செவ்வாய், 17 டிசம்பர், 2019

‍‍‍‍‍‍‍ரஜினியின் "தர்பார்" ட்ரெய்லர்

‍‍‍‍‍‍‍ரஜினியின்  "தர்பார்" ட்ரெய்லர்
_____________________________________________ருத்ரா


"தர்பார்" துண்டு படம் எனும்
சுண்டல் வினியோகம்
தொடங்கி விட்டது.
தாரை தப்பட்டைகளே
கிழிந்து கந்தலாகும் வரை
கொட்டி முழக்குங்கள்.
மாஸ்..மாஸ் ..மாஸ்
உருளைக்கிழங்கு
பொடி மாஸ்.
செவிப்பறை கிழிய‌
சூப்பர் மாஸ் சத்தங்கள்
மரண மாஸ் கூச்சல்கள்.
மூளையைக்கழற்றி வைத்த‌
"தலை"களின்
தலைமுறையா இது?
"ஆதித்யா அருணாச்சலம்"
என்று சூப்பர் ஸ்டார் 
வாள் சுழற்றிய போதும் 
அந்த அடிக்கதையில் 
ஒரு உருத்திராட்சம் 
எங்காவது எப்படியாவது 
மானஸீகமாய் 
உருண்டுகொண்டிருக்குமே !
பார்க்கலாம் 
முருகதாஸ் பாணி குருட்சேத்திரத்தை!
தமிழ் இளைஞர்களே 
நோக்கமே இல்லாமல் 
வரலாறே இல்லாமல் 
ஆடும் இந்த  
சடுகுடு ஆட்டத்தில் 
உங்கள் கண்ணில் 
மண் தூவப்படுவதை 
எப்போது 
புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?
நம் 
இழந்த வரலாற்றை 
மீட்டுக்கொள்ள 
ரஜினியின் அந்த விரல் முத்திரையா 
வழி காட்டப்போகிறது?
தமிழ் அழிப்புப் புயல்
தமிழ் நாடு நோக்கி
அம்பு வீச காத்திருக்கும்போது
இருளுக்குள் மூழ்கி மூழ்கி
என்ன விடியல் தேடுவீர்?
நொறுங்கிப்போகும் முன்
ஒரு கணம்
சிலிர்த்து நில்லுங்கள்!
சிந்தனை செய்யுங்கள்
தமிழர்களே
சிந்தனை செய்யுங்கள்!

===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக