ஒன்று திரண்ட மக்களை
கோடிக்கால் பூதம்
என்பார்கள்.
ஒரு புதிய யுகம் படைக்க
அந்த பூதம் தான் வேண்டும்.
ஆனால்
இது
மாய நிழல்களின்
ஜிகினா பிம்பங்களின்
வர்ண பூதம்.
நான்கு வர்ணமாவது
பேதமாவது என்று
ஜம்பம் பேசும் சனாதன
வரட்டு பிம்பங்களில்
விடியல்கள் தேடியா
படையெடுத்தீர்?
ஆதரவுக் கரங்கள் நீட்டுவது
இருக்கட்டும்.
பாசிசத்தை பாயாசமாய்
பருகக்கூப்பிடும்
குரல்களிலா
மக்கள் கீதங்களை
முழங்கப்பொகிறீர்கள்?
சிந்தனையைக்
கழற்றி வைத்துவிட்ட
பேச்சு வார்த்தைகளில்
எந்த
பேச்சுமில்லை மூச்சுமில்லை.
__________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக