வெள்ளி, 27 டிசம்பர், 2019

ஒரு சினிமாப்பாடல்

ஒரு சினிமாப்பாடல்
==============================================ருத்ரா

பூப்போல சிரித்தாய்.
வானம் குடை பிடித்தது.
அன்பே அன்பே
இது என் குரல் அல்ல.
நுரையீரல் பூங்கொத்து.
நழுவி நழுவி ஓடுகிறாய்.
என் மூச்சுக்குள் அகப்பட்டாய்.
எங்கே நீ ஓடுகிறாய்.
ஓடினாலும் என்னுள்
துடிக்கின்றாய்
கால் பதித்து நீ ஓடுவது
என் இதயம் அல்லவா.
ஆற்றுக்குள் மீன் பிடித்த‌
அனுபவம் உண்டு.
காதல் ஊற்றுக்குள்
உன் விழிகள் தொடும்
வழிகள் தெரியவில்லை.
அருகே வா.
இல்லையெனில்
இந்த இடைவெளிக்குள்
ஏழு கடல் அலை அடிக்கும்.
கைப்பிடித்து நம்
கனவின் கரையோரம்
நடந்து செல்வோம்.
உன் மெல்லிய சிரிப்பே
எனக்கு
மூணு வேளை சாப்பாடும் அது
மூவாயிரம் வருடத்துக்கு
பசியும் அது.
வா வா அன்பே...
வா வா அன்பே...

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக