செவ்வாய், 10 டிசம்பர், 2019

அம்பு விடு அன்பே.

அம்பு விடு அன்பே.
========================================ருத்ரா

கல்லூரியில்
காகித அம்பு விளையாட்டை
வகுப்பில் அரங்கேற்றும்
வல்லுனன் தான்
நான்.
ஒரு நாள் முனை முறிந்து
மடங்கி விட்டேன் நான்.
மின்னலைச்சுருட்டி
உருட்டித்திரட்டி
கூர்மை ஏற்றி
ஒரு அம்பு என்
விழி புகுந்தது.
உன் விழி அம்பு அது.
அப்போதிலிருந்து அந்த‌
விழித்திரை மட்டுமே
பிலிம் காட்டி 
என்னை 
திணற வைத்துக்கொண்டிருக்கிறது.
சுற்றுப்புறம் எல்லாம்
இருட்டு..ஒரே இருட்டு.
என்றைக்கு உன்
விழி வாசல் திறந்து உன்
இதய வீட்டுக்கு அழைத்துச்செல்வாய்?
காத்திருக்கிறேன்.
அது வரை
இந்த காற்றின் "ப்ரெய்ல்"மொழியில் தான்
உனக்கு 
கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அம்பு விடு அன்பே!
மீண்டும் இன்னொரு
அம்புவிடு.

==================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக