இ எம் ஜே.
_________________________________________
அன்புத்தோழனே!
சொற்பொழிவுகள்
சொற்களை பொழிந்து தான்
நான் கேட்டிருக்கிறேன்.
நீ
மனிதம் எனும் ஆற்றல்
வர"லாறுகளாய்"
இந்த மண்ணுக்கு
உயிர் ஊட்டியதை
துளித்துளியாகச் சொல்லி
உழைப்பு எனும் அந்த
வியர்வைக்கடலை
அலையடிக்கச் செய்திருக்கிறாயே!
தலையணை தலையணையாக
தூங்கும்
புத்தகங்களுள் ஒன்றா
அந்த "தாஸ் கேபிடல்"?
அதற்கு உரையெழுத
எரிமலைகள் எழுந்து வரும்
அந்த வரலாற்றுக்குள் ஒரு
ஒரு வரலாறாக அல்லவா
பாட்டாளி வர்க்கத்தினூடே
ஓடிக்கொண்டிருந்தாய்.
என் கவிதை என்றால்
உனக்கு எவ்வளவு விருப்பம்?
விருதுகள் எவனுக்கு வேண்டும்?
உன் பாராட்டுக்கு முன்
அதிலும்
நீ தோய்த்துத்தந்த அந்த
"மனித நேய சமுதாய நேயம்"
எனும்
சொற்பிழம்புக்கு முன்
வேறு எதுவும்
வேண்டுவதில்லை...
விடியல் தேடும்
பேனா முனைகளுக்கு!
வீறு கொண்ட உன் உரைகளே
இன்னும் எங்களுக்கு
தடம் காட்டும்.
திடம் ஊட்டும்.
_______________________________________________
செங்கீரன்
( என்னோடு எல் ஐ சி யில் பணியாற்றிய
தோழர் இ எம் ஜோசஃப் அவர்களைப் பற்றிய
நினைவு அஞ்சலிக் கவிதை இது.)
_______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக