ஓலைத்துடிப்புகள் 27
===================================ருத்ரா
மொழிபெயர் தேஎம் இறந்து..
=============================================ருத்ரா
யாமை ஓடன்ன குடுமிகள் அறைய
கவலையாற்று நாணல் நீளல்
அளையும் குறும் புள் வண்ணச்சிறை
அலைபடுத்தாங்கு அவள் விழிச்சிட்டுகள்
அலைக்கும் என் நெஞ்சு அழலெழு துயரில்.
பொருள்கோள் நசைஇ வன்சுரம் ஊர
முளிசினை முறுக்கிய பாம்புகள் சுருள்தரு
கானம் நத்தி மொழிபெயர் தேஎம் இறந்து
கல்லிடை முள்ளிடை கொல்லாற்றுப்போக்கிடை
இடறு கலிமா நிலம் வீழ்ந்தன்ன
இடர்ப்பட்டுழியும் நின் வால்செறி எயிற்றின்
நறவொழுகு நகையின் எண்ணி எண்ணி
அடர்க்கான் படர்தர தொடர்வேன் யானே.
===================================================
பொருள் தேடி வன்சுரம் ஏகும் தலைவன் தலைவியின்
தேன் ஒழுகும் புன்னகையை எண்ணி எண்ணி
அக்கொடுங்காட்டையும் பொருட்படுத்தாது தொடர்ந்து
செல்லும்போது பாடிக்கொண்டதாக நான் புனைந்த
சங்கநடைச்செய்யுள் இது.
=======================================================
பொழிப்புரை தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக