ஞாயிறு, 6 நவம்பர், 2022

நல்லதோர் வீணை

நல்லதோர் வீணை

________________________________

ருத்ரா


நல்லதோர் 

வீணை செய்தே

நலங்கெட 

புழுதியில் எறிவாயோ?

உள்ளம் மீட்டிய‌

கற்பனைகள்

உள்ளே வீணைக்காடுகள்

ஆகின.

நரம்பு சொடுக்கல்களில்

காலம் கல்லறை போய்விட்ட பிறகு

அதன் அருகே

குவிந்து கிடக்கும் சருகுகளை

சேர்த்துக்கொண்டு

என் உணர்வுகளின் 

சிக்கி முக்கிக்கற்கள் கொண்டு

என் மீதே தீப்பற்றச்செய்து

மூழ்கிக்கொள்வது போல்

இறுமாந்து இருந்தேன்.

கேதார கௌளையா?

புன்னாக வராளியா?

சாரு கேசியா?

சர புன்னை ஒலிக்கீற்றுகளா?

என் மீது அந்த யாழைச் சாத்திக்கொண்டு

கண்மூடினேன்.

ராகங்கள் 

பிரபஞ்சத்தைப்பிழிந்து

சாறு ஊற்றியது.

நான் பிணமா?

இல்லை

அது வெறும் நரம்பு விடைத்த‌

சவமா?

உயிர்க்கரைசலில்

உடல் 

வெட்டப்பட்ட பனித்துண்டுகளாய்

மிதக்க விறைத்திருந்தேன்.

மனிதனிலிருந்த‌

மனிதத்தை 

தோலுரிக்க முடியுமா?

இதற்கு இன்னும் விடையில்லை.

மனிதன் அந்த மனிதத்தை

தரிசனம் செய்தாலே போதும்.

அப்புறம் 

இந்த கோவில்கள் எல்லாம் தூள்.

இந்த சிதிலங்களின் 

அடியிலிருந்து முன‌கல்கள் கேட்கின்றன.

மனிதா!

இந்த மந்திரங்கள் எல்லாம்

என்னை சித்திரவதை செய்கின்றன.

இந்த இரைச்சல்களிலிருந்து

என்னை விடுவிக்கும் 

"மோட்சம்"

நீ மட்டும் தான்.


____________________________________________________________________

  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக