- மாட்டு இறைச்சிக்குள் ஒரு அரசியல்
- ===============================================ருத்ரா
- உயிர்களை
- கொல்லாமை பற்றி
- நம் தமிழ்ப்பாடல்கள்
- கசிந்து கசிந்து உருகி
- கண்ணீர் விட்டிருக்கின்றன.
- வள்ளலாரின் வெள்ளையுடை
- அந்தக் கருத்தின் தூய்மையான
- அடையாளம்.
- கொல்லாமை பரிணாமத்தின் உச்சி.
- ஆனால் அப்போது
- மனிதர்கள் இறைச்சி உண்டு
- படை ஆட்சி செய்யும்
- முறைகள் மாறிப்போகும்.
- உலகம் எங்கும்
- ஒருவரை ஒருவர் அடித்து வாழ
- விரும்ப மாட்டார்கள்.
- தேசங்களின்
- எல்லைகள் கழன்றுவிடும்.
- தேசங்களின் கொடிகள்
- தங்கள் தங்கள் தேசத்தை
- காக்கும் முரட்டுத்தனமான
- தேச பக்தியை வீசியெறிந்து
- வெறும் வெள்ளைக்கொடிகள்
- ஆகி விடும்.
- உலகப்பொது அமைதி அன்பு
- தழைத்தோங்கும்.
- ஆனால்
- மாடுகளும் ஆடுகளும் பன்றிகளும்
- பெருகி
- நம் ஆட்சி நாற்காலியை
- பிடித்தாலும்பிடிக்கலாம்.
- எனவே கொல்லாமையை
- கொடியாய் உயர்த்திய
- புத்தமும் சமணமும்
- எங்கோ காணாமல் போய் விடலாம்.
- ஆனாலும்
- இப்போது புத்தம் ஆளும் தேசங்களில்
- கசாப்பு கத்திகள்
- வெட்டிக்கொண்டு தான் இருக்கின்றன.
- தூய்மையான கொல்லாமை அறத்தை
- எப்படி கைக்கொள்வது?
- புற்று நோய் மற்றும் கொடிய
- எய்ட்ஸ் நோய்களை
- கொல்லுவதற்கு அந்த
- வைரஸ் எனும் நுண்ணுயிரியை
- கொன்று தானே ஆகவேண்டும்.
- அப்போது தான் மனிதன்
- பகுத்தறிவுவாதி ஆகிவிடுகிறான்.
- இயற்கை எனும் வல்லறம்
- உயிர்களைக் கொன்று
- மேலும் வலுவான உயிர்களை
- உண்டாக்குகிறது.
- மேலும் மேலும் வலுவான உயிர்கள்
- நிலைத்து நின்று
- பரிணாம ஆற்றலை முன் எடுத்துச்செல்கிறது.
- மனிதன் வளர்ச்சியை நோக்கி செல்லுவதும் இயலும்
- என்கிறான் பகுத்தறிவு வாதி.
- தெய்வ சிந்தனை உள்ளவனோ
- இறைவன்
- ஆடு மாடு போன்றவைகளை
- மனிதன் தின்பதற்கே
- படைக்கிறான் என்கிறான்.
- எல்லா உயிர்களும் சுதந்திரமாய்
- இயல்பாய் "கசாப்பு" செய்யப்பட
- வேண்டாத ஒரு
- "மாதிரி வடிவ பிரபஞ்சத்தையும்"
- மனிதனின் விஞ்ஞானமே
- கண்டுபிடிக்க வேண்டும்.
- இது இயலுமா?
- ஆனால்
- காவிக்காரர்களின்
- மாட்டு இறைச்சி அரசியலில்
- ஒரு குள்ளநரித்தந்திரமும்
- ஒரு கள்ள சாணக்கியமுமே
- இருக்கிறது.
- காவி கார்ப்பரேட் பொருளாதாரத்தில்
- மாய்மாலமாய்
- வேத இரைச்சல்களோடு
- கீழ்க்குடி பிறப்பு மக்களை
- மேற்குடிப் பிறப்பு மக்களின்
- வேள்வித்தீயில் ஆகுதியாக்கி
- அழித்தொழிக்க வேண்டும்
- என்ற அரசியல் மட்டுமே இருக்கிறது.
- மாட்டு இறைச்சியில்
- மாடுகள் சாவதை விட
- மானிடமே அதிகம் படுகொலை செய்யப்படுகிறது.
- எளிய மக்களே.. அவர்கள் வியாபாரங்களே..
- உண்மையில்
- பொருளாதாரச்சுரண்டலில்
- இறைச்சித்துண்டுகளாய்
- ஒரு அரூப சர்வாதிகாரத்தின்
- கோரப்பற்களில் தின்னப்படுகின்றன.
- ==================================================
சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே. கனியப்போகும் கனவுகளோடு தொடரலாம் நண்பர்களே! வாருங்கள். அன்புடன் ருத்ரா இ பரமசிவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக