12.12.19
======================================ருத்ரா
இது ஏதோ
ஒரு ஐபியின் முகவரி அல்ல.
அல்லது
ஏதோ ஒரு மென்பொருளின்
வெர்ஷன் எண்ணும் அல்ல.
நம் சூப்பர்ஸ்டார் அவர்களின்
பிறந்த நாள் விழாவின்
உற்சாகக்குறிப்பு.
எங்கள் அன்பான ரஜினி அவர்களே!
உங்கள் புகழ்ச்சிகரத்தை
ஏற முடியாமல்
இந்த வயதுகள் சறுக்குவதில்லை.
எழுபதுகள்
உங்களுக்கு இன்னும் இன்னும்
நூற்றாண்டுகளை
மாலைகளாய் சூட்டி
அழகு கூட்டட்டும்.
மெருகு ஏற்றட்டும்.
வினோதமானது உங்கள் அரசியல்
என்பது
எங்களுக்கு தெரியும்.
அதையும் நாங்கள் ரசிக்கிறோம்.
"அரசியலுக்கு வருகிறேன்"
என்பதே அந்த அரசியல்.
இந்த அரசியல் முன் எல்லா அரசியலும்
தோற்றுப்போய் நிற்கின்றன.
அரசியலுக்காக அவ்வப்போது
நீங்கள் விடுவது கூட
காகித அம்புகள் தான்
என்பதும் எங்களுக்கும் தெரிகிறது.
அதன் குறி
சில சமயம் தமிழனை காயப்படுத்தும்.
திராவிட வரலாற்றுக்கூர் முனையை
மழுங்கடிக்கும்.
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய
கைபர் போலன் கணவாய் வழியில்
பிதுங்கிக்கொண்டு வந்த
ஒரு கூட்டத்தின்
முகமூடி போல அது தோன்றினாலும்
அது ஒரு வகையில்
கோமாளி வேடங்கள் தான்.
உங்களை ஆட்டுவிப்பவர்கள்
கேமிராக்காரர்கள் மட்டும் அல்ல
சில காவிக்காரர்களும் தான்
என்பதும் எங்களுக்கு தெரியும்.
ஆனால் உங்கள் கண்கள்
தமிழின் இந்த கூரிய கண்களை
எதிர்கொள்ள முடியாது
என்பதும் எங்களுக்கு தெரியும்.
சிலர் உறுமுகிறார்கள்
சிலர் குமுறுகிறார்கள்
சிலர் கொதிக்கிறார்கள்
உங்கள் அரிதாரங்களுக்குள் இருக்கும்
தந்திரக்கூச்சலைக்கண்டு.
"பாஷா பாஷா" என்று
உங்கள் நெஞ்சை கைவிரல்களால்
குத்திக்கொண்டு
எரிமலையைக்கொப்பளித்தீர்களே
அந்த நெருப்பு வெறும் வேடம் இல்லை
என்று
இன்று கொப்பளிக்கும் ஜனநாயகச்
சீற்றங்களுக்கும் நன்றாய் தெரியும்.
நாங்கள் இன்னும் நம்புகிறோம்.
நீங்கள் தமிழனின் ரத்த நாளங்களுக்குள்
பின்னிக்கொண்டீர்கள் என்று.
ஆட்டோக்காரனாய் அந்த
பூசணக்காயை உடைத்தீர்களே.
அது பூசணக்காய் இல்லை
ஆத்திகர்களின் வேடத்தில் இருக்கும்
வெறியின் அரக்கத்தனம் என்று
உங்களுக்குத் தெரியும் என்பதும்
எங்களுக்குத் தெரியும்.
விடியட்டும்.
வானம் தெரியும்.
இந்த தமிழும் மிக மிக..
உயரமாய்த் தெரியும்.
வாழ்க! வாழ்க!
நீங்கள் நீடூழி வாழ்க!
=======================================================
======================================ருத்ரா
இது ஏதோ
ஒரு ஐபியின் முகவரி அல்ல.
அல்லது
ஏதோ ஒரு மென்பொருளின்
வெர்ஷன் எண்ணும் அல்ல.
நம் சூப்பர்ஸ்டார் அவர்களின்
பிறந்த நாள் விழாவின்
உற்சாகக்குறிப்பு.
எங்கள் அன்பான ரஜினி அவர்களே!
உங்கள் புகழ்ச்சிகரத்தை
ஏற முடியாமல்
இந்த வயதுகள் சறுக்குவதில்லை.
எழுபதுகள்
உங்களுக்கு இன்னும் இன்னும்
நூற்றாண்டுகளை
மாலைகளாய் சூட்டி
அழகு கூட்டட்டும்.
மெருகு ஏற்றட்டும்.
வினோதமானது உங்கள் அரசியல்
என்பது
எங்களுக்கு தெரியும்.
அதையும் நாங்கள் ரசிக்கிறோம்.
"அரசியலுக்கு வருகிறேன்"
என்பதே அந்த அரசியல்.
இந்த அரசியல் முன் எல்லா அரசியலும்
தோற்றுப்போய் நிற்கின்றன.
அரசியலுக்காக அவ்வப்போது
நீங்கள் விடுவது கூட
காகித அம்புகள் தான்
என்பதும் எங்களுக்கும் தெரிகிறது.
அதன் குறி
சில சமயம் தமிழனை காயப்படுத்தும்.
திராவிட வரலாற்றுக்கூர் முனையை
மழுங்கடிக்கும்.
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய
கைபர் போலன் கணவாய் வழியில்
பிதுங்கிக்கொண்டு வந்த
ஒரு கூட்டத்தின்
முகமூடி போல அது தோன்றினாலும்
அது ஒரு வகையில்
கோமாளி வேடங்கள் தான்.
உங்களை ஆட்டுவிப்பவர்கள்
கேமிராக்காரர்கள் மட்டும் அல்ல
சில காவிக்காரர்களும் தான்
என்பதும் எங்களுக்கு தெரியும்.
ஆனால் உங்கள் கண்கள்
தமிழின் இந்த கூரிய கண்களை
எதிர்கொள்ள முடியாது
என்பதும் எங்களுக்கு தெரியும்.
சிலர் உறுமுகிறார்கள்
சிலர் குமுறுகிறார்கள்
சிலர் கொதிக்கிறார்கள்
உங்கள் அரிதாரங்களுக்குள் இருக்கும்
தந்திரக்கூச்சலைக்கண்டு.
"பாஷா பாஷா" என்று
உங்கள் நெஞ்சை கைவிரல்களால்
குத்திக்கொண்டு
எரிமலையைக்கொப்பளித்தீர்களே
அந்த நெருப்பு வெறும் வேடம் இல்லை
என்று
இன்று கொப்பளிக்கும் ஜனநாயகச்
சீற்றங்களுக்கும் நன்றாய் தெரியும்.
நாங்கள் இன்னும் நம்புகிறோம்.
நீங்கள் தமிழனின் ரத்த நாளங்களுக்குள்
பின்னிக்கொண்டீர்கள் என்று.
ஆட்டோக்காரனாய் அந்த
பூசணக்காயை உடைத்தீர்களே.
அது பூசணக்காய் இல்லை
ஆத்திகர்களின் வேடத்தில் இருக்கும்
வெறியின் அரக்கத்தனம் என்று
உங்களுக்குத் தெரியும் என்பதும்
எங்களுக்குத் தெரியும்.
விடியட்டும்.
வானம் தெரியும்.
இந்த தமிழும் மிக மிக..
உயரமாய்த் தெரியும்.
வாழ்க! வாழ்க!
நீங்கள் நீடூழி வாழ்க!
=======================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக