வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

ராகுல் + மோடி= பட்ஜெட்

ராகுல் + மோடி= பட்ஜெட்
========================================ருத்ரா


ஜனநாயகம் எனும் ஓட்டுகளின்
காடுகளில்
நடந்த அம்புவிளையாட்டுகளே
இந்த பட்ஜெட்.
ராகுல் முந்திக்கொண்டு
ஒரு அம்பு விட்டார்.

இந்தியாவின் எல்லா ஏழை மக்களுக்கும்
கட்டாயமாக
ஒரு உறுதியான‌ வருமானம்
வங்கியில் போடப்படும் என்றார் .
அவ்வளவு தான்
கிலி பிடித்து
மோடி கூட்டத்தார்
சும்மா மேஜையை தட்டி தட்டி
அறிவித்து விட்டார்கள்.
பட்ஜெட் எனும்
அந்த தேர்தல் அறிக்கையை.
அதுவும்
இதுவரை காட்டி காட்டி வீசிய
அந்த பொன் தூண்டில்களை!

விவசாயிகளுக்கு வருமானம்.
வருமான வரி உச்சவரம்பு உயர்வு
முறைசாரா ஊழியர்களுக்கு பென்ஷன்
இத்யாதி இத்யாதி.
அவருக்கு வெற்றி பெற்று வந்தால் தான்
பொறுப்பு.
இவருக்கோ
அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்
அவர் வந்தால் தலையை பிய்த்துக்கொள்ளட்டும்.
என்று ஒரு திருப்தி.
அரசியல் சாணக்கிய கணக்கில்
நம் ரெண்டு கண்ணு போனாலும்
அவர்களுக்கு ஒரு கண்ணு போகுமே
என்ற கணக்கு தான்.
இவர்களுக்கு எப்போதுமே
ராமரும் சூர்ப்பனகையும் 
சூ மந்திரக்காளிகளும் போதும்
மக்களுக்கு  காவிச்சாயமேற்ற.
ராகுல் தான்
எல்லா முரண்பட்ட‌
கூட்டணிகளையும் தாண்டவேண்டும்!

ஆக மக்களுக்கான
இந்த சலுகைகளையெல்லாம்
அந்த ஓட்டுப்பெட்டி எனும்
கணினிக்கிணற்றில் போட்டு விட்டார்கள்.
இனி
நம் மதிப்பிற்குரிய தமிழிசை அவர்களின்
கணீர் கணீர் குரல்களில்
பரல்கள் ஒலிக்கும்.
ஆனால் அவை நம் தமிழின்
சிலம்புப்பரல்கள் அல்ல.
நம் இமய வரம்பன்களின்
எழுச்சிக்குரல்களும் அல்ல.

அண்ணே !கொஞ்சம்
சும்மா இருங்கண்ணே !
கிடைக்கிறது கிடைக்கட்டும் !

ஒட்டுப்பூச்சிகளுக்கு
கிளுகிளுப்பு தாங்க வில்லை.

"எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் தானே"
நிச்சயம்
கனம் தேர்தல் ஆணையத்தார் அவர்களுக்கு
ஒரு வேண்டுகோள் வைப்போம்.
ஓட்டுப் பட்டன் தட்டியவுடன்
ஆளுக்கொரு கிரீடம்(அட்டையில் தான்)
தரவேண்டும்.
ஆம்.
நாங்கள் "எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்"

=============================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக