திங்கள், 7 நவம்பர், 2022

யாஅத்த மராஅத்த அவிர்சுரம் நிழற்ற

 யாஅத்த  மராஅத்த  அவிர்சுரம் நிழற்ற


___________________________________________________


சொற்கீரன்.






யாஅத்த மராஅத்த அவிர்சுரம் நிழற்ற


முள்ளிய கொடுந்தழை வானூடும் இடற‌


புற்றம் அற்றமென ஆற்று முடிச்சுள்


முடங்கிய காலை ஈயம் இனவெழூஉ


சிறைகள் பர‌த்தி சிறைகள் வீழ்க்கும்.


கொல்லிய அடர்கல் கொடுந்தொழில் 


அலைஞர் இடைப்படூஉ நிலையும்


கொளீஇ கடாஅத்த காதல் தலைவன்


அகலம் துஞ்சி அவன் ஆறு படுக்கும்


அடர்மழைக் கண்ணின் அணியிழை 


ஓர்த்தே ஒடுங்கும் துயில் மறந்தற்றே.


அலந்தலை ஞெமையத்து நுனிக்கொம்பர் 


ஊக்கியும் ஆறா அழிபசி மீமிசை


ஏற்றிய பின்னும் ஏறி நோக்க‌ 


பழம்போல் மரூஉம் குடுமிப்பூக்கள்


உணீஇய ஊரும் கருங்கை எண்கின்


கான்சேர் வேள்வியின் வல் வேள் ஏந்தி


நெஞ்சில் நோதல் கூர்ந்து நொந்தனள் மன்னே.



______________________________________________________________________________


யா மரா ஞெமை போன்ற மரங்கள் அடர்ந்த காட்டிடை வேள்வி எனும் பொருள் வேட்கைக்கு வந்த காதல் மிகு தலைவன் ஈசல் சிறகுகள் பரவிய புற்றிடை வந்து முடங்கி நின்று மீண்டும் அடர்ந்த காட்டுவழி தொடர்கிறான். கருங்கையை உடைய கரடி ஒன்று ஞெமை மரத்தின் உச்சிக்கே சென்று பழம்போல் தோன்றுகின்ற குடுமிப்பூகளை உண்ண ஏறுகின்றன.காதலியோ (அல்லது தலைவியோ) காதலன் செல்லும் அடர்ந்த காட்டை நினைத்து துயில் மறந்து ஒடுங்கித் துயர் உறுகிறாள்.அவனை நெஞ்சில் ஏந்தி அவள் துன்பம் கொண்டு நைந்து வாடுகிறாள்.அகநானூற்றுப்பாடல் 171ல் கல்லாடனார் மிக மிக நுட்பமும் அழகும் செறிந்த சொற்களை யாத்துப் படைத்துள்ளார். அந்த சில சொற்களை யானும் எடுத்துக்கோர்த்து இந்த சங்கநடைச் செய்யுட்கவிதையை இங்கு எழுதியிருக்கிறேன்.........சொற்கீரன்.

___________________________________________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக