திங்கள், 7 நவம்பர், 2022

புதுச்சேரி கடற்கரையில்

  புதுச்சேரி கடற்கரையில்

__________________________________________

ருத்ரா



முண்டாசு கட்டாத 

முறுக்கு மீசை வைக்காத‌

பாரதியாய் நடந்து கொண்டிருந்தேன்.

"புல்லை நகையுறுத்தி

பூவை வியப்பாக்கி"

விரித்திருந்த இயற்கையின்

ஒரு எம் எம் ஃபோமில்

உட்கார்ந்து படுத்து விட்டேன்.

கனவுகளும் 

அந்த நுரைமெத்தையில்

அடைத்த உருவங்களோடு தான்.

மொய்த்தன.

ஒரு புள்ளிமான் 

குட்டி மான்

முசு முசுவென்று

உருண்டை விழிகளுடன்

முத்தமிட‌

என் மீது உரசியது.

ஒரு முரட்டுச்சிங்கம்

தன் கோரைப்பல்லால் என்னைக்கிழித்தது.

ஆனால் கிழிக்க முடியவில்லை

அந்த நுரை ரப்பர் பல்லால்.

மான் குட்டி என்னை ஒரு

"ஒன்டர் லேன்டு"க்குள்

இழுத்துக்கொண்டு ஓடியது.

அதன் ஒவ்வொரு புள்ளியும்

விரிந்து பெருகி

ஒரு தனி உலகின் 

புகை மண்டலமாய்

என்னைச்சுருட்டிக்கொண்டது.

விருட்டென்று

காலைச்செம்பருதி

செம்பஞ்சுக்குழம்பை 

கடலில் கரைத்தது.

அந்த சூரியன் திடீரென்று

குளிர்ந்த ரப்பர் கோளமாய் மாறி

அதன் உதடுகள் குவித்து

என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

சூரியன் கூட நுரைப்பஞ்சின் 

ஃபோமில் வந்தா

என்னைத் தழுவிக்கொள்ள 

வருகிறது?

இன்னும் விடியவில்லையா?

தூக்கமே இந்த பஞ்சுமிட்டாய்

வானத்திலா?

திடீரென்று விழித்துக்கொண்டேன்.

சூரியன் இன்னும் மேலைத்திசையின் 

கடலுக்குள்

விழுங்கப்படவில்லை.

இப்போது அந்த புல்விரிப்பில்

வேறு இடத்துக்கு நகர்ந்து 

படுத்துக்கொண்டேன்.

ஊஹூம்..

அந்த கற்பனை நுரைமெத்தையை

கடலில் வீசி எறிந்து விட்டேன்.


______________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக