வியாழன், 5 அக்டோபர், 2017

ஏறு மனமே ஏறு.

ஏறு மனமே ஏறு.
===============================ருத்ரா

நம்பிக்கை.
பாசிடிவ் திங்கிங்.
எப்படியாவது வெற்றி.
அடுத்தவன் தலையை
படியாக்கித்தான் ஏறவேண்டுமா?
தயங்காதே!
பத்து ரூபாயை
ஆயிரம் ரூபாயாக‌
உருப்பெருக்கு.
அதற்கு பத்தாயிரம் ரூபாயில்
விளம்பரம் செய்யவேண்டுமா?
செய்...செய்...செய்து கொண்டே இரு.
இப்போது
சூடாக வியாபாரம் ஆவது
அரசியலும் சினிமாவும் தான்.
இல்லையெனில்
ஏதோ ஒன்று.
கனவுகளையும் காதலையும் கூட
கூறு போட்டு விற்கலாம்.
ஏமாற்றங்களையும் நிராசைகளையும் கூட
"பிளாட்" போட்டு விற்கலாம்.
தொழில் முனைவோர்களின்
கண்களில்
அதற்கான மத்தாப்புகள்
மிகப்பிரகாசமாய் எரிகிறது.
ஏறு..ஏறு..
அந்த நம்பிக்கையின் மலை ஏறு!
எல்லோரும்
அப்படி ப(ய)ண யாத்திரை கிளம்பியதில்
உச்சிக்கு வந்தாகி விட்டது.
கீழே உற்று நோக்கியதில்
எலும்புகளின் நொறுங்கிய குப்பைகள்.
கபாலங்களின் குவியல்கள்.
கிடக்கட்டும் விடுங்கள்
கனவுச்சிதிலங்களைப்பற்றி..
இறந்த காலத்தின் சவங்கள் கிடந்த‌
அந்த பாடைகளைப்பற்றி
ஏன் கவலை? எதற்கு பயம்?
இன்னும்
ஏறு மனமே ஏறு.
நம்பிக்கை மேலும் மேலும்
முறுக்கேறி..முஷ்டிகளை
உயர்த்துகிறது.
பிணந்தின்னிக்கழுகுகள்
பறக்கும் அந்த உயரத்திலும்
நம்பிக்கை
ஒரு பெரிய ரோஜாவாய்
சூரியனுக்கும் குடைபிடித்து
அந்த குளிர்நிழலை
ஒரு "கோக்"ஆக்கி
குடித்துக்கொண்டிருக்கிறது.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக