எழுத்தாளன்
==============================================ருத்ரா
அவன் ஒரு
சிறுகதை மன்னன்.
அவன் எழுத்துக்களை
சுவாசிக்காத
படிப்பாளிகளே இல்லை.
ஒரு நாள் அவன்
ஒரு படைப்பை
படிக்க நேருகிறது.
படித்து முடித்த பின்
அவன் கண்களிலிருந்து
பொல பொலவென்று
கண்ணீர்த்துளிகள் உதிர்கின்றன.
அது ஆச்சரியக்கண்ணீர்.
இப்படியும் மிகச்சிறந்த படைப்பை
ஒரு எழுத்தாளன் எழுதியிருக்க முடியுமா?
அதன் அற்புதம் கண்டு
உருகிப்போய் கரைந்து
தான் ஒன்றுமில்லாமல் போனதாக
உணர்கிறான்.
அது முதல்
அவன் பேனாவையும் பேப்பரையும்
தொடவே இல்லை.
எழுத்து அவனுக்கு
மறந்து போனது.
மரத்துப்போனது.
உள்ளுக்குள் நினைத்து நினைத்து
உருக்குலைந்து
அவன் இந்த உலகைத்தை விட்டு
மறைந்தே போனான்.
தன் கல்லறையில்
இப்படி எழுத்தச்சொன்னான்.
"இவனுக்கு எழுதவே தெரியாது.
எழுத்தை மீண்டும் சுவாசிக்கவே
மண்ணுக்குள் மூழ்கியிருக்கிறான்."
அந்த "ஞாபக மறதி" எழுத்தாளன்
அன்று
அந்த படைப்பை வாசித்தபோது
அதை எழுத்தியது என்று
போடாமல்
"இதை யார் எழுதியது என்று
சொல்லுங்கள் பார்க்கலாம்"
என்று குறிப்பிட்டிருந்ததை
அவன் பார்க்கவே இல்லை.
படித்து முடித்தவுடன்
அதன் ஆழத்தில்
அவன் மூழ்கிப்போய்
இதைப்போல்
நான் ஏன் இன்னும் எழுதவில்லை
என்ற
உணர்வின் அழுத்தத்தின்
அடியிலேயே போய்விட்டான்.
இன்னும் சில பக்கங்கள் புரட்டி
அதை எழுதியவர் யார் என்று
தெரிந்திருந்தால்
அவன் என்ன செய்திருப்பான்?
தெரியவில்லை
நீங்கள் சொல்லுங்கள்
அவன் என்ன செய்திருப்பான்?
கற்பனை செய்து தான் பார்க்கவேண்டும்.
ஏனெனில்
அதை எழுதியது அவனே தான்.
========================================================
==============================================ருத்ரா
அவன் ஒரு
சிறுகதை மன்னன்.
அவன் எழுத்துக்களை
சுவாசிக்காத
படிப்பாளிகளே இல்லை.
ஒரு நாள் அவன்
ஒரு படைப்பை
படிக்க நேருகிறது.
படித்து முடித்த பின்
அவன் கண்களிலிருந்து
பொல பொலவென்று
கண்ணீர்த்துளிகள் உதிர்கின்றன.
அது ஆச்சரியக்கண்ணீர்.
இப்படியும் மிகச்சிறந்த படைப்பை
ஒரு எழுத்தாளன் எழுதியிருக்க முடியுமா?
அதன் அற்புதம் கண்டு
உருகிப்போய் கரைந்து
தான் ஒன்றுமில்லாமல் போனதாக
உணர்கிறான்.
அது முதல்
அவன் பேனாவையும் பேப்பரையும்
தொடவே இல்லை.
எழுத்து அவனுக்கு
மறந்து போனது.
மரத்துப்போனது.
உள்ளுக்குள் நினைத்து நினைத்து
உருக்குலைந்து
அவன் இந்த உலகைத்தை விட்டு
மறைந்தே போனான்.
தன் கல்லறையில்
இப்படி எழுத்தச்சொன்னான்.
"இவனுக்கு எழுதவே தெரியாது.
எழுத்தை மீண்டும் சுவாசிக்கவே
மண்ணுக்குள் மூழ்கியிருக்கிறான்."
அந்த "ஞாபக மறதி" எழுத்தாளன்
அன்று
அந்த படைப்பை வாசித்தபோது
அதை எழுத்தியது என்று
போடாமல்
"இதை யார் எழுதியது என்று
சொல்லுங்கள் பார்க்கலாம்"
என்று குறிப்பிட்டிருந்ததை
அவன் பார்க்கவே இல்லை.
படித்து முடித்தவுடன்
அதன் ஆழத்தில்
அவன் மூழ்கிப்போய்
இதைப்போல்
நான் ஏன் இன்னும் எழுதவில்லை
என்ற
உணர்வின் அழுத்தத்தின்
அடியிலேயே போய்விட்டான்.
இன்னும் சில பக்கங்கள் புரட்டி
அதை எழுதியவர் யார் என்று
தெரிந்திருந்தால்
அவன் என்ன செய்திருப்பான்?
தெரியவில்லை
நீங்கள் சொல்லுங்கள்
அவன் என்ன செய்திருப்பான்?
கற்பனை செய்து தான் பார்க்கவேண்டும்.
ஏனெனில்
அதை எழுதியது அவனே தான்.
========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக