வியாழன், 23 ஜூலை, 2020

காதல் என்னும் கொசுக்கடிகள்

காதல் என்னும் கொசுக்கடிகள்
__________________________________________ருத்ரா


சென்ற பெப்ரவரியில்
பொன் வர்ணத்தில்
இதய வடிவத்தில்
அட்டையை
வெட்டி ஒட்டி எழுதி
அனுப்பினேன்.
அடுத்த பெப்ரவரிக்கு
என்ன செய்யலாம்?
இதயத்துடிப்புகளில்
அவள் வந்து வந்து போனாள்.
அவளுக்கும்
கேட்டிருக்கும்.
என்ன செய்யலாம்?
அட்டை எதற்கு
என் இதயத்தை அட்டை ஆக்கி
அவள் பூஞ்சிரிப்பை
அதில் செதுக்கி அனுப்பலாம்.
..............
.............
"டேய் ஃபூல் அப்படி
எல்லாம் யோசிக்காதே.
அட்டையில் செதுக்குவது எல்லாம்
இருக்கட்டும்.
அது என் இதயமடா!"
அவள் சொற்கள் அந்த துடிப்புகளில்
அவனுக்கு
கேட்டிருக்குமோ இல்லையோ?
யாராவது
அந்த "க்ரேசி பாயை"காப்பாற்றுங்களேன்.
கேட்கிறதா?
நண்பர்களே!
காதல் வெறும் கள்ளிக்காடு இல்லை.
ரோஜா வனமும் இல்லை.
உள்ளத்தை வார்த்து உருக்கி
நெளிய விட்ட‌
கனவின் மின்னல்கள்.
ஒரு கவசமும் வைத்திருங்கள்.
வாழ்க்கைக்குள் வாழ வந்துவிட்ட பிறகு
அதைத்தூக்கியெறியும்
முட்டாள்தனத்தை முதலில்
தூக்கி எறியுங்கள்.
காதல் தோல்வி என்றாலும்
காதல் முழுமை பெறுவது
உன் கையில் மிச்சமாக இருக்கும்
உன் வாழ்க்கையில் தான்.
மத்தாப்பு எரிந்த பின்
உன் கையில் மிச்சமாக
இருக்கும்
கரிக்குச்சித்தூரிகையில்
உன் வாழ்க்கையை
கோடு போட்டு காட்டும்
பிக்காசோவாக இரு.
பிய்ந்துபோன
காக்கைச் சிறகாக
கிடக்காதே.

===============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக