திங்கள், 27 ஜூலை, 2020

கரை

கரை
===================================ருத்ரா.

தட்டுங்கள் திறக்கப்படும்.
தட்டினேன் திறந்தது.
தெரிந்தது
கடவுளா? அறிவா? அன்பா?
இல்லை
மூன்றிலும் கொஞ்சம் கொஞ்சம்
பிய்த்து ஒட்டி
அது
கடவறின்பா?
சரி தான்.
திருப்பி திருப்பி
அதைச்சொல்லிப்பார்க்கிறேன்.

என்ன கதவைத்தட்டித் திறந்தாயே?
எல்லாம்
பார்த்துவிட்டாயா?
ஆமாம் எல்லாம் பார்த்துவிட்டேன்.
நான் ஞானி என‌
அழைக்கப்பட்டேன்.

என்னை
எல்லோரும் வணங்கினார்கள்.
நான் கை கூப்பவில்லை.
என்னிடம்
சங்கீதம் பாடினார்கள்.
வசனங்கள் பொழிந்தார்கள்.
என் காதுகளில்
எதுவும் விழவில்லை.
"கடவறிவன்பு"...
இதன் ஒலி
ஓங்கி ஓங்கி ஒலித்தது.
கடவறிவன்பு...
இது வெறும் உளறல்.
அர்த்தம் இல்லாத ஒலி.
இது கடவுள் இல்லை.
இல்லை இல்லை
இது தான் கடவுள்.
இது.ல் ல்லை
இல்லை.
இல்லை இது.
இது இல்லை.
இது..ல்ல்ல்..ல்ல்லைலை..
சரிதான்.
இது தான் முற்றிய பைத்தியம்.
இல்லை
இது தான் முற்ற்றிய தெய்வம்...
நான் ஒலிப்பது
புது மந்திரமாய்
அவர்களை வசியம் செய்தது.
கொப்பறை கொப்பறையாய்..
என் மீது மெழுகை ஊற்றினார்க‌ள்.
என் மீது தீபம் ஏற்றினார்கள்
இது எரிகின்றது.
இது உருகுகுன்றது..
எரிந்து எரிந்து......கேள்வி.
உருகி உருகி.........பதில்
மீண்டும்  கேள்வி
மீண்டும் பதில்..
பதில் பதில் அல்ல.
அது மீண்டும் கேள்வி..
எது கடல்?
எது கரை?
கடவுள் இன்னும்
கரை ஏறவில்லை.

=========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக