திங்கள், 4 பிப்ரவரி, 2019

கல்கத்தாவில் என்ன நடக்கிறது?

கல்கத்தாவில் என்ன நடக்கிறது?
===============================================ருத்ரா


மம்தா பானர்ஜி
ஒரு சிங்கம் ஆனது
ஒரு வினோத பரிணாமம்.
அது நாடகம்!
அது வேடம்!
என்பதெல்லாம் இருக்கட்டும்.
இப்போது
ஒரு கொடும் அசுரன்
கோரைப்பல் கொண்டு
பொது மத மனம் கொண்ட‌
அல்லது
ஒரு மதசார்பற்ற‌
அரசியல் சட்ட அமைப்பையே
சுக்கு நூறாக கிழித்தெறிய கிளம்பிவிட்டானே!
அதைத்தடுத்து நிறுத்தும்
ஜனநாயகக்கடமை
மக்கள் போராட்டத்துக்கு
இருக்கிறது.
இந்த ஜனநாயக வில் அம்புக்குள்
"மீன மேஷம்" பார்ப்போமானால்
அப்புறம்
அந்தப்பகாசுரன் வயிற்றுக்குள்
உங்கள் ஓட்டும் ஓட்டு சார்ந்த‌
எல்லா நியாயத்தராசுகளும்
விழுங்கப்பட்டு விடும்.
மலைப்பாம்பின் வயிற்றுக்குள்
போன பிறகு
மம்தா நாடகமும் வேடமும் பற்றி
முணு முணுக்க கூட முடியாது.
சிறு பகைவனோடு சேர்ந்து
பெரும்பகைவனை அழிப்பது தானே
போராட்ட வர்க்கத்தின் "ஸ்ட்ரேட்டஜி"
குட்காவுக்கு நடக்கும்
பெரும்போர் பற்றி நமக்குத்தெரியும்.
ஜனநாயகம் எனும் பெரும் பாரதப்போரில்
அது வேறு அத்தியாயம்.
அதற்கும் வியாசர் போல்
வேறு ஏதாவது உபகதை அல்லது உட்கதை
சொல்லிக்கொள்ளவேண்டும்.
மொத்தத்தில்
"தர்மத்தின் வாழ்வுதனை"
சூது கவ்வும் என்று
ஒரு போராட்டப்பாராயணம்
பண்ணித்தான் ஆக வேண்டும்.
தர்மமும் அதர்மமும்
வெறும் பகடைக்காய்கள் என்று
தெரிந்த பிறகும்
கண்டிப்பாய் தெரிந்த அந்த தர்மத்தை
கண்டிப்பாய் தெரிந்த இன்னொரு
அதர்மம் கொண்டு
அழிப்பதே தர்மத்தின் தர்மம்.

====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக