ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கவிதையைப்பற்றி ஒரு கவிதை


kamala-surayya
நன்றி.."தி வீக்" இதழ்.
https://www.theweek.in/webworld/features/society/feral-beauty-kamala-surayya-writings-ente-katha-my-story-kamala-das-literature-poems-sexuality.html



கவிதையைப்பற்றி ஒரு கவிதை
=========================================ருத்ரா


அந்தக்கவிதை
மிகத்துணிச்சலானது.
உடலியற்கூறுகளான‌
இதயம் நுரையீரல் போன்று
பிறப்பு உறுப்புகளின்
இலக்கியத்தினவுகளுக்கும்
அதற்கு சமுதாயம் 
பொதிவாய் மறைத்து 
வைத்திருக்கும் 
காக்காய் முட்களுக்கும் 
தன் பேனாவை
நோபல் பரிசு வரை
நீட்டிப்பார்க்கும்
ஈடற்ற துணிச்சல் அது.
அகநானூறுகளுக்குள்
மீசை முறுக்கி நின்ற‌
புறநானூறு இது.
ஏன் புலிகள் தான்
கர்ஜித்துக்கொண்டே
இருக்க வேண்டுமா?
இந்த பெண்மைப்புழுக்களும்
சிங்க ராஜாக்கள் தான்.

=========================================

ஒரு ஒப்பற்ற கவிஞர் கமலாதாஸ்
அவர்களைப்பற்றிய கவிதை இது

=======================================
01 ஆகஸ்ட் 2016 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக