திங்கள், 27 ஜூலை, 2020

ரஜினியின் அரோஹரா

ரஜினியின் அரோஹரா
____________________________________ருத்ரா

தமிழ்நாட்டைப்பார்த்து
ரஜினி
அரோஹரா சொல்லிவிட்டார்.
இனி
இவருக்கு
முதலமைச்சர் நாற்காலி
"கோவிந்தா கோவிந்தா"தான்
என்று தமிழ் மக்கள்
சொல்லிவிடுவார்களோ
என்ற ஐயம் எழுந்திருக்கிறது.
(அவரே வேறு யாரையாவது தான்
இழுத்து வைப்பேன் என்று
சொல்லியிருக்கிறார்.)
மதிப்பிற்குரிய
இன்னொரு (சூப்பர் இல்லாத) ஸ்டார்
எஸ் வி சேகர் அவர்கள்
ரஜினி நினைத்தால் பத்து நாளில் ஆகிவிடுவார்
என்றிருக்கிறார்.
ஆனால் அவரால் நினைக்கத்தான் முடியாது
என்று அர்த்தம்.
இதுவும் "எஸ் வி சேகர்" பாணி காமெடி தான்.
எது எப்படியோ?
சினிமா ஹீரோயிஸம்
எனும் அட்டைக்கத்தி நிழல் தான்
நம் தமிழ் நாட்டு மக்களை
பிடித்திருக்கும் கிரகணம்.
சாஸ்திரப்படி கிரகணம் விட்டால் தானே
சாப்பிடமுடியும்.
எனவே ஜனநாயகம் இங்கே பட்டினி தான்.
பஞ்சாங்க பூமியல்லவா நம் நாடு!
"வறுமையின் தத்துவம்" சொல்வார்கள்.
ஆனால்
"தத்துவத்தின் வறுமை"என்று
அறிவுப்பசி எடுத்து
என்றைக்கு சொல்லத்தொடங்குகிறார்களோ
அன்றைக்கு இங்கே
அரிதாரங்கள்
அவதாரங்கள் ஆக முடியாது.

____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக