புதன், 22 ஜூலை, 2020

சுஜாதா ஓட்டம்


சுஜாதா ஓட்டம்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________ருத்ரா

நான்
கவிதை எழுதுவதை விட‌
சுஜாதாவின் பேனா
தானாகவே கவிதை எழுதத்துவங்க‌
அதன் பின்னாலேயே
நான் ஓடினால்
எப்படியிருக்கும்?
இதோ
அவரது விசைப்பலகை
இயங்கத்துவங்கி விட்டது
_____________________________
‍‍‍‍‍
‍‍‍‍‍‍

கோப்பை நிறைய நுரை

உமர்கயாம் உதடு
கோப்பையை ஸ்பர்சித்தது.
காதலைச் சுவைத்தது.
முத்தங்களை முற்றங்கள் ஆக்கி
மல்லாந்து கொண்டது.
"எழுதிச்செல்லும் விதியின் கையில்"
ஒரு கரும்பு வில்.
தத்துவம் நொதித்ததில் வந்த‌
நுரை எழுத்துக்களில்
கரையும் உடைந்தது
___________________________

அல்காரிதம்.

என் தாயின் கருப்பையில்
என் அல்காரிதம்
பிஞ்சுக்காலாய்
அம்மாவின் வயிற்றை
எம்பி உதைத்தும்
அம்மாவின் அடிவானம்
எல்லாம்
இனிப்பு இனிப்பு
இனிப்பு மட்டும் தான்.

‍‍‍‍‍_______________________

மலைப்பாம்பு

சி என்றும்
சி ப்ளஸ் ப்ளஸ் என்றும்
பைத்தான் வரை வந்து
கணிப்பொறி
விழுங்கிக்கொண்டே இருக்கிறது.
நம் நாட்டில் வந்து
எப்படி அது
ஜனநாயகத்தைக்கூட‌
விழுங்கி விட்டு
அசையாமல் கிடக்கிறது?

______________________________

புரியாததிலிருந்து..

ஆம்
புரியாததிலிருந்து
புரிந்து கொள்ளும் வரை
இந்த பிரபஞ்சம்
வீங்கிக்கொண்டு தான்
இருக்கிறது.
இந்த "இன்ஃப்லேஷன் தியரியின்"
திரி முனையில்
பிரம்ம சூத்திரமும் ந்யாய வைசேஷிகமும்
ப்ரேன் காஸ்மாலஜியில் நிரவியிருக்கிறது.

_______________________________________

என்னால் இதற்குமேல்
ஓடமுடியவில்லை.
மண்டைக்குள்
நண்டுகள் பிறாண்டுகின்றன.

‍‍‍‍‍‍==============================================


 =

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக