வாழ்க்கையின் நுட்பம் அறிந்து தான்
வாழவேண்டுமா?
எல்லாவற்றையும் அறிந்து
உன்னை கனமாக்கி கொள்ளவா
பிறந்தாய்?
காற்றாகவே மிதக்காமல்
இந்த கல்லைக்கட்டிக்கொண்டு
நீ
எங்கே செல்ல முடியும்?
கை கூப்பி மண்டியிட்டு
கண்ணீர் மல்குவதைத்தவிர?
________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக