NASA sent a spacecraft straight into the sun's atmosphere - it survived
சூரியநமஸ்காரம் அதித்யஹ்ருதயம் எல்லாம்
சொல்வது இருக்கட்டும்.
"நாஸா"மனிதன் ஒரு "பார்க்கர்"எனும்
சூரிய கோள் ஒன்றை சூரியனின்
விண்ணுக்குள்
அதாவது அவன் வீட்டு வாசலுக்கே அனுப்பி
"கருகாமல்" "எரியாமல்"அவனை
வலம் வரலாமா என்று
நுழைந்திருக்கிறானே!
நம்ம வர்ண சாஸ்திர வேலி தாண்டினால் தானே
அந்த "சூரியனையே" சொல்லி சொல்லி
மகிழ முடியும்?
சூர் எனும் வியப்பு அல்லது அச்சம் என்ற
உணர்வைக்குறிக்கும்
நம் சங்கத்தமிழ்ச்சொல்
"ஸூர்ய"னாய் அன்னியப்பட்டு நிற்கும் போது
நாம் இன்னும் பல்லாயிரம் மைல்கள்
அறிவியற்காடுகளை கடக்கவேண்டும்.
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக