வியாழன், 5 அக்டோபர், 2017

மைக்கேல் மதனகாம "டெங்கு"மகராஜன்

மைக்கேல் மதனகாம "டெங்கு"மகராஜன்
===================================================ருத்ரா

கமல் அவர்களே
உங்கள் ராஜ்யத்தில்
டெங்கு கொசுக்கள்
ரெக்கை கட்டி பறக்கலாமா?
நற்பணிமன்றங்கள் இனி
பிக்பாஸ் மன்றங்கள் தான்.
அந்த ஏ எஸ் டி கொசுக்கள்
ஒழுங்காக‌
கடித்த இடத்து வைரஸ்களையெல்லாம்
இப்போதே
உறிஞ்சிக்கொண்டாக வேண்டும்.
ஆளும் வர்க்கத்துக்கு
இப்படி செக் வைப்பது
ஒரு ஜனநாயக சண்டைப்பயிற்சி தான்.
அதற்கு ஆயிரம் போற்றி போற்றிகள்!
ஆனால்
எங்கோ உ பி யில் இருக்கும்முதல்வர்
மலையாள மண்ணில்
நீதி கேட்பது போல்
நீங்களும்....
சிலிண்டரா? மூளைக்காய்ச்சலா?
காரணம் எதுவாகவும்
இருந்துவிட்டுப்போகட்டும்...
அந்த சிசுகளின் மரணங்களுக்கு
நீதி கேட்பதாய்
ஒரு அகில இந்திய தாக்கத்தை
ஏற்படுத்தலாமே!
தமிழக விவசாயிகள்
டெல்லியில்
இன்னமும்
அவர்களின் இன மான மாண்புகள்
தோலுரிக்கப்பட்டு
வதைக்கப்படுகிறார்களே!
அந்த‌
கண்ணுக்குத்தெரியாத துச்சாதனர்கள் பற்றி
உங்கள் "மகாபாரதத்தில்"
கொஞ்சம் கூட குறிப்புகள் இல்லையா?
நீங்கள் அப்படி
பாரபட்சம் கொண்டவர் இல்லை என்பது
இந்த‌
பாரதம் முழுதும் அறியும்.
உங்களின்
ஜனநாயகப்போரின் வீச்சுக்குள்
தமிழனின் நிழல் தெரிகிறது.
ஆனால்
திடீரென்று நீங்கள்
யாரின் நிழல் என்று
ஏன் இந்த கேள்வி
ஊடகங்களில் நிழலாடுகிறது?
எது எப்படி இருப்பினும்
நீங்களே எங்கள் உலக நாயகன்.
தமிழ் வெளிச்சம் உங்கள் மூலம்
இந்த உலகத்தையே உலுக்கவைக்கும்
என்பதே எங்கள் நம்பிக்கை.
நம்பிக்கைகள் வெல்லட்டும்!

============================================




2 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

கமல் திரை நாயகனாகவே இருந்து விடலாம். உங்கள் கவிதையை ரசித்தேன். அர்த்தமுள்ள கேள்விகள்.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே.

சமுதாயசிக்கல்கள் அவிழ்க்கப்பட ஒரு வலுவான சிந்தாந்த அடிப்படை வேண்டும்.மக்கள் வெள்ளமோ மிதக்கும் உள்ளத்தன்மை உடையது.அது
எங்கே அமிழும்?எங்கே எதிர் நீச்சல் அடிக்கும் என்ற நுட்பங்களின்
புரிதல் வேண்டும்.திரு.கமல் அவர்கள் கூட இதற்கென்ற தனியான‌
"பிக்பாஸ்" பயிற்சி அல்லவா பெற்றிருக்கவேண்டும்.வரும் நிகழ்வுகளே
அதை தீர்மானிக்கும்.

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக