
என்ன கொடூரம் இது!..
..............
.................
"நாதா!
இது என்ன?
உங்கள் புது சேட்டை?"

"சேட்டை என்று கூறாதே.
திருவிளையாடல் என்று சொல்."

"எதற்கு இது?"

"அன்பே சிவம்" என்று
பிரதோஷம் தோறும்
கூச்சல் போடுகிறார்கள்.
ஆம்.
எல்லா உயிரும் சிவம்.
எல்லா சவங்களிலும் சிவம்.
மண்ணிலும் மலத்திலும் கூட.."

"போதும் போதும் நிறுத்துங்கள்"
(மூக்கைப்பொத்திக்கொள்கிறாள்)

"தேவி!
அந்த அன்பு
இன்னொரு அன்பைத் தின்கிறது.
செரிக்கிறது.
கொழுக்கிறது.
பக்தி செழிக்கிறது..."
பரமேஸ்வரன் சிரிக்கிறார்.

"ஹா..ஹா.ஹ்ஹா"
அவர் கையில் இருந்து சூலமும்
சிரிக்கிறது.
............
............

"போதும் எழுந்திருங்கள்!
என்ன‌ சிரிப்பு இது!
விடிய  விடிய
அந்த புராணக்கச்சேரிகளைக்
கேட்டுக் கேட்டு
தூங்கியது போதும்.எழுந்திருங்கள்!"
இந்த தேவி
வீட்டுத்தேவனை
உலுக்கி எழுப்பினாள்.

=============================================================



செவ்வாய், 22 அக்டோபர், 2019

குறும்படம் ‍‍ 2

குறும்படம் ‍‍ 2
=========================================ருத்ரா

வகுப்பறை.
பெஞ்சில் ஆணும் பெண்ணுமாய்
இரு முகங்கள்.
பின்னணியில் வாத்தியாரின் குரல்.
சரித்திரப்பாடம்.
குப்தர்களின் பொற்காலம்.
ஆனால்
அந்த முகங்களில்
சரித்திரமும் இல்லை.பூகோளமும் இல்லை.
இருந்தவை
பார்வைகளின் பரிமாற்றம் மட்டுமே.
கண்களில்
ஆயிரம் கடல்கள்.
மற்றும்
ரோஜக்களின் மழை.
பட்டாம்பூச்சிகளின்
வர்ணக்காடுகள்.
விழியோர நங்கூரங்களில் கனவுகள்.
பள்ளியில் பாடம் முடிந்தது.
மாலை இருட்டில்
வகுப்பறையை பூட்ட வந்த காவலர்
துணுக்குற்றார்
அது என்ன அந்த பெஞ்சில் மட்டும்
தங்க மினுமினுப்பு.
ஆம்.
அந்த பெஞ்சு
வயதுக்கு வந்துவிட்டது.
அதுவும் சற்று முன் தான்.
கண்கூசும் வெளிச்சத்துக்குள்
அவர் இழுத்துக்கொள்ளப்பட்டதாக‌
உணர்ந்தார்.
அலறிப்புடைத்தவர்
கீழே விழுந்து விறைத்தார்.

படம்
"காதல் மின்னல்."

==========================================================




திங்கள், 21 அக்டோபர், 2019

அந்தி

அந்தி

=========================ருத்ரா இ பரமசிவன்.


அந்திச்சிவப்பை

இதழ் பிரித்து காட்டுகிறாள்

வானத்து மங்கை.

புல்லுக்கும் புழுவுக்கும் கூட‌

காமத்துப்பாலின்

முத்தம் சொட்டுகிறது.

வருடி வருடிச்செல்லும்

கடிகார முட்களிலும்

ரோஜாவின் லாவா.

உயிர்த்துளிகளில்

ஒரு விளிம்பின் ஓவியம்

மயிர் சிலிர்த்த தூரிகையால்

இன்னும் இன்னும் 

உயிர் அமுதம் ஊட்டுகிறது.

ஒரு வடிகட்டின மடையன்

இதற்கு 

பேனாவையும் பேப்பரையும் கொண்டு

சமாதி கட்டுகிறான்

கவிதை என்று!

==============================

தமிழ் வாழ்க‌

தமிழ் வாழ்க‌
===============================================ருத்ரா

"அன்பே
உன்னைக்காதலிக்கிறேன்.
ஆனால்
அது கூட இங்கு
கெட்ட வார்த்தையாகிபோனதா?
அல்லது
அந்த தமிழ் மொழியே
ஒரு பெண்தானே.
உன்னைக்காதலிக்கிறேன் என்று
நான் சொல்லும்போது
அந்த இன்னொரு பெண்
இடையில் வருவதன்
"பொறாமையா?"
சரி
இதையே சொல்லிவிடுகிறேன்
"ஐ லவ் யூ..."
கடைசியாய் தேசியகீதம்
ஒலிக்கவிடுவது போல்
இதையும் சொல்லிவிடுகிறேன்
தமிழ் வாழ்க!"

=======================================================


ஞாயிறு, 20 அக்டோபர், 2019

"மனத்துக்கண் மாசிலன்..."


"மனத்துக்கண் மாசிலன்..."
======================================ருத்ரா




மனம் என்கிற
குப்பைத்தொட்டியைப்பற்றி
வள்ளுவன்
எவ்வளவு கூர்மையாய்
ஒளி பாய்ச்சியிருக்கிறான்?
நம் வாழ்க்கையின் தெருவோர
கள்ளிகளும் ரோஜாக்களும்
நம் மனக்குகைக்குள் போய்
பொந்து வைத்துக்கொண்டு
சிறகடிப்பது தானே
நம் "சிஸ்டாலிக் டயஸ்டாலிக் மர்மர்கள்"
அதாவது
நம் இதய படபடப்புகள்.
மனத்தை
மூளியாக்கிக்கொள்வதே
நமக்கு வேண்டிய முதல்
இறைவம்.
மூளியில் எந்த உருவம் வரும்?
எந்த உருவமும் வரவேண்டாம்.
எந்த வர்ணம் தெரியும்?
ஒரு வர்ணமும்
சாயத்தை நம் மீது
கொட்டவேண்டாம்.
அப்படியென்றால்
மொத்த சமுதாயமும்
மொக்கையாகி விடவேண்டுமா?
அதற்குள் கிளைகள் பிரிய விட்டால்
கிளை விட்டு கிளை தாவும்
குரங்குகளும் அங்கு வந்து விடும்.
அதற்காக‌
மனத்தை குருடு ஆக்கிக்கொள்
என்று பொருள் அல்லவே!
"மனத்தைக் கண் " ஆக்கிக்கொண்டு
இந்த உலகை
பார் அல்லது நினை.
மனதில் விழியை பதியம் இடு.
விழியை மனதில் படர விடு
இப்போது பிற மனிதர்களில்
உன்னைத்தான் பார்ப்பாய்!
பிறனை நீ பிறாண்டும்போது
அதன் கொடு ந‌கக்கீறல்கள்
உனக்குத்தான் வலியின் கோடுகளை
கீறிக்காட்டும்.
"மனத்துக்கண்" என்பதில்
இலக்கணம்
இடம் எனும் ஏழாம்வேற்றுமையை
சுட்டிய போதிலும்
"வேற்றுமை" எனும் அழுக்கை
மனிதர்களிடையே விதைக்க வேண்டாம்
என்பதற்கு
வள்ளுவன்
மனத்தையே சமநீதியின்
கண் ஆக்கியிருக்கிறான்.
உரைக்குள் உறையும் உள் உரை பார்
என்று
"அனைத்து அறன்" என‌
அறுதியிட்டு எழுதினான்.
உரையாசிரியன் கோடு தான் காட்டுவான்.
மனிதநீதியின் மணி மண்டபத்தை
நாம் தான் அதில்
கட்டிக்கொள்ளவேண்டும்.
கால ஓட்டமே
வள்ளுவனின் உரையாசிரியன்

====================================================






சனி, 19 அக்டோபர், 2019

ஒரு பாற்கடல்


ஒரு பாற்கடல்
=========================================ருத்ரா

மேருமலை மத்து.
வாசுகிப்பாம்பு கயிறு.
தேவர்களும் அசுரர்களும்  கடைந்தார்கள்.
பாம்பின் சீறும் வாயையும்
எதிர் கொண்டு
பலமாகக்கடைந்தது
அசுரர்களே.
தேவர்கள் பாம்பின்
வாலைப்பிடித்து
வருடிக்கொண்டிருந்தார்கள்.

பாற்கடலில் உருண்டு திரண்டு
ஆத்திகம் என்ற நஞ்சும்
நாத்திகம் என்ற அமுதும்
வந்தன.
சிவன் நினைத்தான்.
"போதும் போதும்
இவர்கள் புராணம் எழுதி
என்னைப்புரட்டி போட்டது போதும்.
நான் சூடிய
சந்திரன் எனும் சந்திரிகையையும்
கங்கை ஆறு எனும் கங்காதேவியையும்
போட்டியான பெண்டாட்டிகள் ஆக்கி
என் குடும்பத்தையே
கெடுத்து விட்டார்கள்."
சிவன் ஆத்திக விஷத்தைக்
குடித்து விட்டான்.
தொண்டை கருப்பாகி
நீலகண்டன் ஆகிவிட்டான்.
மிஞ்சியது
நாத்திகம் எனும் அமுதம்.
அது அந்த கலசத்தில்
அப்படியே இருந்தது.
அதற்கு போட்டி இல்லை
சண்டைகள் இல்லை.
மோகினி அவதாரங்களும் இல்லை.
அறியாமை என்ற நஞ்சு
அமுதம் என்று
பரவி விடக்கூடாது
என்றும்
அப்படி ஏமாறும் பக்தர்கள்
தனக்கு தேவையில்லை
என்றும்
தியாகம் செய்து
கோவில்களுக்குள்
அவன் அமர்ந்து கொண்டாலும்
அவர்கள் விடுவதாயில்லை சிவனை.
பிரதோஷம் என்று
அந்த நஞ்சையே
சுற்றி சுற்றி வருகிறார்கள்.
வெளியே
அறிவு அமுதம் சிந்தி சிதறிக்கிடக்கிறது.

======================================================
(ஒரு கற்பனை)


வரலாற்றின் வடு.

சீமான் அவர்களே
==========================================================ருத்ரா

கர்ணனை
நான் கொன்றேன்
நான் கொன்றேன்
என்று
அர்ஜுனன்
பிதற்றிக்கொண்டேயிருந்தான்
"செத்த பாம்பை"
அடித்து விட்டா
இப்படி பீற்றிக்கொண்டு இருக்கிறாய்
என்று
கிருஷ்ணன் கேட்டான்.
ராஜிவ் காந்தி அவர்கள்
உள் வெளி நாட்டுச்சதிகளின்
ஓராயிரம் அம்புகள் துளைத்த‌
ஒரு நாட்டின் தலவனாக‌
வீழ்ந்து பட்டது
வரலாற்றின் வடு.
அந்த வடுவைக் கிண்டி கிளறி
மாமிசம் தின்னும்
கழுகாக இருந்து
கர்ஜனை செய்வதால்
யாருடைய‌
சிம்மாசனத்தையோ
அலங்கரிக்கவே
இப்படி ஆரவாரிக்கிறார்
சீமான் அவர்கள்.
லட்சம் தமிழர்கள் இறந்ததற்கு
பழி வாங்குவதாக இப்படி
"பஜனை" செய்வது
இன்னும் பலப்பல‌
லட்சம் தமிழர்களை
எதிரிகளின் காளிகளுக்கு
பலி கொடுப்பதற்காக‌
செய்யும்
சாணக்கியத்தனங்களின்
விஷம் தடவிய
ஈட்டி முனையாக‌
மைக் முன்னால்
நச்சு ஒலிகளை அவர்
பரப்பி வருகிறாரோ
என்று
இந்த தமிழ் மண்
சிந்திக்கத் துவங்கிவிட்டது.
சமூக விழிப்புணர்ச்சியோடு
இயக்கம் கண்ட‌
தமிழ் நாட்டின் வரலாற்றுத்தலைவர்களை
எல்லாம்
அவர் காலில் போட்டு மிதிக்கிறார்.
சூத்திரர்களையெல்லாம்
அடித்து நொறுக்க‌
அந்த குள்ளநரிகள்
ஒரு "சூத்திர க்ஷத்திரியனை"
கையில்
போலி  "உள் இனப்பற்று" எனும்
கோடாலியை கொடுத்து
அனுப்பியிருக்கிறது.
நாலு வர்ணத்தில்
மூன்று வர்ணம் வரை
பூணுல் மாட்டிக்கொண்டிருக்கும்
இந்த சனாதனத்தின்
மர்ம நூல் இழுத்த இழுப்புகளே
இவரின் பொம்மலாட்டம்.
இடைத்தேர்தல் எனும்
தேரின்
வடம்பிடிக்க‌
முரசு கொட்டிக்கொள்ளட்டும்
ஆனால்
அவர் பிடித்துக்கொண்டிருப்பது
வடம் அல்ல.
கண்ணுக்குத்தெரியாமல்
பகைக்கணை எய்யும்
வரலாற்று எதிரிகளின்..
அந்த எதிரிகளுக்கு
அடிமைச்சேவகம் செய்யும் அனுமான்
ஆகிப்போன...
அவர் சொந்த வால் தான் அது.
இந்த புழுதியும் தூசியும்
தமிழ்ச்சூரியன் மீதா
திரை போடும்?
தமிழா!
சூழ்ச்சிகள் உன்னை
விழுங்க முடியாது.
பார்..
லட்சம் ஆண்டுகள் ஆனாலும்
ஆய்ந்த பொழுதெல்லாம்
அகழ்ந்த பொழுதெல்லாம்
உன் தமிழின்
மின்னல் எலும்பு மிச்சங்களே
இந்த வரலாற்று வானத்தை
சிலிர்க்கவைக்கும்.
கல் தோண்டிப்பார்
மண் தோண்டிப்பார்
எல்லாவற்றையும் தாண்டி
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
அங்கு
வேர் பிடித்து நிற்கும்.
சீமான் அவர்களே
தமிழ் வரலாற்றின் சக்கரமாக‌
சுழல வந்திருக்கிறேன்
என்று
அந்த சிவகாசிப்பட்டாசின்
"விஷ்ணு சக்கர"மாக
வந்து விஷமத்தனம் செய்யும்
விளையாட்டு உங்களுக்கு
பொருத்தமானது அல்ல.
சிலம்புப்பரல்களின் உள்ளே
ஒலித்த தமிழை ஒலித்த‌
அந்த சிலம்புச்செல்வனின்
தோள்மீது ஏறிநின்று கொண்டு
தமிழ்ப்பகைக்கு
"போஸ்டர் ஒட்டும்" இந்த
அவலம் தான்
அவலங்களுக்கெல்லாம் அவலமாய்
நம்மை துன்புறச்செய்கிறது.

உங்கள் ஒலி பெருக்கி தமிழனின்
"வலி பெருக்கியாக"
உரு மாறி வருவதை
நீங்கள் உற்றுக்கவனிக்க வேண்டும் என்று
அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்க தமிழ்!
வெல்க தமிழ்!

========================================================================



வியாழன், 17 அக்டோபர், 2019

ஒரு குறும்படம்

ஒரு குறும்படம்
===================================================ருத்ரா

படம் முழுக்க
நீளமாய்
இருட்டு மட்டுமே ஓடியது.
கடைசியாய் குரல்கள்
கேட்டன.
"சாமி எனக்கு"
"இங்க எனக்கு கொஞ்சம் சாமி."
சாமி எனக்கு ..
சாமி எனக்கு...."
..............................
"அவ்வளவு தான்
சுண்டல் தீந்துடுத்து
நாளைக்கு வாங்கோ.."

அந்த இரண்டு நிமிட
குறும்படம்
தன்  பிலிம் நாக்கை
சுருட்டிக்கொண்டு விட்டது.

படத்தின்  தலைப்பு

"கடவுள்"

======================================================

ஒரு நிழற்சோலை




ஒரு நிழற்சோலை
========================================ருத்ரா


இது  கலிஃபோர்னியாவில்

நான் நடை பயிற்சி செய்யும் நிழற்சோலை.

ஓக் மற்றும் மேப்பிள் மரங்களின்

நிழல்கள் தரையில்

மழைத்தண்ணீர் போல் ஒழுகிக்கிடக்கும்

காட்சிகள் அருமை.

பசும்புல்லோடு அந்த நிழல்கள் தரும் முத்தங்கள்

கலையா வண்ணம்

நடப்பதில் ஒரு ஒரு கவனத்தை

பாறாங்கல் போல் தலையில் சுமந்து

நடப்பது போல் இருக்கும்

அந்த மெல்லிய உணர்வு மிகவும் களிப்பு தருவது.

சில சமயங்களில்

அந்த  பருத்த அணில்கள்

திரண்ட அநிச்சப்பூங்கொத்துக்களை

தன் வாலில் ஒரு மென்சாமரமாய் ஆக்கி

அந்த புல்லின் இதழ்களிடையே போய்

கிச்சு கிச்சு மூட் டுவதைப்பார்த்தால்

நான் புல்லரித்துப்போய்விடுவேன்.

இந்த தேசத்தின்

அணிலாடு முன்றில்களில்

கணினிகளின் "பூலியன் அல்ஜீப்ரா"

சருகுகள் தான் இதயத்துடிப்புகளாய்

சிதறிக்கிடக்கின்றன.

இங்கும் அங்கும் அணில் ஓடுவதை

நம் சங்கத்தமிழ்ப்புலவன்

பனை ஓலையில்

அந்த உயிரற்ற எழுத்தாணியைக்கொண்டா

கீறியிருப்பான்?

அவன் இதயத்தோடு

அந்தக் காதலர்களின் பிரிவு த்துன்பத்தையும்

தனிமையின் குதறல்களையும்

அல்லவா

இழைத்து வரிகளை உழுதிருப்பான்.

அந்த பனை ஓலையில் ஒரு மௌன ரத்தம்

கசியாமல் கசிகிறது.

......................

............................

"பீம்..பீம் "...

என் பின்னால் கார் அலறியது.

எப்படி நடு ரோட்டில்  இறங்கினேன்?

எனக்கு வியர்த்தது.

"ஏண்டா..சாவுக்கிராக்கி  வூட்ல சொல்லிக்கிணு வந்திட்டியா?"

அந்த  திடுக்  தருணங்களை

செல்லமாய் நம் மொழி

மொழி பெயர்த்துச்சொன்னது.


=======================================================









புதன், 16 அக்டோபர், 2019

வெண்கொற்றக்குடை









வெண்கொற்றக்குடை
================================================ருத்ரா 



என்னை யாரென்று எண்ணி எண்ணி
நீ பார்க்கிறாய்?
ஓ !என் அருமை முற்றுப்புள்ளியே !
வா,,
என் அருகில் வந்து எச்சமிடு.
உன் ராட்சத ரெக்கைகளை
ஏன் படபடத்துக்கொண்டிருக்கிறாய்?

என் கனவுகள் கீழே புதைந்து கொண்டிருக்கின்றன.
கீழடியின் நான்காவது ஐந்தாவது
அடுக்குகளாய்....
தமிழ் எனும் சூரியனின் விளிம்பு
அதன் எலும்புக்கூட்டு மிச்சங்களை
என்றைக்கு காட்டும்
என்று தான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

இருளில் தடவிக்கொண்டிருக்கும்
தமிழனை
மேலும் இருளில் தள்ளும்
இந்த மந்திரங்களும் சுலோகங்களும்
ஒரு நாள் புதைக்கப்படும்போது தான்
அவன்
விழி  காட்டுவான்.
ஒளிகாட்டுவான்.

தமிழுக்கு முற்றுப்புள்ளி இல்லை.

"நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாள் அது".....

என்று உணர்ந்து தான்
தமிழ் எனும்
இந்த வெண்கொற்றக்குடையை
பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
இறப்பு எனும் முற்றுப்புள்ளி
என் மீது
மழை பொழிய வந்த போதும்
நிழல் தருவது
அந்தக் கணியன் பூங்குன்றன் தமிழ் தான்.


யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)


-----------------------------------------------------------------------------------------------



செவ்வாய், 15 அக்டோபர், 2019

கீழவெண்மணி

கீழவெண்மணி
==============================================ருத்ரா

இந்த டிசம்பருக்கு
சிலுவைக்குப்பதில்
நெருப்பு விழுதுகளைக் கொண்ட‌
விவிலியம் பிளப்போம்.
எல்லா கைகளும் உழைக்கவேண்டும்.
அதன் பிறகு தான்
வாயும் வயிறும் நினைவுக்கு
வரவேண்டும்.
இந்த வசனத்தை
கர்த்தர் வானத்திலிருந்து கீழே
வீசாமலா இருந்திருப்பார்?
அப்புறம்
ஏன் உழுது உழுது
நைந்த கைகளுக்கு
ஒரு கவளச்சோறு
அன்னியமாகிப்போனது.
பாற்கடலில் படுத்திருந்தவனும் சரி
காடுடைய சுடலைப்பொடி  பூசியவனும் சரி
அவரவர் ஸ்லோகக்கூடுகளில்
சமாதியாகிக்கிடந்தார்கள்.
மனிதம் எனும் பரிணாம மலர்
வர்ணத்தீயில்
பொசுங்கிப்போனது.
யாருக்கும்
வலியில்லை
கவலையில்லை
ஆலயமணிகளின்
அவிந்த நாக்குகளின்
ஒலிப்பிசிறுகளில் எல்லாம்
ஆண்டவர்களின்  சாம்பல்கள்
தூவிப்பறந்தன
அந்த 1968 டிசம்பரின்
ஒரு இரவில்.
விடியலில்
கிழக்கில் சூரியனின்
அழுகிய பிணம்
இருட்டைக் கசிய விட்டது.

====================================================




திங்கள், 14 அக்டோபர், 2019

காதல் எனும்..


காதல் எனும்..
----------------------------------------------ருத்ரா இ பரமசிவன்.


எழுதுவதற்கு முன்பேயே
பேனாவுக்குள்
நீ வந்தாய்!

---------------------------------------


பூமியே
இல்லாமல்
ஒரு பூகம்பம்

---------------------------------------------


நீ இல்லாமல் நான் இல்லை.
நான் இல்லாமல் நீ இல்லை.
இருவர் நடுவில் ஒலிக்கும்
"வாய்ஸ்  மெயில்" இது.


-----------------------------------------------------------------



காதல் எனும் தீவு
கடலில் இருந்தது.
கடலோ
அவள் கண்களுக்குள்.


--------------------------------------------------------------------------


கடல் நுரை போல் நரைத்த..




கடல் நுரை போல் நரைத்த...
========================================ருத்ரா 

கலைஞரின் சொல்லோவியம் 
கடற்கரையில் 
கவிதை எழுதியது.
காலம் எனும் கிழவன் 
நரைத்துப்போவதுண்டா?
நம் நரைத்த எண்ணம் 
இங்கு குமிழிகள் பூக்கின்றன.
பல பில்லியன் ஆண்டுகள் 
இளமையாய் இருப்பவன் அல்லவா 
காலம்!
காலனே உன்னை கை  கால் 
முளைத்தவனாய் 
உருவகப்படுத்த எண்ணினால் 
ஒரு எருமையின் மீது 
சவாரி செய்துகொண்டு 
"பாசக்கயிற்றை" சுழற்றிக்கொண்டு 
வருகிறாய்.
என்?
அப்படி  வேடம் புனைகிறாய்?
காலம் என்றால் 
தொடக்கப்புள்ளியும் 
முற்றுப்புள்ளியும் இல்லாத 
கோடு தானே?
எலக்ட்ரான் போன்ற 
இந்த உயிர் எனும் 
"உயிர்ட்ரானை "எங்கு கொண்டு செல்கிறாய்?
எங்கு வேண்டுமானாலும் 
கொண்டு செல்.
இதற்குள் தமிழ் எனும் 
ஒரு விசை இருக்கிறது.
போ!
அதை உன்னால் 
அழித்து விட முடியுமா?
அதோ அங்கு ஒலிக்கிறதே!
அவனை வேண்டுமானால் நீ 
மண்ணுக்குள் எலும்புகள் ஆக்கியிருக்கலாம்.
அதோ உற்றுக்கேள்.
உன் இருட்டு உலகங்களுக்கு கூட 
கை  விளக்காய் ஒளிப்பதைக்கேள்!

"யாதும் ஊரே !யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா 
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன" 
......................

அந்த எருமையன் 
கொம்பு ஒடிந்து வீழ்ந்தான்!

==========================================












ஞாயிறு, 13 அக்டோபர், 2019

QUANTUM VOID

QUANTUM VOID

==========================ruthraa e paramasivan.



Time is purely an imaginary phenomenon.But it became one of the powerful dimensions to measure the "metric or distance invariance". It is like a catalytic element.Our frames of thinking events ahead and recollecting events or recording those events amount as temporal tributes.Modern cosmology has been tried to be built in Quantum hinge by which we can never catch its own foot hold of reality.Hence the whole particles embedded universe or vacuum embedded universe reduces to an awkward metaphysics of most IQ (say in thousands) owned kid who is playing with his toys of mathematical physics.

To add fuel to injury Heisenberg's "uncertainty principle" has blown all of our cosmology out of proportion.Paradoxically we are having solid proofs for for this BIG VOID.
When Neil Bohr discovered "quantum jumps" in electron orbits and made lot of propositions which resulted with Schrodinger Equation and Heisenberg's "uncertainty principle" Einstein very much was very much upset since "God is not playing Dice".Position and momentum are two important Quantum Attributes which are the most escaping for measure.So "non locality" is the essence of Quantum mechanics that makes most scientists coming to a conclusion that the demons or phantoms can not be the subject matter for Quantum Theories.More over Einstein opposed that all metric dimensions will be meaningலெச்ச் and again the Quantum mechanics deals all such "SPOOKY ACTION AT DISTANCE". Modern ENTANGLEMENT DYNAMICS of a pair of electrons goes to the extreme in violation of "velocity of light".But the modern Quantum Computing is making serious but wonderful in roads in all our norms of theoretical physics.The other side of the tunnel threatens the term light as dark and this QUANTUM VOID is in a sense at a gate way of worm hole or a quantum teleportation entering a cosmo of science fiction.



===============================================













ஐன்ஸ்டீன் மூளைக்குள் ஒரு பயணம்.

https://www.youtube.com/watch?v=UfThVvBWZxM

ஐன்ஸ்டீன் மூளைக்குள் ஒரு பயணம்.
=======================================================ருத்ரா

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்
பொது சார்புக்கோட்பாடு எனும்
ஜெனரல் ரிலேடிவிடி
மனித மூளையின்
பரிமாணத்தின் ஒரு எவெரெஸ்ட் சிகரம்.
அதன் மீது ஏறி நின்று
இந்த அறிவு
எனும் அற்புத உலகைக்கண்டு
களிப்பதை விட
வேறு ஒரு களிப்பு இல்லை.
இதோ இந்த விழியத்துக்குள்
நுழைந்து பாருங்கள்.
அறிவியல் மூலம்
இந்த பிரபஞ்சத்தை
நம் கைக்குட்டை ஆக்கிக்கொள்ளலாம்.
வியப்பில்
வியர்க்கின்றதா?
இந்த கைக்குட்டை மூலமே
முகம் துடைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் இருட்டு எல்லாம்
தொலைந்தே போய்விடும்.
============================================================
இந்த விழியத்தில் ஆங்கிலமும் ஸ்பெயின் மொழியும்
கலந்து கலந்து வருவது என்னவோ போலிருந்தாலும்.
ஆங்கில வாக்கியங்களை விடாது தொடர்ந்து செல்லுங்கள்.
ஒரு "ரோலர் கோஸ்டர்" அனுபவம் நம் அறிவு வேட்கையில்
நிகழ்வதை உணருங்கள்...நன்றி
========================================ருத்ரா இ பரமசிவன்.

சனி, 12 அக்டோபர், 2019

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.


ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.
======================================ருத்ரா இ பரமசிவன்

நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.
இது பீரா?பிராந்தியா?
எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிற‌து.
நான் கொஞ்சநேரம்
இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள்
என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன்.
அநியாயங்களை நியாயம் என்று
விற்றுக்கொண்டிருக்கும் இந்த‌
சமுதாய"ஷலக்கின்"கையில்
எப்போதும் ஒரு தராசும் கத்தியும்
ஆடிக்கொண்டிருக்கிறது!
வலுத்தவனின் ரத்தம் கசியும்
கொடூர கோரைப்பற்கள்
இங்கே நிழல் பரப்பிக்கொண்டிருக்கிறது.
அதன் கீழ்
எத்தனை ஆரவாரங்கள் நெரிசல்கள்.
அந்த கோரப்பல்லே
இவர்கள் வழி பாட்டில்...
இவர்கள் சள சளப்பு பேச்சுகளில்...
இவர்கள் வாழ்க்கை ஓட்டங்களில்...
ஏன் இது இவர்களின் "புரிதல்" பரிமாணங்களில்
விழவில்லை.
டிவிக்களில்... 4ஜி கைபேசிகளில்...
அதன் காமிராவின் அசிங்கப்பார்வையின்
ஏதோ சில கோணங்களில்...
இவர்கள் எதைத்தேடுகிறார்கள்?
மனிதனை மனிதன் செய்யும்
மௌனமான கசாப்புகள்
ஏன் இந்த மனத்திரைகளில்
அழுத்தமான பிம்பங்களாக பதியப்படவில்லை?
கொத்து கொத்தாய் கொலைகள்
சிற்றினங்களை
பேரினம் அப்படியே பிரியாணி பண்ணி சாப்பிடும்
அக்கிரமம் அநியாயம்...
அவை கலர் கலராய்
ஊடகங்களில் வாந்தியெடுக்கப்பட்ட போதும்
மனம் மரத்துப்போனவர்களாய்
சாலைகள் தோறும் ஈசல்கள் அப்பி அப்பி செல்வது போல்
எங்கே இவர்களின் பயணம்....இலக்கு?
"போதும்..போதும்
உன் புலம்பல்களையே
போதையாக்கி..
இப்படியும் ஒரு பாசாங்கா?"
திடீரென்று கோபம் முறுக்கேறுகிறது.
கண்ணாடிக்கிண்ணம்
உடைந்து தூள் தூள் ஆகிறது!
அந்த ரத்தச்சிதிலங்கள்
சிலந்திப்பூச்சி வலையாய்...
என் காரின் முகப்புக்கண்ணாடியில்!
எதுவும் எனக்குள் இன்னும்
அடங்கவே இல்லை.
அதற்குள் அந்த
"டமார்".
ஒரு விபத்து நிகழ்ந்துவிட்டது.
அந்த பிரம்ம முகூர்த்தத்தில்
ரெண்டு கடவுள்கள் மண்டையில்
தேங்காய் உடைத்துக்கொண்டனர் போலும்!
சிவப்புச் சகதியாய்
அந்த சிதறு தேங்காய்கள்.
இந்தக்குப்பையைக்கொண்டு
என்ன செய்யப்போகிறார்கள்?
காவலர்கள் சாக்பீஸில் வரைந்த‌
வட்டத்துள் கிடந்தேன்.
ஈக்களை நான் மொய்த்துக்கொண்டு!

===============================================
மீள்பதிவு..28.01.2017


வியாழன், 10 அக்டோபர், 2019

வெள்ளிப்பிழம்பில் ஒரு பிரசவம்.






வெள்ளிப்பிழம்பில் ஒரு பிரசவம்.
================================================
ருத்ரா இ பரமசிவன்.



அமெரிக்காவில்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்
ராக் ஃ பீல்டு எனும்
மலை ஓரப்பூங்காவில்
கீற்றுக்கூந்தலை
தலைவாரிக்கொள்ளும்
இரு மரங்களைக்கண்டேன்.
சூரியனின் வெள்ளிக்கதிர் கொண்டு
செய்யப்பட்ட "சீப்பில் "
அவை ஒப்பனை செய்யும் அழகில்
மயங்கிப்போனேன்.
சூல் கொண்ட மகளிர் போல்
கனவுகளை
பாரம் சுமந்துகொண்டிருந்தன அவை.
இன்னும்
சற்று நிறத்தில்
"அந்தியின்" கன்னிக்குடம் உடைந்து
சிவப்பாய் வழியும் வானத்துக்கு
மறைப்பு காட்ட வந்திருக்கும்
நீலத்திரையாய்
வானச்சீலை
பின்னணி காட்டும் சித்திரத்தில்
இந்த பிரபஞ்சத்தின்
பிரசவ விளிம்பு
மௌனத்தின் வலியை
ஒலியில்லாமல்
ஒலி பரப்பிக்கொண்டிருக்கிறது.
ஒளியின் வெள்ளிப்பிழம்பில்
கண் கூசுகிறது.
பெருவெடிப்பு எனும்
"பிக் பேங்கின் "
பிஞ்சுத்துடிப்புகள்
கீற்றுகளின் சல்லடையில்
ஒழுகி ஒழுகி
சொட்டும் அந்த
தேன் காட்சியை
இந்தக்காகிதத்தில்
அந்த பேனா
சப்புக்கொட்டி சப்புக்கொட்டி
சொற்களைக்
கொட்டித்தீர்த்தது.

====================================================





தனுஷ்

தனுஷ்
===================================================ருத்ரா

நடிப்பு என்றால்
கொழுத்த உடல் காட்டி
கொந்தளிப்பை நெளிய விடுவதா?
இல்லை.இல்லை.
கரப்பான் பூச்சிபோல்
ஒல்லி உடம்பும் கூர் மீசையும்
வைத்துக்கொண்டும் கூட‌
சிலிர்க்க வைத்து
புலி உறுமல்களை
விழி வழியே காட்டி
தியேட்டரையே கிடு கிடுக்கவைப்பதும் கூட‌
அற்புதமான நடிப்பு தான்.
தனுஷ் படங்கள்
அத்தகைய நடிப்பின்
"சேட்டலைட் சித்திரங்களை"
அடுக்கி வைப்பட்ட ஆல்பம் எனலாம்.
ஆனால்
அசுரன் என்பது
நில உரிமையின்
நெருப்பு வேட்கையின்
ஒரு தமிழின்"வெக்கை" ஆகும்!
பூப்போல
எழுத்தையே எரிமலை ஆக்கிய
பூமணியின் பேனாவுக்குள்ள்ளிருந்து
கன்னிக்குடம் உடைத்தது
வெறும் மை அல்ல.
சமுதாய நீதியின் தாகமெடுத்த‌
லாவா அது.
பஞ்சமி நிலம் என்ற‌
சொல்லில்
சினை கொண்டிருப்பது
ஆயிரம் குருட்சேத்திரப்போர்கள்.
"எல என்னத்தல பேசிகிட்டுருக்கே
பொடதியிலே ரெண்டு குடுத்தாத்தாம்ல‌
நீயெல்லாம் அடங்குவெ"..
தாமிரபரணியின் பளிங்குநீருக்குள்ளும்
படுத்திருக்கும்
அந்த ஆதிக்கச்சுரண்டலின்
குரல்கள் நமக்கு
நன்றாய்க்கேட்கின்றன.

============================================================

சவ்வூடு பரவல்.

 
                                                                                                                                                       ஓவியம்: ருத்ரா 


சவ்வூடு பரவல்.

=====================================ருத்ரா இ பரமசிவன்



உன் இதயம் இங்கே

வந்து விட்டது.

உன் சிரிப்புக்கொத்தைக்கூட‌

உருவிக் கோர்த்து

கழுத்தில் மாட்டியிருக்கிறேன்.

சுண்டியிழுக்கும்

உன் கண் தூண்டில்கள் கூட‌

என் உள்ளங்கைக்கடலில்

என் கண்ணாடி மீன்களைத்தான்

சுழற்றிக்கொண்டிருக்கின்றன.

உன் இனிய சொற்கூட்டம் எல்லாம்

என்னை மொய்த்த‌

தேன்சிட்டுகளின்

ஒலிப்புகளாய் என்

கண் மூக்கு காது வாய் தொண்டை

என்று

இன்பக் க‌மறல்களில்

என்னை திணறடித்துக்கொண்டிருக்கிறது.

எந்தக் கணவாய் வழியாய்

இங்கே ஆக்கிரமிப்பு செய்தாய்?

தெரியவில்லை.

அங்கே இருந்து இங்கே

ஊடுருவி வர‌

என்ன "சவ்வூடு பரவல் முறையை"

தேர்ந்தெடுத்தாய்?

ஆம்

இப்போது புரிகிறது

ஒரு கள்ளப்பார்வை ஒன்று

அனிச்சமலர்கள் கொண்டு

பின்னி வைத்திருப்பாயே!

அந்த அமுதச்சல்லடை வழியே

என் உயிர் அங்கு உன்னிடம்

நிரவி விட்டதே!

மீண்டும் அந்த சல்லடைப்பார்வையை

வீசி விடு!

நம் இரு உயிர்களும்

குழைந்து ஒன்றாய்

கசியட்டும் நம் உள்ளத்தில்!


=====================================================================
மீள்பதிவு.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

அமைதி காக்கும் ரஜனி.

அமைதி காக்கும் ரஜனி.
=========================================ருத்ரா


https://tamil.oneindia.com/videos/rajinikanth-keeps-mum-on-the-case-against-maniratnam-and-48-others-697504.html?desktop_home_slot_2

கபாலியில் வெகுண்டெழுந்தீர்கள்.
காலாவில் புயல் ஆனீர்கள்.
பேட்ட யில் புரட்சி செய்தீர்கள்.
அது ஒன்றும்
ஸ்டெர்லைட் ஆலை போரட்டம் அல்ல.
ஆனாலும்
கோடம்பாக்கத்து
பொம்மைத் துப்பாக்கியை வைத்துகொண்டு
தூள் கிளப்பினீர்களே.
உங்கள் கோடம்பாக்கத்து
சக கலைஞர்கள்
ஒரு தர்மத்தை நிலைநாட்ட‌
கடிதம் தானே எழுதினார்கள்.
இந்த ஜனநாயக செயலுக்கு
சிறைக்கம்பிகளா?
இதே கோடம்பாக்கத்திலிருந்து
ஒரு "தளபதி"யாக‌
உங்களை உருவாக்கியவருக்கும்
கை விலங்குகள் நீட்டுகிறார்களே!
"நட்புன்னா உனக்கு
என்னன்னு தெரியுமா"
என்று உங்களை ஒரு
நெருப்பில் உயிர்ப்பித்து
அந்த பஞ்ச் டைலாக்கில்
உங்களை ஒரு சிகரத்துக்கு
வார்த்தெடுத்தாரே!
எல்லாம் வெறும் கால்ஷீட் தானா?
வெறும் பாக்ஸ் ஆபீஸ் மத்தாப்புகள் தானா?
சூப்பர்ஸ்டார் அவர்களே
சினிமா பார்க்கிற தமிழின்
இந்த மண்புழுக்கள் எல்லாம்
உங்கள் எதிரே
நெளிந்துகொண்டிருப்பதால் தான்
இந்த
தமிழும் தமிழ்நாடும்
நசுக்கப்பட்டால் கூட‌
உங்கள் ஆத்மீக அரசியல் எனும்
ஸ்ட்ரா போட்டு
ரத்தம் உறிஞ்சும் விளையாட்டை
நடத்தப்பார்க்கிறீர்கள்.
உங்களை எப்போதும்
நாங்கள் பார்ப்பது
சூப்பர் ஸ்டாராகத் தான்.
சூப்பர் வைரஸ்ஸாக அல்ல!
அந்த காமிரா சிற்பி
"ஸ்டார்ட் ஆக்சன்"என்று
சொன்னால் தான்
உங்கள் நரம்புகள் புடைக்குமா?
சிந்தனை செய்யுங்கள்
ரஜனி அவர்களே!

===========================================================


இடநிலைஇயல் அளபெடை (டோபாலாஜிக்கல் குவாண்டம்)

Figure
Figure Figure Figure
  • Figure Figure





















இடநிலைஇயல் அளபெடை (டோபாலாஜிக்கல் குவாண்டம்)

===================================================ருத்ரா இ பரமசிவன்

அளபடை (குவாண்டம்) இயற்பியல் அணுக்கருவின் உட்துகள்களிலிருந்து விண்வெளியியலின் முதல் பெருவெடிப்பையும் (பிக்பேங்க்) தாண்டி காலவெளி (ஸ்பேஸ் டைம்) அற்ற ஒரு புலத்துள்ளும் நுழைகிறது.இந்த அளப்படைக்கு காலூன்ற கால்கள் ஏதேனும் உண்டா? அதாவது அதற்கு  நின்று நிலைத்து இயங்கும் ஒரு இடத்தன்மையின் மெய்த்தன்மை (லோக்கல் ரியாலிட்டி) உண்டா? என்ற வினாக்கள் இன்னும் விடையின்றி தொங்கலில் தான் உள்ளன.அப்படியானால் இதை நாம் சாதாரண "வடிவ கணித தளத்தில்" (ஆர்டினரி ஜியாமெட்ரிக் பிளாங்க்) நிறுத்திவைத்து ஆய்வு செய்ய முடியுமா? ஹெய்சன்பர்க் என்ற விஞ்ஞானி இயலாது என்று கைவிரித்துவிட்டார்.அளபடை என்பது "கழுவின தண்ணீரிலும் ஒரு நழுவின மீனாகத்தான்" இருக்கும் என்கிறார்.துகள் நகர்ச்சி எனும் இயக்கவியல் (டைனமிக்ஸ்)

அளபெடை இயக்கவியல் மூலம் அளக்கப்பட முடியாது என்பதே அந்த அளபெடை இயக்கவியலின் அடிப்படை.



மனிதனின் மூளை விரிவு என்பது இந்த பிரபஞ்சத்தின் நன்கொடை ஆகும். கடவுளியலை கண்டதும் அது மூளையே. அது இருப்பதை கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதும் அதுவே.விடை வரும் வரை அதை இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதும் அதுவே.



மனிதன் கண்டுபிடித்த ஒரு ஒப்பற்ற வடிவியல் கணிதம் டோப்பாலஜி எனும் "இடநிலைக்கணிதம்" ஆகும்.கண்கள் காண்பதை கைகள் வரைந்து சூத்திரப்படுத்திக்

கொள்வதே இது காறும் நாம் அறிந்த ஜியாமெட்ரி எனும் வடிவகணிதம். ஆனால் நம் மனதுள் அறியும் (இன்ட்யூஷன்) வடிவங்களை ஒரு இடத்தன்மைக்குள் (டோபாலாஜி) கொண்டு வருவதே இந்த புதிய வடிவகணிதம் ஆகும். இது அடிப்படையாய் சில கோட்பாடுகளை வகுத்துக்கொண்டு அதன் மீது வடிவகணிதத்தை அமைக்கிறது.

அதனால் இது ஆக்சியோமெட்ரிக் ஜியாமெட்ரி (axiometric geometry) எனவும் அழைக்கப்படலாம்.



மேலே பார்த்த எந்த பிடிக்கும் அடங்காத அந்த முரட்டுக்குதிரையான அளபெடை அளவீட்டை (குவாண்டம் மெஷர் ) இந்த டோப்பாலஜியின் இடைநிலைக்குழைவு வெளியில் (டோபாலாஜிக்கல் ஸ்பேஸ்) வைத்து ஒரு கை பார்த்துவிடலாம் என்று இயற்பியல் கணிதமேதைகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். இதற்கு அவர்கள் பயன்படுத்தும் நுண்கணிதம் "டோபாலஜிக்கல் என்ட்ரோபி" (இடைநிலை இயலின்

தாறுமாறு அமைப்பு அளவியல்) ஆகும்.



இது என்ன? என்ன? என்னை?

ஆம் கேள்விகள் எனும் "வேல் முனைகள்" தீட்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்த மின் மடலில் பார்க்கலாம்.



==================================================================

கீழ்க்கண்ட இணைய தளத்துக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி:



Detecting Topological Order in a Ground State Wave Function
Michael Levin and Xiao-Gang Wen
Phys. Rev. Lett. 96, 110405 – Published 24 March 2006
==========================================================================



திங்கள், 7 அக்டோபர், 2019

கீழடி 4

கீழடி 4
============================================ருத்ரா

"அது தமிழ் நாகரிகம் இல்லை.
பாரத நாகரிகம்...."

இப்படி அப்படி என்று
நீங்கள் எப்படி
புரட்டி போட்டாலும்
அது
நெய்தல் தமிழர்களின்
பரதவ நாகரிகமே
பாரத நாகரிகம் ஆயிருக்கலாம்.
ராமனின் கதையை எழுதுவதற்கு முன்
அந்த வேடன்
மரவ மரம் எனும் மராமரங்களிடையே தான்
எழுதத் தொடங்கினான்.
சங்கத்தமிழின் ஓலைச்சுவடிகளே
மரவ மற்றும் குரவ மரங்களை
குறிப்பிடுகின்றன.
யாழ் எனும் இசைக்கருவியிலிருந்து
பண் ஒலிப்பவர்கள்
யாழர்கள் அல்லது பாணர்கள்.
அதில் ஒரு யாழன் "வியாழன்" ஆனான்.
ழகரம் நாவில் வழுக்கியதால்
வியாசன் ஆனான்.
சொற்களில் ஆழ்ந்து அகழ்வாராய்ச்சி
செய்தாலே...
கல் வெட்டுகள் தேவையில்லை
இந்த சொல்வெட்டுகளே போதும்.
இந்த செம்படவச்சியின் மகனின்
தீட்டு பட்டது தானே
வேதங்களும் மகாபாரதமும்.
தமிழ்ப்பரதவர்களே
பாரத நாகரிகத்திற்கு
விதையூன்றிவர்கள்.
தோண்டத்தோண்ட‌
தமிழ் மண்ணின்
விதைகள்
கதைகள் பல சொல்லும்!

================================================================

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

கீழடி 3

கீழடி 3
===============================================ருத்ரா.

தந்தத்தில்
தாயம் உருட்டும் காய்கள்.
தங்கத்தில் அழகிய‌
காதணிகள்.
பானை ஒடுகளில்
தமிழ் தொல்லெழுத்துக்கள்.
இவ்வளவும்
கி.மு 600 ஆண்டுகளின்
காலத்திற்குட்பட்டவை.
இன்னும் சுமார்
மூன்று அடிகள் தோண்டினால் என்ன?
என்னவா?
தமிழின் முதல் சூரியன்
அங்கு கண்விழிக்குமே!
போதும்!போதும்! மூடுங்கள்.
தமிழர்களே
மையம் இந்தியில்
அரசாணை பிறப்பித்து விடலாம்.
தமிழ் என்பது
உன் மொழி மட்டும் அல்ல.
உன் உயரம்.
உன் ஆழம்.
உன் அகலம்.
தமிழா!
ஏன் உன் சிந்தனை மட்டும்
சரஸ்வதி பூசையின்
சுண்டல்களை கொறிப்பதில்
மட்டும்
மண்டிக்கிடக்கிறது?

======================================================



வெள்ளி, 4 அக்டோபர், 2019

க‌ல்

க‌ல்
========================================ருத்ரா

வேகமாக நடைப்பயிற்சியில்
நடந்து வந்து கொண்டிருந்தேன்.
நடைபதையே
பச்சை ரத்னக்கம்பளம்
விரித்தாற்போல்
புல் படுக்கை அணிவகுக்க‌
மிகவும் அழகாய் இருந்தது.
அழகில் மூழ்கி
கவனம் பிசகினேன்.
கால் இடுக்கில்
ஒரு கல் இடற
தடுக்கி விழுந்தேன்.
விழுந்த இடம்
ஒரு பிள்ளையார் சிலை.
சிறிதாக புல் மண்டிப்போய்
இருந்தது.
இருந்தாலும்
பூசையின் விபூதி குங்குமம்
அதை அடையாளம் காட்டியது.
உடனே
பிள்ளையாரப்பா!
மண்டையில் அடிபடாமல்
காப்பாற்றினாய்.
தலையை குட்டிக்கொண்டு
தோப்புக்கரணம் போட்டேன்.
அடி பட்டிருந்தால்..
என்ற "ப்ராபபளிட்டி"தான்
அங்கே கடவுள்.
அடி படாது
என்ற ப்ராபபளிட்டி
அங்கே கடவுள் இல்லை.
நமக்கேன் வம்பு?
கடவுள்
என்பதும்
கடவுள் இல்லை
என்பதுமாய்
பின்னிப்பிணைந்த‌
ப்ராபபளிட்டியைப்பற்றி
நாம் எதற்கு
ஈக்குவேஷன் எழுத வேண்டும்?
கபாலத்தில் அடி என்பது
கபால மோட்சம் எனும்
மரணத்தின் முற்றுப்புள்ளியாகி விட்டால்?...
பிள்ளையாரப்பா..காப்பாற்று..
என்று
மீண்டும்
விழுந்து கும்பிட்டுவிட்டு
கிளம்பினேன்.
சின்னக்கல் இடறிவிட்டது.
பெரிய கல் கும்பிடவைத்தது.
இயற்கையின் கல்லுக்கும் தெரியும்
எப்படி
அரசியல் பேச வேண்டும் என்று!

====================================================


செவ்வாய், 1 அக்டோபர், 2019

எல்லாம் இங்கு தமிழ்


எல்லாம் இங்கு தமிழ்
============================================ருத்ரா

வெண்ணெய் திரளும்போது
தாழி உடையும் கதையாய்
தமிழ் ஒற்றுமை
ஓங்கும் போது
திராவிடம் ஏதோ
அயல் சொல் என்று
புரளி கிளப்பும்
சூழ்ச்சியின் ஒரு சூறாவளி
கருமையம் கொள்ளுமாறு
சில அரசியல் பேச்சுகள்
உலா வருவது
தமிழனின் புறநானூற்று வாளை
தமிழனின் தலையிலேயே
கூர் தீட்டிப்பார்க்கும்
செயல் அன்றி வேறல்ல.
நீர் என்று பொருள்படும்
திரவம் என்ற சமக்கிருதப்பெயர்
திரை எனும் பொருள் தரும்
தூய தமிழ்ச்சொல் தான்.
திரைவியத்தமிழன் திரைகடல் ஓடி
திரைவியம் கொண்டு வந்தான்.
அவனே "திரைவிடன்"எனும்
திராவிடன் ஆனான்.

உலகம் எல்லாம் சென்று
தமிழின் புகழ் வளர்த்தான்.
"தரவத் பாணி" என்று ஒரு சொற்றொடர்
ரிக் வேதத்தில் வருகிறது.
"த்ரவத் பாணி" அதாவது
கடல் அலைகளைப் போல‌
விரைவாக பாய்ந்தோடுபவன்.
அவர்களை எப்படியாவது
அழித்துவிடு இந்திரா
என்று ரிக் வேதம் ஒப்பாரி
இடுகிறது அதன் பாடல்களில்.
அந்த திரைவிடன் தான்
சிந்துவெளித்தமிழனாய்
உண்மையிலேயே
தமிழன் உலகின் எல்லா ஒலிப்புகளையும்
உருட்டி திரட்டி
ஒரு மொழிவடிவம் தந்து
வரி வடிவம் தந்தான்.
அதுவே "சமக்கிருதம்"
தமிழுக்கு ஒத்து (சமம்) செய்யப்பட்டு
சமைக்கப்பட்டது.
கரம் எனும் சொல் கூட தமிழ் தான்.
கரத்தால் எழுத்தாணி கொண்டு
ஓலையில் எழுதப்படுவது காரிகை எனப்படும்
நாம் காரியம் என்று சொல்லுவதும்
கரத்திலிருந்து வந்தது தான்.
கரம் கிருதமாய் இங்கு மாறி
சமக்கிருதம் ஆனது.
சம +கிருதம் என்பதில்
இடைச்சொல் (சந்தி) அங்கு
"ஸ்"ஆகும்.
சரி.அந்தக்கதைகள் இருக்கட்டும்.
உலக ஒலிப்புகளை திரட்டி
மொழியாக்கிய‌
தமிழனின் அந்த சமக்கிருக்கிருதமும்
அவன் பங்காளி மொழிதான்.
இந்தியாவின் எல்லாமொழிகளும்
தமிழனின் பங்காளி மொழிகள் தான்.
உழக்கில் கிழக்கு மேற்கு பார்ப்பது தான்
திராவிட மொழிகளான‌
தெலுங்கு கன்னடம் மலையாளம்
மற்றும் அதனோடு சேர்ந்த மொழிகளிடம்
பகைமை கொள்வது.
அந்த மொழிகளில் சமக்கிருதம்
மிக மிக அதிகமாக இருப்பதால் தான்
அவை தமிழை வெறுக்கின்றன.
தமிழன் மீது
எப்போதும் அவன்
"வளர்த்த கடாக்கள் தான்"
மார்பில் பாய்கின்றன.
இந்த வரலாற்றுக்காயங்களையும்
விழுப்புண்களாக ஏந்தி
வலம் வருபவனே தமிழன்.
எப்படி தன் காயங்களை
தானே நக்கிக்கொண்டு
சிங்கம் சிலிர்த்துக்கொண்டு எழுகிறதோ
அப்படியே
தமிழ்ச்சிங்கங்கள்
திராவிட உறுமலுடன்
வீறிட்டு எழவேண்டும்.
சூழ்ச்சி வலைகள் யாவும்
அழித்தொழிக்கப்பட்டு
நம் வரலாற்றுச்சிறப்பும் தொன்மையும்
ஓங்கி உலகளந்து
சுடர்ந்து ஒளி வீசவேண்டும்.

================================================================