வெள்ளி, 6 அக்டோபர், 2017

சிவாஜி எத்தனை சிவாஜி


சிவாஜி எத்தனை சிவாஜி
======================================ருத்ரா

பராசக்தி

கல் பூசாரி கல்யாணி
மூன்றின் சமன்பாடு இவர்
வசனங்களால் வெளிச்சமானது!

மனோகரா

சங்கிலியில் பிணைத்தபோதும்
இவர் துடி துடித்த நடிப்பே
அன்றைய திரைக்கடலில் ஒரு சுநாமி.

சபாஷ் மீனா

இவர் நகைச்சுவை நடிப்பில்
தியேட்டருக்குள் குலுங்கின‌
சிரிப்பின் பூகம்பங்கள்.

அமரதீபம்

காதலின் தீபம்
அங்குலம் அங்குலமாய்
அமரத்துவம் ஆனது இவர் நடிப்பில்.

தங்கமலை ரகசியம்

உறுமலும் உளறலும் மட்டுமே
மொழியாக்கி
நம்மை வியக்க வைத்தார்.

அந்த நாள்

இரண்டாம் உலகப்போரும் நேதாஜியும்
இவர் முக நரம்புகளில் முழங்கவைத்து
நம்மை மெய்சிலிர்க்க வைத்தார்.

கூண்டுக்கிளி

நட்புக்கும் காதலுக்கு இடையே
ஒரு துரோகம் செய்து குருடன் ஆன‌
நடிப்பில் எம்.ஜி.ஆரே உருகிப்போனார்.

திரும்பிப்பார்

காமம் மிருகமாய் எதிரில்
உடன் பிறப்பே பலியாக வருவதைக்கண்டு
எரிமலைப்பிழம்பாய் குமுறிப்போகிறார்.

பதிபக்தி

ராணுவ மிடுக்கும் காதல் துடிப்பும்
வீடு நோக்கி வரும் அவர் ஆவலும்
ஆயிரம் பரிமாணங்கள் சொல்லும்.

உத்தமபுத்திரன்

இரண்டு புத்திரர்களின்வேறுபட்ட
குணங்களைக் காட்டும் அற்புதத்தை
அந்த முகமூடிகள் கூட நடித்துக் காட்டின.

===============================================
தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக