சனி, 4 ஜூலை, 2026

எண் குணத்தான்

 



8 Sumerian Descriptions of the Human Soul That No Religion Teaches




எண் குணத்தான் தாள்

____________________________________


வள்ளுவன் எனும் பெருமகன் நம் வாழ்வுகளின் தொகுதியை எட்டு சாறுகளில் 

பிழிந்து கொடுத்திருக்கிறான்.மனித நாகரிகத்தின் முதல் ஊற்றாக சொல்லப்படுகிறது "சுமேரிய நாகரிகம்." அவர்கள் 4000 கி.மு வில் மனித வாழ்வுகளின் முதல் மூச்சாக கருதுவதை சீ (இஸட்)என்கின்றனர். ஆங்கிலத்தில் இது மூச்சு அல்லது உயிர் அல்லது "சோல்" 

எனப்படும் "உயிர்ச்சாறு" ஆகும். சுமேரியர்கள் சொல்கிறார்கள் இது கடவுள் 

அல்ல.அவர்கள் அங்கே கிடைக்கும் உயர் தரக்களி மண் (க்ளேய்)எனும் உடல் பொருளால் செய்யப்பட்டது என்கிறார்கள்.அதற்கு "பிசைவதற்கு"பயன்பட்டது எதுவோ அதுவே குருதி (ரத்தம்) என்கிறார்கள்.அந்த களிமண் தான் ஏறக்குறைய அவர்களது மூல ஊற்றுச்சாறு ஆகும்.அதுவே அவர்களது செல்வம்.அதில் தான் தங்கள் வாழ்க்கை நடப்புகளை பதிவு செய்திருக்கிறார்கள்.அதை ஒரு வித உயர் வெப்பனிநிலையில் சுடுமுன் அதில் தங்கள் மொழியான சுமேரியாவில் அதை எழுதி சிறு சிறு அல்லது பெரும் பலகைகளாக(க்ளே டேப்லட்ஸ்) 

உருவாக்கியிருக்கிறார்கள்.மனித வாழ்க்கையின் அந்த முதல் வரலாறு அந்த களிமண் பலகைகளில் தான் எழுதப்பட்டன.நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த "எட்டு சாறுகளை"(எண் குணங்கள்)பற்றி அந்த களிமண் காகிதங்கள் நன்கு விளக்கியிருக்கின்றன.அந்த இஸட் ஒலிப்பு நம் "ழகரம்" தான்.சான்றாக "ரம்ஸான்" என்பது 

ரம்ழான்"என ஒலிக்கப்படுகிறது அல்லவா.அது ழீயா ஸீயா என்பது அங்கங்கே ஒலிக்கும் வட்டார ஒலிப்புகள் சார்ந்தது.நம் ஐயன் வள்ளுவன் அந்த ழியைப்பற்றி எண்குணத்தான் என குறிப்பிட்டிருப்பான் என நாம் கருது கோள் வைத்துக்கொள்ளலாம்

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக