புதன், 15 ஜூலை, 2020

புதிய கரு

புதிய கரு
========================================ருத்ரா

நூல் படிக்க‌
நூல் வேண்டும் என்றார்கள்.
நூல் போட்டுக்கொண்டவுடன்
நூல் படிக்க மறந்தார்கள்.
நூல் படிக்க மறந்ததால்
மனிதனை அறிய மறந்தார்கள்.
மனிதனின் உள்ளே எரியும்
விளக்கை அணைத்து விட்டார்கள்.
தன்னைப்பிறப்பித்த‌
அம்மாவையே தீட்டு என்றார்கள்.
பெண்ணை பாவம் என்றார்கள்.
பெண் என்றால் மண்.
மண்ணுக்குள் அவள் அமிழ்த்தப்பட‌
ஆவேசம் கொண்டார்கள்.
உலகிலேயே மிகச்சிறந்த பெண்
சீதையை 
மண் விழுங்க வைத்தார்கள்.
பிறவிகள் இல்லை.
மனிதர்கள் இல்லை.
வானமும் மண்ணும்
மூளியாகி
மலடு தட்டிப்போகவேண்டும்
என்று 
ஒப்பாரி இட்டார்கள்.
அதாவது மந்திரங்களை
இரைச்சலிட்டார்கள்.
மேலே இருந்து பார்த்த‌
கடவுள் சிரித்தார்.
உன்னில் 
என்னைப்பார் என்றேனே!
அதையும்
ஸ்லோகங்களாய்த்தானே
கொப்பளித்தாய்.
பொருந்தி உள் நின்று
நினை என்றேனே.
அந்த மெய்ப்பொருளை
தோண்டி எடு என்றேனே.
"கட உள்" என்றேனே.
உனக்குத்தெரிந்த‌
"பிரம்மம்"என்பதை வைத்து
நக்கிப்பார்த்து
அந்த "மிலேச்ச பாஷையில்" எல்லாம்
நீ இல்லை என்று
என்னையும் கூட‌
கடாசி விட்டுபோனாய்.
நீ என்னை தீண்டாமையில் 
தள்ளி எரிக்கவும் தயார் ஆனாய்.
எரிந்து போ
இந்த ஸ்லோக எச்சில்களின்
அசிங்கமே
உன்னை எரித்துக்கொள்ளட்டும்.
இதிலிருந்து
மனிதச்சாற்றின்
புதிய உரு
புதிய கரு
அறிவின் பேரொளியாய்
சுடர் முகம் காட்டட்டும்.

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக