"தமிழுக்கும் அடம் என்று பேர்"
__________________________________________
உலகநாயகன் அவர்களே!
தமிழை
உலகத்தமிழ் என
ஒரு "ஒலிம்பிக் சுடர்"
ஏந்தியிருக்கும்
உங்கள் முயற்சி
ஒரு கலங்கரை விளக்கமாய்
ஒளியை சுழன்று சுழன்று
வீசட்டும்.
அமுது என்று
பாற்கடல் கனவுகளில்
பாய் விரித்துக்கிடந்தோமே
தவிர
தமிழ்ச்சுடரின் அடம் பிடிக்கும்
விடாப்பிடியின்
ஒரு வீரம் இல்லாதது போனதால் தான்
இத்தனை நூற்றாண்டுகளையும்
நழுவ விட்டு விட்டோமோ?
நம் கீழடிச் சாசனங்களைக்கூட
எங்கோ கீழே புதைத்து விடப்
பார்க்கும்
இந்த ஆரிய சூழ்ச்சியாளர்களின்
சதிகளை
அடித்து நொறுக்க
இந்த "அடம்" வேண்டும்.
வாழ்க தமிழ்!
வெல்க தமிழ்!
_________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக