புதன், 15 ஜூலை, 2020

ஓ ஜனநாயகமே!



ஓ ஜனநாயகமே!
_____________________________________ருத்ரா


ஓ ஜனநாயகமே!
நீ எங்கே இருக்கிறாய்?
அலாவுதீன் அற்புதவிளக்கை
தேய்ப்பது போல்
அந்த பட்டனைத்தட்டினால்
போதும் என்றார்கள்.
தட்டினால்
வந்ததோ
பூதங்களின் கூட்டம்.
உடுக்கைகளின் சத்தம்.
மந்திர ஜபங்களின் ஆரண்யம்.
மனிதர்களின் வீடு
மறைந்து போய் விட்டதோ?
போ!
பூதமே இந்த விளக்கை எடுத்துக்கொண்டு
போய்விடு.
மானிடச்சோலையில்
மலரும் அந்த‌
ஜனநாயகம் எனும்
பாரிஜாத புஷ்பம் வேண்டும்.
கம்பியூட்டர் யுகம் ஆயிற்றே
என்று தான்
"பட்டன்"தட்டினோம்.
எப்படி உள்ளே இத்தனை
அரக்கு மாளிகை?
நெருப்பு விழுங்குவதற்குள்
ஒரு
"புதிய மகாபாரதம்"
உருவாகிடட்டும்.
இனிய பாரத புத்திரர்களே
இந்த வர்ணப்புகை மூட்டங்களுள்
தொலைந்து போகுமுன்
உங்கள் சிந்தனையை
கூர் தீட்டுங்கள்.
அறிவின் சுடர் கூட்டுங்கள்.
வாழ்க ஜனநாயகம்!

==========================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக