சனி, 18 ஜூலை, 2020

கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை

கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
________________________________________________
ருத்ரா

(ஓலைத்துடிப்புகள்..36)


குரவமும் மரவமும் குழீஇ அடர
வேங்கை அம் இணர் மணிப்பூ சொரிய‌
சுரம்புகு கணுத்தோள் கழைபுரை மல்ல!
முள் செறி முருங்கை குருதிப்பூக்கள்
செந்தழல் தொடுத்த செங்குழைக் கவரி
அன்ன வளிப்போழ் அஞ்சிறைத்தும்பி
அதிர்நுண் பாலை கேட்டிலையோ?
இறைகலி ஆர்த்த அகல்வளை குலுங்கும்
இசையினில் அவள் உன் அணைமொழி கேட்கும்.
வானுதல் வியர்த்த முத்துக்கள் தோறும்
உன் அகலம் கிடந்த பொழுதினை ஊரும்.
கொடுமா எதிரத் தொலைச்சிய காலை
நின் தகை எண்ணி அவள்  எவ்வம் படரும்.
நின் பொருள்சேர் பெரும்புகழ் யாவும் ஈண்டு
இவள் காந்தட்கைவிரல் நீண்டு தீண்டும்
இன்பம் ஒரு பால் அடங்கும் நீ அறிதி.
கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
நுண்ணிதாய் உணர்த்தும் குறி நீ அறிதி.
குவளைக்கண்ணி இமைபோர்த்த கனவின்
நெருப்பின் தீங்கனி அருந்திட விரைதி.
பரல்சுரம் யாறு முரல்தர விரைதி
கல்பொரு பஃறுளி யாறென இன்றே.

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக