சனி, 11 ஜூலை, 2026

இசைக்குயில் ஜானகி அவர்களுக்கு எங்கள் அஞ்சலி

 இசைக்குயில் ஜானகி அவர்களுக்கு

எங்கள் அஞ்சலி

______________________________________‍


இசைக்குயிலே!

நாப்பது ஆயிரம் பாடல்கள்

என்று சொல்கிறார்கள்.

அந்த இசை மூச்சுகளின் 

வழியே எத்தனை 

கோடிக்குயில்கள் 

ராகங்களில் 

ஊஞ்சல் ஆடியிருக்கும்?

எந்த பாட்டை சொல்வது?

வானமும் கடலும்

மண்ணும் மலையும் கூட‌

மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறதே

இந்த பாட்டுகளில்!

பூக்களும் பட்டாம்பூச்சிகளும்

இன்னும் இங்கே

மொழிபெயர்த்து ஒலி பெயர்த்து

மவுனத்தையும் அமுதக்குழம்பாக்கி

இந்த அண்டத்தையும் அணைத்து

அலை விரிக்கின்றனவே!

உன் குரல்களுக்கு இங்கே

மரணம் இல்லை.

இந்தப்பாட்டுகளுக்குள்

மின்காந்தம் பாய்ச்சிக்கொண்டே

இருக்கிறாய்

இனிய தேன்மழையால் 

வருடிக்கொண்டே இருக்கிறாய்.

இறப்புக்கு மாமூல் தெய்வம் எனும்

அந்த எமன் 

உன் இசையில் எல்லாம் மறந்து போவான்.

ஆம்.

எங்களுக்கு இனி

மரணமில்லாப் பெருவாழ்வே தான்.

உன் பாடல்களில்

ஊறும் இதயங்கள் எங்களுக்குள்

துடித்துக்கொண்டே இருக்கும்.

தாயினும் சாலப்பரிந்து ஊட்டும்

இசை அம்மா உங்கள் இசை!

என்றும் எங்கள் உள்ளங்களில்

இசைக்குயில் ஜானகி அவர்களுக்கு

எங்கள் அஞ்சலி

______________________________________‍


இசைக்குயிலே!

நாப்பது ஆயிரம் பாடல்கள்

என்று சொல்கிறார்கள்.

அந்த இசை மூச்சுகளின் 

வழியே எத்தனை 

கோடிக்குயில்கள் 

ராகங்களில் 

ஊஞ்சல் ஆடியிருக்கும்?

எந்த பாட்டை சொல்வது?

வானமும் கடலும்

மண்ணும் மலையும் கூட‌

மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறதே

இந்த பாட்டுகளில்!

பூக்களும் பட்டாம்பூச்சிகளும்

இன்னும் இங்கே

மொழிபெயர்த்து ஒலி பெயர்த்து

மவுனத்தையும் அமுதக்குழம்பாக்கி

இந்த அண்டத்தையும் அணைத்து

அலை விரிக்கின்றனவே!

உன் குரல்களுக்கு இங்கே

மரணம் இல்லை.

இந்தப்பாட்டுகளுக்குள்

மின்காந்தம் பாய்ச்சிக்கொண்டே

இருக்கிறாய்

இனிய தேன்மழையால் 

வருடிக்கொண்டே இருக்கிறாய்.

இறப்புக்கு மாமூல் தெய்வம் எனும்

அந்த எமன் 

உன் இசையில் எல்லாம் மறந்து போவான்.

ஆம்.

எங்களுக்கு இனி

மரணமில்லாப் பெருவாழ்வே தான்.

உன் பாடல்களில்

ஊறும் இதயங்கள் எங்களுக்குள்

துடித்துக்கொண்டே இருக்கும்.

தாயினும் சாலப்பரிந்து ஊட்டும்

இசை அம்மா உங்கள் இசை!

என்றும் எங்கள் உள்ளங்களில்

சுருதி மீட்டுங்கள்.

___________________________________________________

சொற்கீரன்.


___________________________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக