ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

யார்..யார்..யார்..

யார்..யார்..யார்..
=======================================ருத்ரா

நான் யார்?
அல்லது நீ யார்?
அல்லது
அவன் அல்லது அவள் யார்?
இந்த தன்மை முன்னிலை படர்க்கை
என்ற இலக்கணக்குறிப்புக்
கொடிகளோடு
பின்னிக்கிடக்கின்ற‌
அந்த கேள்வி
எரிந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த தீக்குச்சியை கிழித்துப்போட்டு விட்டு
எல்லாவற்றையும்
உரித்துபோட்டுவிட்டார்
அந்த மாமனிதர் ரமணர்.
அந்த உட்குரலை
எப்படி ஒலிப்பது?
அந்த உள்ளொலியை
எப்படிக்கேட்பது?
பிக்பேங்க் கோட்பாட்டுக்காரர்கள்
இந்த பிரபஞ்சத்தில்
யாரோ ஒருவர்
சுருதிப்பெட்டியை இயக்கி
கொண்டிருப்பது போல்
ஒரு பின்னணி கதிர்வீச்சு எனும்
"பேக்  க்ரவுண்ட்  ரேடியேஷன்"
கசிந்து கொண்டிருக்கிறது என்றும்
அது 3 கே டிகிரி என்றும்
கணக்கெடுத்திருக்கிறார்கள்.
அது
நம் முதுகுத்தண்டில் சில்லிடுகிறது.
நம் மூளைக்குள் ஒரு
பொறியாய் மூள்கிறது.
என்னவெல்லாமோ
எப்படியெல்லாமொ
அது
சிந்திக்க்கிறது.
இந்த ஃபேஸ் புக்கும் ட்விட்டர்களும்
கூட‌
அது துப்பிய
மூளையின் எச்சில் தான்.
ஆதலினால் மனிதா
சிந்திப்பதை நிறுத்தாதே.
அப்படி நிறுத்தினால்
உலகம் முழுவதும் ஆகிவிடும்
ஒரு மார்ச்சுவரி!

=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக