வியாழன், 12 அக்டோபர், 2017

அந்த ஆகாசம் அத்தனை உயரமா?

அந்த ஆகாசம் அத்தனை உயரமா?
=========================================ருத்ரா

அந்த ஆகாசம் அத்தனை உயரமா?
அந்த "அண்ட்ரோமிடா" ஒளிமண்டலம்
அத்தனை பெரிசா?
வாய் பிளந்த போது
வாசல்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
காலுக்கு கீழே கிடக்கும்
வாய்ப்புகள் நம்மை இடறவில்லை.
மேலே வந்து விழுந்த ஆப்பிளை
தின்று தீர்க்கவில்லை  நியூட்டன்.
இன்வெர்ஸ் ஸ்குவேர் லா என்பதை
கண்டு பிடித்தார் அந்த விஞ்ஞானி
முன்னூறு ஆண்டுகளுக்கும் முன்பேயே.
அந்த விதி
இரு பிண்டங்களும் இடையே உள்ள
ஈர்ப்பு
அதன் இடைதூர வர்க்கத்தின்
எதிர் விகிதம் ஆகும்.
இதில் தான் நாம் இந்த பிரபஞ்சத்தை
பட்டா போட்டுக்கொண்டிருக்கிறோம்.
 ஈர்ப்பு என்பது மாஸ் எனும்
உள் திணிவு.
அதன் ஆற்றல் வீச்சுக்கு
ஒளிவேகமே எல்லை.
தன் மாமா கொடுத்த காந்த ஊசியின்
திசைகாட்டியில்
விளையாடிக்கொண்டிருந்த போது
அந்த ஐன்ஸ்டினுக்கு
என்னவெல்லாமோ பொறி தட்டியது.
வாழ்க்கையின் பிரபலத்தின்
உச்சிக்குப் போகும்
வழி அவரது சிந்தனை விளையாட்டு
அதாவது தாட் எக்ஸ்பெரிமெண்ட் எனும்
ஒற்றையடிப்பாதையில் தான் இருந்தது.
ஒளிவேகமும் உள்துணிவும்
பிசைந்து கொடுத்த ஈர்ப்பு
பிரபஞ்சத்தை பிண்டம் பிடித்து
வைத்திருந்தது.
இது எல்லா பிரபஞ்ச படலத்தையும்
வளைகோட்டுப்புலத்தால்
வார்த்தது.
தனிச்சார்பு இப்படித்தான்
பொதுச்சார்பு ஆனது.
இந்த வினாடி முதல்
ஐன்ஸ்டின்
தந்த அந்த சிந்தனை விளையாட்டே
பல "நோபல் பரிசுகளில்"
அறிவு சுடர்ந்து கொண்டிருக்கிறது.
உங்கள் ரூபாய் பைசா நமைச்சல்களால்
அந்த   கொட்டாங்கச்சிக்  குளத்தில்
நீச்சல் அடித்தது போதும்.
அந்த அறிவின் பெருங்கடலின்
ஆழம் காணும் விளையாட்டை
இன்றே தொடருங்கள்.

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக