செவ்வாய், 21 ஜூலை, 2020

அஜந்தாக் குகை ஓவியம்

அஜந்தாக் குகை ஓவியம்
=========================================ருத்ரா

வீட்டுச்சுவருக்குள்
விரிசல்கள்.
வானத்தில் மின்னல்கள் போல.
இடைவெளிக்குள் 
பக்கத்து வீட்டு தென்னங்கீற்றுகள்
தூரிகை அசைக்கும்.
பொறியாள நிபுணரிடம் கேட்டேன்.
அடி மண் அதிருகிறது
என்றார்.
என்ன செய்யலாம் என்று கேட்டேன்.
இடித்துவிட்டு...
அவர் முடிக்கவில்லை
என் இதயம் சுக்கல் நூறாய் ஆனதுபோல்
நொறுங்கி விட்டேன்.
வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
பழுது பார்க்கலாமா சார்?
ஈனஸ்வரத்தில் முனகினேன்.
ஆமாம் சார்.
பண்ணலாம்.
ஒரு புது வீடு கட்ற செலவு ஆகும சார்.
என்ன பண்ண சொல்றீங்க?
எங்க அப்பாவுக்கு
இதய மாற்று அறுவை செய்யவேண்டும் 
என்று டாக்டர் சொன்னார்.
செலவு லட்சக்கணக்கில் ஆகும் என்றார்.
இதற்காக‌
"உங்கள் தாத்தாவை இன்னொரு அப்பா
பெத்துக்கொள்ளச்சொல்லி
வாங்கிக்கிறது தானே என்று
அவர் சொல்லவில்லை.
சார்..இது ரிப்பேர் இல்லை சார்.
என் வீடு எனும்
இதயத்துக்கு 
இதய மாற்று அறுவை சிகிச்சை" சார்.
எப்படியாவது சரி பண்ணிக்கொடுங்க..
நா தழு தழுத்தேன்.
கவலைப்படாதீங்க.
என் உதவிப்பொறியாளரை அனுப்புகிறேன்.
சரி பண்ணிடலாம் என்றார்.
என் வீட்டுச்சுவர்க்கீறல்களைப்பார்க்கிறேன்.
ஆம்..
அது எவ்வளவு அழகாக இருக்கிறது
"அஜந்தாக் குகை ஓவிய வரிகளைப்போல்!"

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக