சனி, 9 பிப்ரவரி, 2019

"உத்தம வில்லன்" கமல் அவர்களே

"உத்தம வில்லன்" கமல் அவர்களே
=================================================ருத்ரா

கமல் அவர்களே.
உங்கள்
அருமையான நடிப்பும்
பாத்திரமும்
கதைக்களமும்
அந்த படத்துக்கு
ஒரு சர்வதேச அங்கீகாரத்தை
பெற்றுத்தந்திருக்கிறது.

ஆனால்
இந்த ஓட்டு அரசியலில்
உங்கள் தராசு மய்யம்
ஊழல் இல்லாத‌
உலகம் நோக்கி
ஊர்வலம் போவதாய்
ஒரு படம் காட்டுகிறது.


தமிழ் திராவிடம்
சிந்துவெளி நாகரிகம்
இதையெல்லாம்
தந்திரமாய்
நீர்த்துப்போகச் செய்ய‌
ஒரு உத்தம வில்லனாய்
நடை போடுகிறீர்களோ
என்ற ஐயமே
உங்கள் நீதி மய்யம்.

உங்கள் அப்பாவுக்குள்
ஓடிய காங்கிரஸ் ரத்தம்
உங்களுக்குள்ளும் ஓடுகிறதாமே!

ஒரு வியூகத்துள் வியூகமாய்
அம்பது வருட திராவிட நிழலை
அழித்துப்பார்க்க‌
ஒரு ரெண்டாம் கிளாஸ் பையனாய்
கையில் "இந்த ரப்பரை" தூக்கிக்கொண்டு
திரிகின்றீர்கள்.

திராவிடதுக்குள் தமிழ்.
தமிழுக்குள் திராவிடம்
இது நெருப்பு வரலாறு.
இந்த நம்மவர்கள்
சினிமா குத்தாட்டம் போட்டாலும்
இவர்கள் திருவள்ளுவரின் கொக்குகள்.
"குத்தொக்க சீர்த்தவிடத்து"
வியூகங்கள் நன்கு அறிந்தவர்கள்.


என் ஓட்டுகள் வேண்டுமானால்
ஊழல் கறை படிந்த‌
திமுக கூட்டணியை கழற்றிக்கொண்டு
வாருங்கள் என்று
காங்கிரஸைக்கூப்பிடுகிறீர்கள்.


களத்தூர் கண்ணம்மாவில்
பால் மணம் மாறாத
பிஞ்சாய் கை கூப்பி பாடி
உருகவைத்தீர்கள்!
"சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே "
என்ற கீதத்துடன்
நாம் சுதந்திரம் பெற்ற கையோடு
நம் டி டி கே ஒரு
முந்த்ரா ஊழலில் கறை படிந்து
காங்கிரசையும் கறை படியச் செய்த
சரித்திரம் பற்றி
யாரும்
உங்களுக்குச்  சொல்லவில்லையோ?

ஊழலை
ஆயுத எழுத்தாய்க்கொண்டு
நீங்கள்
ஆயத்தப்படுவதில்
யாருக்கு இங்கு மறுப்பு இல்லை.
தமிழ் மண்
சம்ஸ்கிருத மாஃ பியாக்களால்
மணல் அள்ளப்படும்
அநீதியை தடுத்து நிறுத்துவதே
தமிழனின்
தற்போதைய கடமை.

==============================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக