சனி, 7 ஜூன், 2025

அதுவே போதும்.

 



அச்சமா?

வேண்டாம்.

இந்த செயற்கை அறிவு

பற்றிய‌

"பேய் பிசாசு பூதம்"

எனும் கலக்கல் "காம்ப்ளெக்ஸ்"

தேவையில்லை.

மூளை நுண்ணியத்தின்

நரம்பு பின்னலுக்குள்

தெறிக்கும் மின்னல்பாடுகளை

ஏதோ ஒரு

ஃபூரியர் உருமாற்ற"க்கணிதச்

செதுக்கல்களில்

படைப்பதே ஏ ஐ மாடல்.

வேகம்...வேகம்

ஆம் வேகத்தின் பலப்பல‌

பில்லியன் மடங்குகளை

சுருட்டி மடக்கி

ஒரு "பூச்செண்டு" ஆக்குவதே

இந்த "செயற்கை மூளைப்பூ"

அதிர்ந்து போகவேண்டாம்.

முகர்ந்து பாருங்கள்.

ஒரு சிட்டிகை

டி ஏ எஸ்  பட்டணம் பொடி தான்.

சர்ரென்று

ஒரு துணுக்கில்

ஓராயிரம் பிரபஞ்சங்கள்

உங்கள் வீட்டு

செல்ல பொமரேனியன் குட்டிகளாய்

வலம் வந்து கொண்டிருக்கும்.

முதலில்

உங்கள் பூசை புனஸ்காரங்களையெல்லாம்

தூக்கியெறிய‌

ஒரு குப்பைத்தொட்டி

தயார் செய்யுங்கள்.

சாதி மதப்பூசல்களை யெல்லாம்

அப்புறப்படுத்தி விட்டு

ஒரு அறிவியல் நமைச்சலோடு

எழுந்திருங்கள்.

அது போதும்.

அதுவே போதும்.


__________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக