வெள்ளி, 17 ஜூலை, 2026

அந்த ஏழு மராமரங்கள்

 

https://www.msn.com/en-us/lifestyle/other/7-ancient-cultures-that-predicted-the-end-of-the-world-and-what-they-really-said/ar-AA2875co?ocid=msedgntp&pc=SCOODB&cvid=9b11361d89db4deecf21d7c4f7f1618b&ei=23


______________________________________________________________________________

அந்த ஏழு மராமரங்கள்

_____________________________________________


இந்த "இணைப்பு" (லிங்க்)

ஏழு முக்கிய தொல்லியல் 

மதக்கருத்துகளை

பேசுகிறது.

நான் இதை ஏழு மராமரங்களாக‌

கற்பனை செய்கிறேன்.

இந்து மதத்தில் வருகிற

ராமாயணம் என்ற கதையில்

தெய்வீக ராமன் 

வாலி என்ற மனிதக்குரங்கு அரக்கனை

நேரடியாக கொல்வதற்கு இயலாத வழியில்

"மறைந்திருந்து" ஏழு மரங்களை துளைத்துக்கொண்டு

போகும் அம்பின் மூலம்

வதைத்துக்கொன்றதாக வருகிறது.

கடவுள் என்னும் மிக வல்லமை வாய்ந்தவரை விட‌

வலிமையான அந்த குரங்கு அரக்கன்

ஏன் இவ்வாறு கொல்லப்பட வேண்டும்

என்ற கேள்விகளை

வரிசையாக வீசினால்

இப்படித்தான் பல கதைகள் உட்கதைகள் கிளைக்கதைகள்

காரணங்கள் தர்க்கங்கள் உண்மை போல் தெரியும் பொய்கள்

பொய்களாகவே அவதரித்து உண்மைகளை வதம் செய்யும்

கதைகள் என்று

இந்த மதங்கள் கடவுள்கள் அவர்கள் அச்சமூட்டும் 

அழிவுகளின் விஞ்ஞானங்கள் போல் தோன்றி

மருளச்செய்யும் அஞ்ஞானங்கள்

ஆகிய எல்லாமும் மூட்டைகள் கட்டிக்கொண்டு

உலா வரும் தன்மைகளை 

நாம் புரிந்து கொள்ளவேண்டும்

இதை எல்லோரும் படிக்க வேண்டும்.

மனிதன் பல லட்சம் வருடங்களுக்கு முன்

தோன்றிய போதிலும்

அவனுக்கு முன்பே தோன்றிய‌

அவனின் உள் அச்சம் எங்கிருந்து

முளை விட்டது?

அந்த அச்சம் ஒரு பிண்டமா? ஆற்றலா?

எனும் கேள்வி இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த பரிணாமமே ஒரு குவாண்டம் டைனாமிக்ஸ் 

என்பதை எல்லோரும் 

ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனாலும்

கடவுள் அச்சம் எனும் அந்த பிரபஞ்ச மொக்கையே

மொத்தப்புயலாக அல்லது சுனாமியாக‌

இந்த குவாண்டத்தை நம்மிடம் இன்றும்

கற்பித்துக்கொண்டிருக்கிறது.

இந்த கட்டுரையை ஆழ்ந்து படித்து

பயன் பெறுங்கள்.

எனது இந்தக்கட்டுரை அவரது 

கட்டுரையை  விவரிக்க வில்லை.

இதை நீங்களே படித்து

தெளிந்து கொள்ளுங்கள்.

__________________________________________________

சொற்கீரன்.


_______________________________________________________







எனது இந்தக்கட்டுரை அவரது 

கட்டுரையை அப்படியே விவரிக்க வில்லை.

இதை நீங்களே படித்து

தெளிந்து கொள்ளூங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக