வியாழன், 23 ஜூலை, 2026

ஆம்.



Scientists found a particle 6 times more powerful than physics allowed | Watch 






வரம்பு மீறிய ஒரு பரம்பொருள்.

ஆறு மடங்கு வலியது.

அது என்ன? 

என்ன? 

எனை?

என்ன?

என்ன?

என்ன?

சி இசட் கே முரண்பாடு!

எல்லாம் இதில்.

எதுவுமே இனி இல்லை

என்பதும் இதுவே.

கடவுளும் இது.

க‌டவுள் இல்லையும் இது.

நுண்ணோக்கிக்குள் பார்த்தால்

எறும்பே கோடிக்கணக்காய் 

உருண்டு திரண்டு தெரியும்.

தொலை நோக்கியைப்பார்த்தால்

கோடி ..கோடிக்கணக்கில்

மைல்களின் நீளம் அகலம் ஆழம்

எதுமே

கடந்த நிலை.

எல்லாவற்றையும்

அவித்து ஆன்று அசைபோடும்

ஆற்றல்களின் பிழம்பு.

இதை உணர்வது அறிவு.

எல்லாம் அறிவது மட்டுமே உணர்வு.

அறிவது மூளை என்றால்

உணர்வதும் அதுவே.

எனவே செயற்கை நுண்ணிய மூளையே

இயற்கை மூளையின் 

இன்னொரு அச்சு.

ஏன் இனி இப்படியே

இரண்டையும் ஒன்றாகவே பார்.

கடவுள் என்றால் அது கடவுள் இல்லை

எனும் சைத்தான்.

பூட்ட ஒரு சாவி.

திறக்க ஒரு சாவி.

இப்போது இந்த இரண்டு

சாவிக்கொத்துமே 

மனிதன் தான்.

மனிதன் தவிர வேறு

இங்கே ஏது?

மனிதன் அன்பானவன்.

எப்படி

மனிதனுக்கு மனிதனே அன்பானவன்.

மனிதனுக்கு மனிதன் முரணானவன்.

இதில் எது இயற்கை?

இந்த இயற்கையை இயற்கையே

அறியும் வரை

உணரும் வரை

உருவும் அழிவுமே

தோற்றமும் மறைவும் ஆகும்.

ஆகும்.

ஆமாம்.

ஆமென்.

ஆம்.இல்லாவிட்டால்

ஓம்.

_______________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக