சனி, 11 ஜூலை, 2026

"அகழ் நானூறு ..143

அகழ் நானூறு ..143

---------------------------------------------------------சொற்கீரன் 


பொய் முழங்கு வான் பதர் தூற்றி அன்ன 

மெய் விதிர் செய்யும் காம நுணுக்கம் 

அலர்வீ இறைய ஆற்றா நோன்றல் 

அலைபடு தீத்திறம் ஐந்திறம் செய்யும் 

ஐம்பால் வகுத்த மைநிறம் பிரிய 

என்னை அவல்படு  தூக்கம் தோறும் 

தூக்கம் நிறுத்தி சமன் செய்து பார்க்கும் 

கனவும் நனவும் காய்த்தல் கூட்டி 

கனியின் தீயில்  தீஞ்சுவை காட்டும்.


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக