புதன், 18 அக்டோபர், 2017

தமிழா! தமிழா! தமிழா!

தமிழா! தமிழா! தமிழா!
===========================================ருத்ரா

தமிழா! தமிழா! தமிழா!
சரித்தான் கவிஞரே
உமக்கு வேறு வேலை இல்லையா?
ஏன் இப்படி
ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது.
எங்கள் தலைவர் நடிகருக்கு
கட் அவுட் வைத்து
பால் குடங்களிலிருந்து
பாலருவி கொட்டவேண்டும்
திடீர் என்று கட்டளை வரும்
அந்த முட்டுச்சந்தில்
ஆட்கள் கூடும் இடத்தில்
நிலவேம்பு காஃபி எல்லோருக்கும்
கொடுக்கவேண்டும்.
தேர்தல் ஆணையம்
தேதிகள் அறிவிக்கும் போது
தயார் ஆகி விடவேண்டும்.
தலைவர் எதுவும் சொல்லலாம்.
வாக்காளர் பட்டியலை
மடியிலேயே கட்டிவைத்திருக்கவேண்டும்.

அதெல்லாம் சரி!
மதவாதக்கட்சி தமிழ் நாட்டுக்குள்
வரக்கூடாது.
உங்கள் தலைவர் நடிகர்
அதைப்பற்றி ஒரு கண் வைத்திருப்பார்
அல்லவா.

எதைச்சொல்லுறீங்க?
அதான் அந்த பாம்பு கீரி விளையாட்டெல்லாம்
பாத்துக்கிட்டிருக்கிற‌
ஏதோ விலங்கு நல வாரியம்
அது இதுன்னு
அசோகசக்கரம் முத்திரையை
போர்டு மாட்டி வச்சுகிட்டு
சவுக்கு சுத்திக்கிட்டிருப்பாங்களே
அவங்களே சொல்றீங்களா?
இதுக்காகவே
அடுத்தப்படம் வச்சுருக்கிறாரு தலவரு!

என்னாண்ணு!

"டில்லிக்கு ஒரு கில்லி!"

அடேங்கப்பா..சரிதான்..

"தமிழா! விழித்துக்கொள்!"

என்னா சொல்றீங்க‌

அடுத்த குத்துப்பாட்டு இது தானா?

தமிய்யா! தமிய்யா! வியித்துக்கொள்!

ஒரு கானாப்பாடகர் தூள் கிளப்புகிறார்.

இந்த தமிய்யாக்களையெல்லாம்  மீறி

"தமிழ் மண்ணே"

நீ தான் விழிக்கவேண்டும்!

நீ தான் சிலிர்க்கவேண்டும்!

===========================================

2 கருத்துகள்:

கருத்துரையிடுக