வெள்ளி, 17 ஜூலை, 2026

கிறுக்கல்கள்

 

உன் எழுத்துக்களை

கிறுக்கல்கள்

என்று நீ சொல்லிக்கொண்ட‌

போதும்...

"அவற்றை 

உங்களுக்காக நான் படைக்கவில்லை"

என்று

நீ ஒரு உச்சியில் உட்கார்ந்து

கொண்டிருந்த போதும்...

எந்த விருதும் கொடுத்து

அதை கொச்சைப்படுத்திவிடாதீர்கள்

என்று

ஏதோ ஒரு பின் பின் நவீனத்துவ‌

பாணியில் நீ

உன்னையே குழப்பிக்கொண்டு

கிடந்த போதும்

கவலைப்படாதே.

நாங்கள் குழம்பிக்கொள்வதே இல்லை

அவற்றை

வாய் பிளந்து கிடக்கும்

குப்பைத்தொட்டியின்

தொப்பை வயித்துக்குள்ளே

சடாரென்று வீசி விடுவோம்.

______________________________________

குப்பைகளுக்கு

பெயர் ஒரு கேடா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக