http://www.msn.com/en-us/video/wonder/see-hubbles-spectacular-new-view-of-galaxies-far-far-away/vi-BBAMA5x?ocid=spartanntp
கண்களை கழற்றி எறி
===============================================ருத்ரா
பல ஆயிரம் ஆண்டுகளாக படித்த சொற்களையே வாந்தி எடுத்து சாதி சமய வக்கிரங்கங்களில் வதை பட்டுக்கொண்டிருக்கும் நமக்கு மேலை நாட்டினரின் அறிவு தாகம் பற்றிய அறிவு தாக்கம் பற்றி எந்தக்கவலையும்
இல்லை. கிரேக்க விஞ்ஞானிகளிலிருந்து கலிலியோ வரை அறிஞர்கள் பிரபஞ்சத்தை எட்டிப்பார்க்க பயன்படுத்திய "தொலைநோக்கி " எனும் உருப்பெருக்கி கண்ணாடிகள் வழியே பல அரிய உண்மைகளைக்கண்டு பிடித்தனர்.விண்வெளியை தம் விளையாட்டு மைதானம் ஆக்கிய இன்றைய விஞ்ஞானிகள் தம் அறிவு துழாவும் "கண்களையே"அந்த வெளியில் கழற்றி எறிந்ததைப்போல் "ஒரு ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கியை"உலவ
விட்டிருக்கின்றனர். அதுவே "ஹப்பிள் டெலஸ்க்கோப்" ஆகும்.அது "ஏபல் 370"
எனும் விண்ஒளி மண்டலங்களின் (கேலக்சிஸ்) விண் திரட்சியை (க்ளஸ்டர் )
"கண்டு "படங்கள் அனுப்பியதை "நாசா" நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
தமிழ் இளைஞர்கள் "தங்கள் கண்ணோட்டங்களை மாற்றியாக வேண்டும்.
உலகமே வியக்கும் வண்ணம் "கணிணிப்பொறியாளர்கள்" நம் தமிழ் நாட்டில் பெருகி வருகிறார்கள்.எனவே தமிழ் இளைஞர்கள் இன்னும் இந்த விண்வெளி விஞ்ஞானத்தில் இவர்கள் சாதனைகள் புரிய வேண்டும். ஏற்கனவே தமிழ் விண்வெளி விஞ்ஞானிகள் நிறைய பேர் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணி புரிகிறார்கள் .விஞ்ஞானம் எனும் அறிவின் வலிமையே நம் தமிழின் வலிமை.
சினிமாவை இலக்கியமாக சமுதாயக்கண்ணாடியாக முகம் பார்த்துக்கொள்வதில் தவறு இல்லை.குறிப்பிட்ட கதாநாயக மோகத்தாலும்
குத்தாட்ட வெத்தாட்ட அசட்டுத்தனங்களாலும் நம் பயணத்தின் மைக்கற்களையே இழந்து போகிறோம்.திசைகள் தொலைத்து தவிக்கின்றோம்.நம் தமிழ் மொழியும் நமக்கு அந்நியமாகிப் போகிறது.
நம் கண்களை அந்த விண்வெளி நோக்கி வீசி எறிவோம்.ஆம் தொலைநோக்கிகள் வழியாக!.நம் பார்வை நம்மை அகலப்படுத்தும்.புதிய சிகரங்களை அடையச் செய்யும்
.https://www.bing.com/search?q=hubble+telescope&filters=ufn%3a%22hubble+telescope%22+sid%3a%22a9092a91-1a01-1008-7b11-8152eeec5cf6%22&form=EDGTCT&qs=MB&cvid=69bb32836dd3411cb99f11192d896b67&pq=hubble+telescope&cc=US&setlang=en-US
===============================================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக