ஆனித்திருவிழா தேருடன்
நம் ஆழ்ந்த அன்புக்குரிய
அந்த "லோ ஹிப்பு"க்கார
அந்த பாசக்கார பூத நாதனை
பார்த்தாயா தனுக்கோடி!
கவிஞர் வண்ணதாசன் அவர்கள்
அந்த பூத அண்ணனைக்குறித்து
எழுதியிருந்தார்.
உடனே நான் நம் அந்த
பாசக்கார நண்பனையும்
மற்றும் தெற்குப்பூதெருவின்
ஒரு சரித்திர வாசனையையும் பற்றி
ஒரு கவிதை எழுதி முகநூலில்
பதிவிட்டேன்.
அந்த "லோ ஹிப்" பாண்டை
நீயும் செங்கோடியும் சேர்ந்து தானே
தைத்து நம் பூத அண்ணனுக்கு
போட்டு விட்டீர்கள்.
அந்த நகைச்சுவையின் உச்ச பட்ச
ஆனித்திருவிழாவை மறக்க இயலுமா?
மறக்க முடியாத ஒரு சோகத்தை
இப்படி யாராலும்
சிரித்து சிரித்து மறைத்து
நம்மைப்போல பாசாங்கு காட்ட முடியுமா?
அந்த பூத அண்ணாச்சி வாழ்க!
___________________________________________
இ பரமசிவன்
pazaiya naatkaLai pakirnthu koNta kavithai ithu!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக