சனி, 11 ஜூலை, 2020

காத்திருப்போம்

காத்திருப்போம்
========================================ருத்ரா


லட்சக்கணக்காய் பிணங்கள்
குவிய காரணம்
அந்த ஆர் என் ஏ ப்ரொடீன் என்வெலப்  தானே.
ஆமாம்
அதற்கு என்ன இப்போ?
கண்ணுக்கே தெரியாத‌
அந்த நுண்ணிய 
நேனோ ஒலிம்பிக்ஸ் திடலில்
புகுந்து ஓட‌
யார் முன் வருவது?
அந்தப்போட்டியில் வெல்ல‌
மனித மூளையின் 
நுண்ணறைகளுக்குள்
பயணிக்க‌
கோடி கோடி டாலர்கள்
குவித்தால் 
உடனே மருந்து கிடைக்கலாம்.
மானிட நேயம் எனும்
ஒரு உந்து விசையும் அந்த‌
ஆராய்ச்சிகளின்
ஆரண்யங்களுக்குள் 
நுழைந்தால்
இந்த மனித சவங்களின் 
குப்பைமேடாக‌
இந்த உலகம் ஈ மொய்த்துக்கிடப்பதை
தடுக்கலாமே.
பார்க்கலாம்.
தடுப்பூசிக்கே
பஞ்சாங்கம் ஜோஸ்யம் எல்லாம்
பார்த்துவிட்டுத்தான்
அரம்பிக்கவேண்டும்
என்று 
விஞ்ஞானிகள் நினைக்கமாட்டார்களே.
உள்ளுக்குள்
புகையும் வர்த்தகநெடியும்
இந்த மனிதர்கள் பிழைப்பதால்
நம் பணங்காய்ச்சி மரங்களில்
என்ன மகசூல் வந்து விடப்போகிறது?
என்ற லாப அரசியலும்
எங்கோ எதிலோ
ஒளிந்து கிடந்து
அந்த வைரஸ்களையும் விட‌
மோசமான வைரஸ்களாய்
நம்முள் ஊடுருவியிருக்குமோ
என்ற 
கவலையும் அச்சமும் தான்
செத்துப்போன‌
அந்த மில்லியன் ஆண்டுகள்
பழமையான டைனோசார்களையும் விடவும்
பயங்கரமாய் 
உறுமல் இடுவது தான்
ஊடகங்களில் 
கிடுகித்துக் கொண்டிருக்கிறது!
"சமுதாய மானிடத்தின்" பொதுமை நீதி
கல்லறைக்குள்
கண் மூடிக்கிடக்கிறது போலும்.
இருப்பினும்
அந்த ஒற்றை விஞ்ஞானி
எங்கேனும் இருப்பான்
இந்த உலகத்தைக் காத்து நிற்க.
கோடி கோடி நம்பிக்கையுடன்
அவனுக்கு பூச்செண்டு நீட்டக்காத்திருப்போம்
ஆயிரக்கணக்கில் தினமும்
நாம் நமக்கு மலர் வளையங்களுக்கு
ஆர்டர் செய்த போதும்.

================================================














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக