ஞாயிறு, 5 ஜூலை, 2026

ஒரு கனவை உரித்துப் பார்த்த போது...

 

ஒரு கனவை உரித்துப் பார்த்த போது...

____________________________________


கல்லை உரித்து விடலாம்

கனவையா?...

குமிழிகள் கரைவதற்குத்தானே

பூக்கின்றன.

தூக்கத்தின் கிளையில்

அந்த முனகல் சருகுகளின் 

சரசரப்பில்

ஊர்ந்து செல்லும் சிற்றெரும்புச்

சுவடுகளிலா

என் சுவடிகளை எழுதச்சொல்கிறாய்?

நயாகரா நீர் வீழ்ச்சி முழுதுமே

ஒரு நீர்க்கோளமாய் 

கண்ணிமை மீது துளிகளாய்

பளிங்கின் எழுத்துக்களில்

துலங்குவதை

படிக்க முடியவில்லையே.

கனவுகள் சலங்கைகள்.

யாருடைய கால்கள் அவை?

முகமா? கண்களா?

ஜூலியா ஃப்ராக்டல் ஜியாமெட்ரியில்

புதிர்கள் 

அவிழ்வதற்கும் வரவில்லை

அறிவதற்கும் வரவில்லை.

____________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக