விர் விர் விரென்றன விட்டில்கள்.
___________________________________________
பொட்டியை கவிழ்த்தார்கள்.
மனம் போல் "எண்ணிக்"கொண்டார்கள்.
நமக்கு ஜோக்கர்களும்
அங்கே மொய்க்கும் விட்டில்களும் போதும்.
ஜோடனையில் நாற்காலி ரெடி.
மேய்ப்பவரும் அருகே
கெட்டிக்காவலாய்!
சோழிகள் குலுக்கினார்கள்.
பேரங்கள் என்றார்கள்.
குதிரையா?
ஆனையா?
ஒட்டகமா?
எந்தக்கழுதையாயிருந்தால்
நமக்கு என்ன?
மகத்தான மாட்டுத்தாவணி தான்.
எண்ணிக்கை இருந்தால் சரி.
மக்கள் எனப்படுபவர்கள்
யாரெனில்...
ஆகா! தேரோட்டம்!
ம்ம்ம்ம்
மூச்சுப்பிடித்து தேரை இழுங்கள்.
விர் விர் விரென்றன விட்டில்கள்.
எறும்புகள் மொய்த்தன.
ஈக்களும் தான்.
மடியப் போவது
நாமே
எனத்தெரியாமல்
அவை சிறகடித்து சில்லிட்டு
உதிர்ந்து வீழ்ந்தன!
__________________________________________________
யுகப்பிரியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக